தீ பரவுகிறது!

 இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது. 

தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு பற்ற வைத்த இந்த மொழிப்போர் தீ சர்வதேச அளவில் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பொறாமை.. நம்ம கன்னடிக மக்களுக்கு இதே தெளிவு 10% ஆவது இருக்கணும். இங்கே உள்ளவர்கள் ஸ்டாலின் போல இப்படி பேசுவது இல்லை, என்றுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு 20 வருடங்களுக்கு முன் கொண்டு வந்த பழைய சட்டம் ஒன்றை மற்ற மாநிலங்கள் அடுத்தடுத்து அவசரமாக நிறைவேற்ற தொடங்கி வருகின்றன. 


அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் CBSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். CBSE தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இன்னொரு பக்கம் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது.தெலங்கானா அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என அறிவித்து உள்ளது.


இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும்.


தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடம். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006ன் படி, அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்படியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் 5. இக்கொள்கை 2015-16ஆம் கல்வியாண்டு முதல் வகுப்பு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, காலப்போக்கில் உயர் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வகுப்பு I முதல் X 1 2 வரையிலான மாணவர்களுக்கு கட்டாய மொழி.


இருப்பினும், மொழிச் சிறுபான்மையினராக உள்ள மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பில் தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதால், அவர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன.


மேலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை

ஏனெனில் இந்தப் பள்ளிகள் வேறு பாடத்திட்டம் 6ஐப் பின்பற்றுகின்றன.

சிபிஎஸ்இஐ இதில் சேர்த்தால் அந்த சட்டம் கோர்ட்டில் நிற்காது என்பதால் தமிழ்நாடு அரசு சுதாரித்து கவனமாக சட்டம் கொண்டு வந்தது. இதே சட்டத்தை தற்போது சிபிஎஸ்இஐ சேர்த்து 20 வருடங்களுக்கு பின் மற்ற மாநிலங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?