வாழ்த்து வேணுமா?வாழ்த்து!
தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் ஆரிய,பார்ப்பணப் புத்தாண்டு பிறந்துள்ளது
பலர் மகிழ்வுடன் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். எனக்கு வாழ்த்து(என்னைப் பற்றித் தெரியாமல்)தெரிவிக்க முயன்றவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.
எத்தனை ஆண்டுகள் நீங்கள் கூறும் தமிழ்ப் புத்தாண்டில் உள்ளது!
தெரியவில்லை.!பத்து,இருபதோ?
மொத்தம் அறுபதாண்டுகள்.இப்போது பிறந்துள்ள ஆண்டு விஸ்வாச.
சரி.வாழ்த்துகள்.!
இருங்க.அறுபது ஆண்டுகளும் நமக்கு அதாவது தமிழர்களுக்குத் தெரியாத சமஸ்கிர்தப் பெயர்களாக உள்ளதே.ஒரு தமிழ்ப் பெயர் உள்ளதா?
ஒன்று கூடவா தமிழ் இல்லை
ஆம்.அறுபது ஆண்டுகளில் ஒன்று கூட தமிழில் பெயரில்லாதது எப்படி தமிழாண்டாக இயலும்.?மாதங்களிலும் பல வடமொழிதான்.
ஆர்யர்கள்பார்ப்பணர்கள் தமிழர்கள் மீது திணித்தவையே தமிழ் தாங்கள்,ஆண்டு போன்றவைகள்.
சரி.ஆண்டுகள் உருவன கதை அதை விடக் கேவலமானது.அசிங்கமானது.அதை கொண்டாடி வரும் நம்மவர்களை என்னச் சொல்வது?
"அப்படி என்ன கதை?"
நாரதர் என ஒருவர் புராணங்களில் வருவாரே.அவர் விஷ்ணு பெண் வடிவம் கொண்டபோது அவர்மீது காதல் கொண்டாராம்.காதல் என்பதை விட காமம் என்பதே சரி.நாரதர் திருமணமாதவர்.சரி என்று விஷ்ணுவும் சம்மதிக்க அசிங்கம் நிறைவேறியது.புராணக் கதைபடியே உடனே குழந்தை உருவாக அக்கணமே பிறக்க.அதுவும் அறுபது.(பிண்டம்,மீண்டும் என்று கதை நீளும்)
அறுபது குழந்தைகளுக்கும் சிரம்ம் பாராமல் பெயர் வைத்து விட்டு அவைகளை அநாதைகளாக விட்டு,விட்டு விஷ்ணு ஆணாகி தன்வழியே போய்விட.ஆசைதணிந்த நாரதர் அவர் வழியில் நாராயணா,நாராயணா என்று போய்விட அநாதையாக விடப் பட்ட அறுபது குழந்தைகளும் தமிழ் ஆண்டுகளாக தமிழர் தலைமீது உட்கார்ந்து விட்டன.
இதுதான் தமிழ்ஆண்டுகள் அறுபதின் கதை.
இப்போ சொல்லுங்க.இந்த அணிங்கப் பிடித்த ஆண்டு பிறப்புக்கு வாழ்த்த வேண்டுமா?தழிழ்த் தையை கொண்டாட வேண்டுமா?
"புத்தாண்டு வாழ்த்து சொன்னது குற்றமாய்யா?
தெரியாம வாழ்த்து சொல்லிட்டென்!"
பரவாயில்லை.தை முதல் தேதி வாழ்த்துங்க!என்று அவரை அனுப்பினேன்.விட்டால் போதும் என அவரும் ஓட்டமும் நடையுமாக நகர்ந்தார்.

