ஜப்பானை, இந்தியா முந்திவிட்டதா?

 ரயில் ஓடும் போது மின்சார கம்பியிலிருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது, ரயில் டிரைவர் பிரேக் போடும்போது அந்த மின்சாரத்தை அதே கம்பிக்கே திருப்பி அனுப்புகிறது ரயில்-ஒன்றிய பாஜக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் .(இந்த அறிவாற்றல்தான் ரெயில்கள விபத்துகளே இல்லாமல் ஓடக் காரணம்?)

உலக வறுமை பட்டியலில் இந்திய முதலிடம்.ஐ.நா.சபை அறிக்கையில் அதிர்ச்சி தகவல். 
கேரளாவில் இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு.
சென்னை நுங்கம்பாக்கம் பாரில் குடிபோதையில் தகராறு : அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது.
குவார்டருக்கு ரூ.11ம், புல்லுக்கும் ரூ.47ம் அதிகரிப்பு புதுவையில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: புதுவைஅரசுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருமானம்.


காவடி அரசியல்?

இந்திய அரசியலில் தமிழ்நாடு எப்போதும் வித்தியாசமானது. இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பில் தொடங்கி, மாநிலக் கட்சியின் ஆட்சி உள்பட தமிழ்நாட்டின் அரசியல் தாக்கம் டெல்லியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. 

தி.மு.க.தான் இந்தியாவில் முதன்முதலாக மாநிலத்தில் ஆட்சியமைத்த மாநிலக் கட்சியாகும். 

அண்ணா முதல்வரான போது, இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதான் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. 

எனினும், பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் திட்டங்கள் குறித்து உரையாடினார் அண்ணா. அதன்பின், அண்ணா உடல்நலன் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, மாற்றுக்கட்சித் தலைவர் என்று நினைக்காமல், அமெரிக்காவுக்கு அரசு முறையாக சென்றிருந்த பிரதமர் இந்திராகாந்தி அண்ணாவை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலன் விசாரித்தார்.

அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க.வின் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதிதான் தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 

அவருடைய 19 ஆண்டுகால ஆட்சியில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லோரையும் அவர் சந்தித்து, தமிழ்நாட்டின் நலன் குறித்து உரையாடியிருக்கிறார். 

இதில் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் மட்டும்தான் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை. 

ஆனால், ராஜீவையும் பிரதமர் என்ற முறையில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை வரை கலைஞர் கருணாநிதி பேசினார்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மொரார்ஜி தேசாய், சரண்சிங், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்துள்ளனர்.

 டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் அவர்களுடன் இணக்கமான (காவடி)நிலைப்பாடு என்பதையே எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக கொண்டிருந்தார்.

 ஒரு மாதகாலம் மட்டுமே அதிகாரப்பூர்வ பிரதமராக இருந்த சரண்சிங் அரசுக்கும் எம்.ஜி.ஆர். ஆதரவளித்து தன் கட்சி சார்பில் பாலாப்பழனூர்,சத்தியவாணிமுத்து ஆகிய இரண்டு பேரை ஒன்றிய அமைச்சர்களாகவும் ஆக்கினார்.

ஜெயலலிதா நிலைப்பாடு என்பது அவருடைய மனநிலையைப் பொறுத்தது. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோர் அவருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளனர். 

இதில் மன்மோகன்சிங் அரசுடன் அவருக்கு கூட்டணியோ நல்லுறவோ இல்லை. நரசிம்மராவுடன் கூட்டணி இருந்தபோதே அவரை விமர்சித்துள்ளார். வாஜ்பாய் முதன்முதலாக ஜெயலலிதா ஆதரவுடன்தான் ஆட்சியமைத்தார்.

 அதன்பிறகு வாஜ்பாய் பட்டபாட்டை அவரே விளக்கியுள்ளார். 

குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது, அந்த மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு ஆதரவளித்த ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதாதான். 

அதே ஜெயலலிதா, மோடியா-லேடியா என்று கேட்டதும் உண்டு. எல்லாமும் அவருடைய தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள் சார்ந்தவையே.

எதிர்பாராத சூழலால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 4 ஆண்டுகளும் பிரதமர் மோடி அரசுக்கு கட்டுப்பட்டு நடந்தார். 

