இன்னும் என்னச்

செய்யப் போகிறார்?

மகாராஷ்டிராவில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காக மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் .

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.

இந்நிலையில், பிரதமர் அவர்களும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்:


1) தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் பட்னாவிஸ் அவர்களின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?


2) தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?


3) மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்குமா?


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் தொடக்கப் பள்ளிகளிலும் 3-வது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதற்கு மகாராஷ்டிராவில் மக்களிடையேக் கடும் எதிர்ப்பு எழுந்தது. மராத்தி மொழியை அழிக்கும் வகையில் இந்தி திணிப்பை மேற்கொள்வதா? என கண்டனங்கள் குவிந்தன.


இதனையடுத்தே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அம்மாநிலத்தில் இந்தி மொழி கட்டாயம் அல்ல- மராத்தி மொழிதான் கட்டாயம் என உத்தரவிட்டார். இதனை முன்வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். 

கடந்த 16ம் தேதி சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஒரேயடியாக 245 % உயர்த்தப்பட்டது. அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், அதிலிருந்து விடுபடுவதற்காக, அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

 வரி விலக்குகள் பெறுவதற்காக சீனா உடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனாவுக்கு எதிராக செயல்படக் கூடாது என டிரம்புடன் வர்த்தக உடன்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்திவரும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சக செய்திதொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘சீன நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கும் அதன் வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், சீனா அதை ஏற்றுக்கொள்ளாது. 

அதற்கான எதிர் நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும்.

சீனாவின் நலனை கருத்தில் கொள்ளாமல், அமெரிக்காவுடன் எந்த ஒரு நாடும் ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்போம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு தக்க எதிர்வினையாற்றப்படும் என்று எச்சரித்துள்ளார்.


2025-26ல் புதிய பாடத்திட்டத்துடன் சிபிஎஸ்இ பள்ளிகளில் நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் சுற்றறிக்கை
அடுத்த 1000 ஆண்டுகளை நிர்ணயிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற பாடுபடுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
(13 ஆண்டு முடிவுகளிலேயே இந்தியா தள்ளாடுகிறது.இன்னும் 987ஆண்டுகள்?)
"மராத்திதான் கட்டாயம் "இந்தி கட்டாய பாடம் இல்லை: மகாராஷ்டிரா முதல்வர்.

தேர்தல் ஆணைய கொள்கை?

மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஏதோ தவறு உள்ளது என அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 

நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்த அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வயதுவந்தோர் எண்ணிக்கையை விட அதிகமானோர் வாக்களித்தனர்.

 வாக்குப்பதிவு தினத்தில் மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையம் எங்களுக்கு தந்த வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் தந்த எண்ணிக்கைக்கும் இடையே 65 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. 
டைமுறைப்படி இது சாத்தியமில்லாதது. ஒரு வாக்காளர் வாக்களிக்க குறைந்தபட்சம் 3 நிமிடமாவது ஆகும். அதன்படி கணக்கு செய்து பார்த்தால் நள்ளிரவு 2 மணி வரை வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதுதொடர்பாக வீடியோ பதிவை நாங்கள் கேட்ட போது, அவர்கள் மறுத்தது மட்டுமில்லாமல், அதற்கான சட்டத்தையும் மாற்றிவிட்டனர். அதனால் இப்போது எங்களால் வீடியோ பதிவை கேட்டு பெற முடியாது. அதற்கு அனுமதியில்லை.

 இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது. 

தேர்தல் ஆணையத்திடம் ஏதோ தவறு உள்ளது. இதை நான் பலமுறை கூறி உள்ளேன். இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் 2 நாள் பயணத்தில் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் பங்கேற்கிறார்.

* தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா, ‘‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது.

 தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பற்றி எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது. வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் வாக்குப்பதிவில் 10 முதல் 13 சதவீத புள்ளிகள் அதிகரிப்பது மனித ரீதியாக சாத்தியமில்லை” என்றார்.

* வெறுப்பு எண்ணங்களை பகிர்கிறார்: தர்மேந்திரபிரதான்
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது கட்சியின் தொடர்ச்சியான தோல்விகளால் விரக்தி அடைந்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளாகி உள்ளார். 

ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கும்போதெல்லாம் இந்தியா மற்றும் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீதான தனது வெறுப்பு எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு தவறுவதில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” என்றார்.

* சோனியாவும், ராகுலும் சிறைக்கு செல்வார்கள்
பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘‘அமலாக்கத்துறையின் மீதான கோபத்தை தேர்தல் ஆணையத்தின் மீது வெளிப்படுத்துகிறீர்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக எதுவும் நடக்காது.

 அமலாக்கத்துறை உங்களை விட்டுவிடாது. ஏனென்றால் ஏஜென்சிகள் உண்மையின் அடிப்படையில் செயல்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு விவகாரம் ஒரு திறந்த வழக்கு. நீங்களும், உங்கள் தாயும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்.

 நீங்கள் ஒரு துரோகி. இந்திய நிறுவனங்களையும், இந்திய ஜனநாயகத்தையும் வெளிநாட்டு மண்ணில் அவமதித்ததால் மட்டுமல்ல. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீங்களும் உங்கள் தாயாரும் கோடிக்கணக்கான ரூபாய் நாட்டின் பணத்தை மோசடி செய்துள்ளதாலும் கூட நீங்கள் துரோகி தான். 

நீங்களும் உங்களது தாயாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை