காலிஸதான்-பாகிஸ்தான்.

 1984 அக்டோபர் 31 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். 

இந்தியா கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது. ஒரு நாட்டின் பிரதமர் அவரைப் பாதுகாக்க வேண்டிய நம்பிக்கைக்குரிய நபர்களாலேயே, அவரது வீட்டு வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டது கண்டு உலகமே அதிர்ந்தது.

 இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற அவரது பாதுகாவலர்களான பியாந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் சீக்கிய மதத்தினர் என்பதால், இந்தப் படுகொலை இந்தியத் தலைநகரத்திலும் பிற பகுதிகளிலும் மதவெறிக் கலவரமாக மாறியது.

டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் கோவை போன்ற நகரங்கள் வரை சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.பி.க்களுமே இத்தகைய வன்முறையைத் தூண்டிவிட்டனர்.

 நேரடியாகப் பங்கேற்றவர்களும் உண்டு. பிரதமர் இந்திராகாந்தியைக் கொலை செய்த இருவரில் ஒருவரான பியாந்த் சிங் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 மற்றொரு கொலையாளியான சத்வந்த்சிங்கும், கொலைக்குத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கேகர் சிங்கும் விசாரணைக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.

காலிஸ்தான் தனி நாடு கேட்டு போராடிய பிந்தரன்வாலேவையும் அவரது படையினரையும் சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளச் செய்தார் இந்திரா காந்தி.

மோடி இதனால்தான் சீக்கியர்கள் அவர் மீது கோபம் கொண்டு, கொலை செய்தனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கோ, கொலைக் குற்றத்துக்கோ சிறிதும் தொடர்பில்லாத அப்பாவி சீக்கியர்கள், இந்திராகாந்தி படுகொலையான நாளில் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். 

பிரதமர் பொறுப்பை ஏற்ற இந்திராவின் மகன் ராஜீவ்காந்தி, “பெரிய ஆலமரம் வீழ்த்தப்படும்போது, அதன் கீழ் உள்ள தாவரங்களும் பாதிக்கப்படும்” என்று சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்து தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

எமர்ஜென்சிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் மீதான கடும் அதிருப்தியை உண்டாக்கிய நிகழ்வு, சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். இது தொடர்பான விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.

 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதலிலும் கொலைகளிலும் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 

சஜ்ஜன் குமாருக்கு தற்போது 80 வயதாகிறது. அவர் ஏற்கனவே, சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்பான மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். ஒரு சீக்கியக் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, கணவனை உயிரோடு எரித்து, மனைவி மீது தாக்குதல் நடத்தி, வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் மீதான விசாரணையில்தான் 40 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

பாதிப்படைந்த குடும்பத்தினரும், சீக்கிய சமுதாய அமைப்புகளும், முன்னாள் எம்.பி.க்கு மரண தண்டனை அளிப்பதுதான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நியாயமாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெல்லியிலும் பிற பகுதிகளிலும் சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியது.

 பஞ்சாபில் அமைதி நிலவுவதற்கும் சீக்கிய சமுதாயத்தின் உரிமைக்காகவும் பல திட்டங்களை முன்வைத்தது. சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பிரதமராக நியமித்தது.

 நீதிமன்றத்திலும், ஜனநாயக இயக்கத்திலும் நீதி என்பது தாமதமாக வெளிப்பட்ட நிலையில், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி பிரதமராக இருந்தபோது நடந்த முஸ்லிம்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு என்ன நீதி என்ற கேள்வி எழுகிறது.

அயோத்தியில் கரசேவைக்காக சென்று திரும்பிய இந்துத்வா அமைப்பின் பயணிகள் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில், ரயிலோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

ஏறத்தாழ இரண்டு நாட்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தாக்குதலுக்கும் உயிரிழப்பிற்கும் உள்ளாகினர். பெஸ்ட் பேக்கரி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு உள்ளிட்ட குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை வெளிப்படையாகவே காப்பாற்றியதில் பா.ஜ.க.வுக்கு முதன்மையான பங்கு உண்டு.

 முஸ்லிம்களைக் கொன்றவர்களை தேசபக்தர்களாகக் கொண்டாடுகின்றனர் இந்துத்வா அமைப்பினர்.

காங்கிரஸ் செய்த தவறுக்கு பரிகாரமாக சீக்கிய மதத்தவர் பிரதமரானார். பா.ஜ.க.வோ முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு ஓடு என்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?