ஜெயலலிதா ஒப்புக்கொள்ளாத நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு அடிபணிந்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. 

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தன்னுடைய கிளைகளைப் பரப்புவதற்கு ஏற்ப, 50 ஆண்டுகால கட்சியான அ.தி.மு.க.வை பலி கொடுத்ததும் அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது.

தமிழ்நாட்டு முதலமைச்சர்களிலேயே தன்னுடைய நான்காண்டு கால ஆட்சியை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சியிலும் மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சி பா.ஜ.க வுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டுடன் அரசியல் நடத்தும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்.

 இதற்கு முன் தமிழ்நாட்டிலும் மத்திய அரசிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்த காலத்திலும் தமிழ்நாட்டைத் திட்டமிட்டு பழிவாங்கியதில்லை. 

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணிக்கின்ற நிலையில், மாநில உரிமைகளுக்காக சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது தமிழ்நாடு அரசு. 

மோடிக்கு எதிராக இந்திய அளவில் கூட்டணியை அமைத்ததிலும் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியத்துவமானது. 

இத்தகைய நேரடி எதிர்ப்பும் பழிவாங்கலுமே இதுவரை தமிழ்நாடு கண்டிராத நிலையில், பிரதமருடன் முதல்வர் சந்திப்பு நடத்தும் போதெல்லாம் அது அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்துகிறது.

நிதி ஆயோக் கூட்டம் என்பது முந்தைய ஒன்றிய அரசின் திட்ட கமிஷன் கூட்டத்தைப் போன்றது. 

அண்ணா முதல் ஜெயலலிதா வரை பல முதலமைச்சர்களும் அதில் கலந்துள்ளனர். 

ஒன்றிய அரசுடன் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிப்பது மரபு.

 சோஷியல் மீடியா உலகத்தில் அதெல்லாம் வெறும் மீம்ஸ். இவ்வளவுதான் இன்றைய அதிமுக,பாஜக எதிர்கட்சிஅரசியல்.


இந்தியப் பொருளாதாரம்  ஜப்பானை முந்திவிட்டதா?

இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்தி விட்டது என நிதி ஆயோக் முதன்மை அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் சர்வதேச நாணய நிதி அமைப்பின் (IMF) அறிக்கை கூறுவ தாக பெருமிதமாக அறிவித்துள்ளார்.

 பாஜக அர சாங்கத்தின் பல்வேறு கருத்தாக்கங்கள் கட்டமைப்பு போல இதனையும் இமாலய சாதனையாக ஊடகங்க ளும் சங் பரிவார அமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

ஆனால் உண்மையோ வேறு மாதிரி யாக உள்ளது. பொய்கள் எவ்வளவுதான் ஜெட் வேகத்தில் பரப்பப்பட்டாலும் உண்மையை அது மறைக்க முடிவது இல்லை. 

ஐஎம்எப் கூறுவது என்ன?

இப்பொழுதே இந்திய பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதாக ஐஎம்எப் கூறவில்லை. அதன் அறிக்கையை நிதி ஆயோக் முழுமையாக உள்வாங்கவில்லை அல்லது திட்டமிட்டே செய்தி யை திரித்து கூறுகின்றனர். நிதி ஆண்டை கணக்கீடு செய்யும் முறை இந்தியாவிற்கும் ஐஎம்எப்க்கும் வேறுபாடு உள்ளது. 

இந்திய கணக்குப் படி நிதி யாண்டு ஏப்ரலில் தொடங்கி அடுத்த ஆண்டு  மார்ச்சில் முடிவடைகிறது. ஐஎம்எப் நிதியாண்டு என்பது மே தொடங்கி ஏப்ரலில் முடிவடைகிறது. 

இந்திய கணக்கு படி நிதியாண்டு 2025 எனில் 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் ஆகும். ஆனால் ஐஎம்எப் இதனை காலண்டர் ஆண்டு 2024 என்றே அழைக்கிறது. அதன் படி 2025 மார்ச் வரை ஜப்பான் பொரு ளாதாரம் 4.03 டிரில்லியன் டாலராகவும் இந்திய பொருளாதாரம் 3.91 டிரில்லியன் டாலராகவும் இருக்கும்.

 காலண்டர் ஆண்டு 2025இல்தான் ஜப்பான் பொருளாதாரம் 4.186 டிரில்லியன் டாலரா கவும் இந்திய பொருளாதாரம் 4.187 டிரில்லியன் டால ராகவும் இருக்கும். இதன் பொருள் என்னவெனில் 2025ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு அல்லது 2026 மார்ச்சுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் ஜப்பானை முந்த வாய்ப்பில்லை.

 எனினும் மோடியின் பாஜக ஆட்சியில் இந்தியா ஜப்பானை முந்திவிட்டது என கருத்தாக்கம் கட்டமைக்க இப்பொழுதே அந்த சாதனை நிகழ்ந்துவிட்டது என முன்வைக்கப்படு கிறது. இந்திய மக்களிடம் பொய் பெருமிதம் உரு வாக்கும் செயல் இது எனில் மிகை அல்ல.

இந்தியா-ஜப்பான் ஒப்பீடு

ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை அளவிடுவ தற்கு பல அளவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜி.டி.பி. மதிப்பு. ஆனால் அது மட்டுமே முழு மையான அளவுகோல் அல்ல.

 ஒட்டு மொத்த அளவு கோலுடன் தனி நபர் சராசரி ஜி.டி.பி என்பதும் முக்கியம். ஒட்டு மொத்த ஜி.டி.பி.யில் இந்தியா இந்த ஆண்டு இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு ஜப்பானை முந்திவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

அதே போல இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உண்டு. எனினும் தனிநபர் சராசரி ஜி.டி.பி.யை ஒப்பிடும் பொழுது ஜப்பானுக்கும் இந்தி யாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

 ஜப்பானின் தனிநபர் சராசரி ஜி.டி.பி. 33,900 டாலர்கள். ஆனால் இந்தியாவின் தனிநபர் சராசரியோ 2,880 டாலர்கள். ஜப்பானின் மக்கள் தொகை 12.45 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஜி.டி.பி. என்பது அனைத்து மக்களின் உழைப்பால் விளையும் உற்பத்தியின் மதிப்பு.

 140 கோடி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும் 12 கோடி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பிற்கும் இயற்கையிலேயே வேறுபாடுகள் இருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகமாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு ஏ,  பி என இரு குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஏ குடும்பத்தில் உள்ள 10 பேர் 10 லட்சம் ஈட்டுகின்றனர். பி குடும் பத்தில் உள்ள 4 பேர் 8 லட்சம் ஈட்டுகின்றனர். ஒட்டு மொத்த வருமானத்தை கணக்கிட்டால் ஏ தான் பணக்காரக் குடும்பம். 

ஆனால் தனி நபர் சராசரி கணக்கிட்டால் ஏ குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு லட்சம் கிடைக்கும். ஆனால் பி குடும்பத்தில் ஒரு வருக்கு 2 லட்சம் கிடைக்கும். எனவே வசதிகள் கூடு தலாக கிடைக்கும் வாய்ப்புக் குறைவாக வருமானம் ஈட்டிய குடும்பத்துக்குதான் இருக்கும். எனவே இந்திய ஜி.டி.பி. ஜப்பானை முந்தும் என்பது பெருமைக் குரிய ஒன்று என்றாலும் அதனால் இந்திய மக்கள் பெறும் நன்மைகள் என்ன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

வேறுபாடுகளின் சில அம்சங்கள் பட்டியலில் தரப் பட்டுள்ளன: இந்த ஒப்பீடுகளை கணக்கில் கொண்டால்ஒட்டு மொத்த ஜி.டி.பி.யை தவிர இந்தியா வேறு எந்த விதத்திலும் ஜப்பானை முந்திவிட்டதாக பெருமை கொள்ள முடியாது. 

இந்தியாவின் அசமத்துவமும்  தனி நபர் ஜி.டி.பி.யும்

இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்கள் மட்டும் 200 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ.17 லட்சம் கோடி சொத்துக்களை பெற்றுள்ளனர். 1% மெகா பணக்காரர்கள் கைகளில் இந்தியாவின் 40% சொத்துக் கள் உள்ளன. 10% பணக்காரர்கள் கைகளில் 72% சொத்துக்கள் உள்ளன. 

அதே சமயம் கீழ்மட்ட 50%  மக்களிடம் வெரும் 3% சொத்துதான் உள்ளது. இது ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் மதிப்பீடு. இந்தியாவின் மேல்மட்ட 5% பணக்காரர்களின் வருமானத்தை அகற்றிவிட்டால் மீதமுள்ள 95% பேரின் சராசரி ஜி.டி.பி. 2800 டாலரிலிருந்து 1130 டாலராக வீழ்ச்சி அடைந்து விடும் என பொருளாதார நிபுணர் ரகு நந்தன் கணக் கீடுகிறார். 

இது காங்கோ/ மொசாம்பிக்/ மத்திய ஆப்பிரிக்க நாடுகளைவிட குறைவானது எனில் இந்தி யாவின் பெரும்பான்மையான மக்கள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர் என்பதை அறியலாம்.

வருமான கணக்கீடுபடி 3 வித இந்தியாக்கள் உள்ளன என புளூம் அறிக்கை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

மானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ளவர்கள்; 14 கோடி பேர்; தனி நபர் ஆண்டு வருமானம் 15,000 அமெ ரிக்க டாலர்கள். இந்திய ஆடம்பரப் பொருட்களின் பெரும்பாலான நுகர்வாளர்கள் இவர்கள்தான்!  l இரண்டாவது இந்தியா: இந்தோனேஷியா மக்களின் வருமானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ள வர்கள் ; 30 கோடி பேர்; தனிநபர் ஆண்டு வரு மானம்-3,000 அமெரிக்க டாலர்கள். 

இவர்கள் ஓரள வுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏனைய நுகர்வு பொருட்களை பயன்படுத்துப வர்கள். ஓ.டி.டி. ஊடக தளங்கள்/ டிஜிட்டல் பண வர்த்தனை ஆகியவை பெரும்பாலும் இவர்களை சார்ந்து உள்ளது.  lமூன்றாவது இந்தியா – 100 கோடி பேர் . 

அங்கோ லா/ ருவாண்டா/ சோமாலியா/ நைஜிரியா/ கென்யா/ சூடான் ஆகிய சப்-சஹாரா எனப்படும் மிகவும் பின் தங்கிய மக்களின் வருமானத்துடன் ஒப்பிட வாய்ப்புள்ளவர்கள் ; தனிநபர் ஆண்டு வருமானம் 1000 டாலர்கள் மட்டுமே. மிக அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எதிலும் செலவிட இயலாத பகுதியினர் இவர்கள்தான்!  மூன்றாவது இந்தியா என வரையறுக்கப்பட்டுள்ள 100 கோடி பேரின் வாழ்வாதாரம் உயராமல் இந்தி யாவின் பொருளாதார முன்னேற்றம் சாத்திய மில்லை. 

100 கோடி பேரின் வாழ்வு சப்-சஹாரா தேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கும் பொழுது ஜப்பானை முந்திவிட்டோம் என மார்தட்டிக் கொள்வது குரூர நகைச்சுவையாகவே அமையும்.

5 பெரிய நாடுகள் ஒப்பீடு

மக்கள் தொகை அடிப்படையில் 5 பெரிய தேசங்கள் முறையே இந்தியா/ சீனா/ அமெரிக்கா/ இந்தோனேஷியா/ பாகிஸ்தான் ஆகும். இவற்றின் ஒட்டு மொத்த ஜி.டி.பி.யும் தனி நபர் சராசரி ஜி.டி.பி.யும் கீழ்க்கண்டவாறு உள்ளன: தனி நபர் ஜி.டி.பி. வருமானத்தில் நமது சாதனை பாகிஸ்தானை முந்தியுள்ளது எனும் ஒப்பீடே பெரு மைக்குரியது அல்ல.

 வேலையின்மை ஒழித்தல்/ பொது முதலீடுகள்/ அசமத்துவம் குறைத்தல்/ சமூக முரண்பாடுகளை களைதல்/ வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல்/ கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை மட்டுமே உண்மையான பொருளாதார முன்னேற் றத்தை உருவாக்கும்.

 ஒன்றிய பாஜக அரசு அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

 ஒரு அம்சத்தில் மட்டும் ஜப்பானை முந்திவிட்டோம் என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு எவ்வித ஆய்வும் இல்லாமல் சுயதம்பட்டம் அடிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை