வெட்கமும் வருத்தமும் படவேண்டும்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது: முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். அறிவுறுத்தல்.
அதிமுக நிலைப்பாடு, செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமை அனுமதி பெறாமல் டிவி, பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க கூடாது'பழனிசாமி உத்தரவு.
'பணம், மதுபானம், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் மறுஜென்மத்தில் மிருகமாகத்தான் பிறப்பார்கள்’ என ம.பி,பாஜகட்சி எம்எல்ஏ உஷா தாக்கூர் சாபம்.விமர்சிப்பவர் யார்?
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்து துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் கடுமையாக விமர்சித்தார்.
”நீதிபதிகள் சூப்பர் பார்லிமென்டாக செயல்படுகிறார்கள். அரசியலமைப்பின் அதிகாரத்தை நீதிபதிகள் மறந்துவிட்டனர்” என்று ஜெகதீப் தங்கர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கரின் கருத்து நெறிமுறையற்றவை என்று திமுக துணைத் தலைவர் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறு திருச்சி சிவா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“அரசியலமைப்பின் படி அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதன் கீழ், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இவை மூன்றும் அவற்றின் தனித்த அடையாளங்களில் செயல்படும்போது அரசியலமைப்பு உயர்ந்தது என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது.
பிரிவு 142-ல் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதே ஜெகதீப் தன்கரின் ஆளுநர் பதவிகாலத்தில் ஆர்.யன் ரவி போன்றே அமைச்சரவைக்கு தேவையற்ற குடைச்சல்கள் கொடுத்தார்.ஆளுநர் வரம்பை மீறி நடந்து கொண்டார்.தற்போதும் இவரது நடவடிக்கைகளால. மாநிலங்களவையில. இவர் மீது நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது.
வெட்கமும் வருத்தமும் படவேண்டும்.ஆளுநரின் அதிகாரம் குறித்த தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை நிராகரிப்பதற்கான வீட்டோ பவர் ஆளுநருக்கு கிடையாது என்பதையும், சட்டமசோதாக்களுக்கு ஏற்பளிக்காததும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு அரசின் வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்களின் அதிகாரத்திற்கு கடிவாளம் போட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பின்போது, ‘மிக விரைவில்’ ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்கிற அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில், அந்த மிக விரைவில் என்பதற்கான கால வரையறையைத் தெளிவாக்க வேண்டிய அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், ஜனாதிபதியிடம் ஒரு மசோதா எவ்வளவு காலத்துக்கு இருக்கலாம் என்பது குறித்தும் காலவரையறை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீர்ப்புகளில் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அதிர்வும், மாநில அரசுகளுக்கு அது தந்துள்ள நம்பிக்கையும் விவாதிகக்கப்பட்டு வரும் நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவு மேலும் பல நம்பிக்கைகளை உருவாக்கி, இந்தியாவை ஆளுந்தரப்புக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புகளின் சொத்துகளை நிர்வகிப்பது வக்ஃப் வாரியம். இந்தியா முழுவதும் இதற்கு சொத்துகள் உள்ளன. அதனால், வக்ஃப் சொத்துகள் மீது மத்திய பா.ஜ.க. அரசு ஆதிக்கம் செலுத்தும் முடிவுடன் வக்ஃப் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது.
இதற்கு நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தே எதிர்ப்பு வந்தபோது, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது.
வக்ஃப் சட்டத் திருத்தம் தேவையற்றது என்பதை குழுவில் இருந்த மற்ற கட்சி உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்பினரும், பொதுவான அமைப்பினரும் தெரிவித்தபோதும், பா.ஜ.க. அதனைப் புறந்தள்ளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் அதனை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததால் வக்ஃப் திருத்த மசோதா, புதிய சட்டமாக ஆனது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு சாதகமாக இருந்த நிலையில், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் அமைப்புகள் என நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் சில முக்கியமான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பா.ஜ.க. அரசின் வழக்கறிஞரை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பியது.
வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, முஸ்லிம் சொத்துகளுக்கான வக்ஃப் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினராக நியமிக்கலாம். வக்ஃப் பொறுப்பில் உள்ள சொத்துகளை வேறு வகையாக அடையாளப்படுத்தலாம். இது குறித்து உச்சநீதிமன்ற விசாரணையின்போது, “இந்து கோவில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்களை உறுப்பினராக நியமிக்க முடியுமா?” என்று உச்சநீதிமன்றம் கேட்டது.
பா.ஜ.க.வின் உள்நோக்கத்தை இந்தக் கேள்வி அம்பலப்படுத்தியது. இந்த நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமித்தல், வக்ஃப் சொத்துகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
நீதியின் இந்த இரட்டைத் தாக்குதலை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில்தான், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு நிகழ்வில் பேசும்போது, இந்திய அரசமைப்பின் தலைவராக உள்ள குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு போட முடியுமா?
நீதிபதிகள் தங்கள் அதிகாரத்தை அணுகுண்டு போல பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்திய நீதிமன்றங்களில் நியாயத் தீர்ப்புக்கான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகே நிலைநாட்டப்படுகிறது.
நாடாளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் அதிகம் குறுக்கிடுவதில்லை. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை. எனினும், அரசியல் சட்டம் சார்ந்த விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கான அதிகாரம் உண்டு என்பதை சட்ட நிபுணர்கள் உறுதி செய்கிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சி என்பது மினி எமர்ஜென்சி அல்லது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் போல இருப்பதால் குடியரசு தலைவருக்கு உத்தரவிட வேண்டிய சூழல் உச்சநீதிமன்றத்திற்கு அமைந்துள்ளது.
இதற்காக பா.ஜ.க. கோபப்படக்கூடாது. வெட்கமும் வருத்தமும் படவேண்டும்.





