கற்காலம் நோக்கி..,?

நிதி உதவி நிறுத்தியதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு.

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24  மணி நேர உதவி மையம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை.
கற்காலம் நோக்கி..,?

இந்தியாவின் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறோம் என்று பிரதமர் மோடி தில்லியில் திங்களன்று நடந்த குடிமைப் பணி தின விழாவில் பேசியிருக்கிறார்.

 அவர் சொல்வது இனிவரும் ஆண்டுகளை நோக்கியல்ல, பின்னோக்கி மநுகாலத்தை நோக்கி என்பதைத் தான் இவரது ஆட்சி நாட்டு மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது

இவரது எஜமான அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் இலக்கான இந்துராஷ்டிரம் அமைப் பதற்கான வேலைகளிலேயே இறங்கியிருக்கிறது பாஜகவின் ஆட்சி.

 இந்திய விடுதலைக்குப் பின் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கும் போதே அதை எதிர்த்த கூட்டம் தான் ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை. மநுவின் சட்டங்கள்தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக வேண்டும் என்று கொக்க ரித்தவர்கள்.

அரசமைப்புச் சட்டம் கூறும் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை குழி தோண்டிப் புதைப்பதாகவே, இவரது ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது. 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மநுவையும் சாணக்கியனையும் செங்கோலையும் இடம் பெறச் செய்தது அதன் பிரதிபலிப்பே.

நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று கூறு வதை ஏற்காத நால்வருண சாதியமைப்பை, சனா தனத்தை, பிராமணிய மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்காகவே பல வகையிலும் முயற்சிக்கின்ற னர். 

மதச்சார்பின்மையைக் கைவிட்டு அரசு மதம் சார்ந்த நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மோடியோ, ராமர்கோவில் பூசாரி போலவே நடந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புப் பேச்சுக்களில் பிரதமரே நேரடி யாக ஈடுபடும் அத்துமீறல் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. 

அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட வேண் டும். நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஒவ் வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்று உபதேசம் செய்துள்ளார்.

மதரீதியிலான, இனரீதியிலான ஒதுக்குதல், ஒடுக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொ ண்டு ஒற்றுமையைப் பற்றி பேசுவது நகைப்புக்குறியதல்லவா?

 நேர்மையைக் கடைப்பிடித்த குஜ ராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் போன் றோரின் கதி என்னவானது?நாட்டு மக்கள் மறந்தா போய்விட்டார்கள்?!

சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கு வழங் கப்பட்ட கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டு, அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் தர மான கல்வி கிடைக்க வேண்டும் என்று கூறுவது நேர்மையான நடவடிக்கையா? 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தலைவர், ஒரே தேர் தல் என்று கூறி பழங்காலத்திய மன்னராட்சி போன்று இந்து மத நாடாக்க முயற்சிப்பதுதான் அடுத்த ஆயிரமாண்டுக்கான அடித்தளம் என்றால் அதை  மக்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

எப்படித்தான் சமாளிப்பதோ?

பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக – பாஜ கூட்டணியை எதிர்க்கும் மூத்த நிர்வாகிகளை சமாளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜ தனித்தனியே சந்தித்து பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக ஒருபோதும் பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில் பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியை ஒரு சில தலைவர்கள் ஆதரித்தாலும், பெரும்பாலான தலைவர்கள், நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் மே 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. 

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜ கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு இன்று (23ம் தேதி) சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 பாஜவுடனான கூட்டணிக்கான எதிர்ப்பை சமாளிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து,இனிப்புப் பெட்டிகள்(?) தருகிறார் என கூறப்படுகிறது.

 இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அத்துடன் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பாஜ கூட்டணிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கவே முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து,கவனிப்பும்(? )என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இதனால் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை