பதவி நீக்கம்.
உடனடியாக சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா 30 நாள் கெடு: இல்லாவிட்டால் வெளியேற்றம்: டிரம்ப் அதிரடி.
தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க தமிழக அரசு முடிவுஆளுநர் பதவி நீக்கம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார்.உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
*தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
*5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட உள்ளது. செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிகை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் அமைச்சர் சாமிநாதன்.
*ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இனி கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என பகுஜன் சாமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
*அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
*தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அரசு அளிக்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மீன்வர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
*டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகாவில் நள்ளிரவில் இருந்து லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
"*அதிமுகவை விமர்சிக்கும் போது விஜய் நிதானத்தை கையாள வேண்டும். புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் அதனை பலப்படுத்தி வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்" என முன்னாள் அதிமுக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
*தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியானது.
*5 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
*முதலமைச்சர் நிவாரணம்: கடலூர் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
*பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளது. கோடைகாலத்தில் ஏராளமான மக்கள் வெளியூர் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவர்த்து கழகம் முடிவு செய்துள்ளது.
*தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவலர் விக்ராந்த் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் வசந்தாவை கொன்று 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
*கடலூர் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.








