சிந்தித்து செயல்படுங்கள்!

 திமுக ஒருபக்கம் நீட் விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கிறதுஆனா "நீட் மட்டும்தான் உலகமா" னு அதிமுகவும் நடிகர்விஜயும் பாஜகவை போலவே கேட்கிறார்கள்.-திமுக.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு!
2வது நாளாக எடப்பாடி ஆலோசனை மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சிக்கு கொடுக்க அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு.
அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு *தமிழ்நாட்டிற்கானதாக மாநிலங்களவையில் எனது குரல் இருக்கும்" என்று பேட்டி.




சிந்தித்து செயல்படுங்கள்!

பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை வைத்து கடன் பெறுவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்ததாக அமைந்ததால், இந்திய அளவில் பலதரப்பட்டவர்களால், தங்க நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புகள் குவிந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், எளியவர்களை வஞ்சிக்கும் வரையறைகளை உள்ளடக்கிய நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு செவிசாய்த்து, ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் ஒன்றிய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறிய தொகைகளை, குறிப்பாக 2 லட்சம் ரூபாய்க்குக் கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்

கூட்டாட்சி முறைக்கு விடப்பட்ட சவால்

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அம்மாநி லத்தை இரண்டாக பிளந்து யூனியன் பிரதேச மாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தையும் குழிதோண்டி புதைத்தது. 

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  யூனியன் பிரதேச அரசை அழைக்காமலேயே மே 29 ஆம் தேதி ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்முவில் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

 பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல்  நடந்த நிலையில் ஜூலை 3 முதல் காஷ்மீரில் தொடங்க விருக்கும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை அதில் அவர் ஆய்வு செய்தார்.  இந்த கூட்டத்திற்கு  முதல்வர் உமர் அப்துல்லாவை அழைக்கவில்லை. 

பஹல்காம் தாக்குதல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் ஒன்றிய அரசின் உளவுத்துறை தோல்வியையும் அம்பலப்படுத்தியது. 

2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய ஜம்மு-காஷ்மீர்  மறுசீரமைப்புச் சட்டத்தில், சட்டம் - ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் அதிகாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதன் தொடர்ச்சி யாக அமித் ஷாவும்  துணை நிலை ஆளுநரும் அடிக்கடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசை அழைக்காததைப் பார்க்கும் போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஓரங்கட்டி நேரடியாக ஆட்சி நடத்த  திட்டமிடுவதாக சந்தே கப்பட வேண்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பான விஷ யங்களில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசாங்கத்தையும் கூட்டத்திற்கு அழைத்தி ருக்க வேண்டும்.

 “ஒன்றிய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் யாத்ரீகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்” என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே கலந்தாலோசனை கூட்டத்திற்கு உமர் அப்துல்லா  அரசை அழைக்காதது, அதிகார ஆணவத்தின் உச்சம். 

 கடந்த மாதம், ஸ்ரீநகரில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் பாதுகாப்புப் பிரச்சனை விவா தத்திற்கு வந்தபோது, ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளரையும் காவல்துறைதலைமை இயக் குநரையும் கூட ஒன்றிய அரசு அழைக்க வில்லை. 

இதனால் கோபமடைந்த முதல்வர் அப்துல்லா கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இப்படி ஒன்றிய அரசும் ஆளுநர் மாளிகையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடப்பட்ட சவால் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை