உள்நாட்டு மொழிதான்!

 உருது மொழி வெளி உலக மொழி அல்ல என்றும் இந்த நாட்டில் பிறந்த மொழி என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

எனவே உருது மொழியை இந்திய மக்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம் காத்தூர் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள பெயர் பலகையில், உருது மொழியில் எழுத எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உருது மொழி வேற்று கிரக மொழி அல்ல, அது இந்த நாட்டில் பிறந்த மொழி, அதனை பயன்படுத்த எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மொழி மதத்தை குறிப்பது அல்ல ; மொழி ஒரு சமூகத்துக்கு, ஒரு பிராந்தியத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் “நாட்டின் பன்முகத்தன்மை மகத்தானது -அதுவே நமது பலம், பன்முகத்தன்மையை மதித்து மகிழ வேண்டும். 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 22 பட்டியல் மொழிகள் உள்பட 234 தாய் மொழிகள் உள்ளன. உருது மொழி இந்தியாவில் அதிகம் பேசப்படும் 6வது மொழி, “என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மட்டும் குளிர்ச்சிக்கு சாணியா?


பத்து லட்சத்துக்கு 15 மட்டும்.

இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால் 21 ஆயிரத்து 285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். 1987 சட்ட ஆணைய பரிந்துரைப்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

உயர்நீதிமன்றங்களில் இந்த ஆண்டில் நீதிபதி பணியிடங்களில் 21 சதவீத காலியிடங்கள் இருப்பது, அவர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்பட காரணமாக உள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள ஒரு நீதிபதி சராசரியாக 2 ஆயிரத்து 200  கவனிக்கிறார். அலகாபாத் மற்றும் மத்திய பிரதேச  ஒரு நீதிபதி தலா 15 ஆயிரம் வழக்குகளை .

மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பங்கு, 2017ல் 30 சதவீதத்தில் இருந்து 38.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, 2025இல் உயர்நீதிமன்றங்களில் 11.4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களை ஒப்பிடும்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. அங்கு 6 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். ஆனால் 15 நீதிமன்றங்களில் ஒரு பெண் தலைமை நீதிபதி மட்டுமே உள்ளார். 


அளவுக்கு மீறினால் பக்தியும் ஆபத்தே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை