அவமானப் பட்ட நயினார்.

 தங்கக் கசிவு?

பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மேற்பரப்புக்கு கசிந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் எரிமலை பாறைகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தங்கம் கசிந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஜெர்மனியில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஹவாய் எரிமலைப் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்


அதில் ஹவாய் எரிமலைப் பாறைகளில் இருந்து பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள், மேற்பரப்பின் வழியே கசிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் 99.99% க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் ருத்தேனியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் 3,000 கி.மீ பாறைக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன என்று சயின்ஸ் அலர்ட் தெரிவித்துள்ளது.


4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரகம் உருவானதிலிருந்து இந்த மதிப்புமிக்க வளங்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி குறித்து நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


”முதல் முடிவுகள் வந்தபோது, ​​நாங்கள் தங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தோம்!

தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் உட்பட மையத்திலிருந்து வரும் பொருட்கள் பூமியின் மேற்பரப்பில் கசிந்து வருவதை எங்கள் தரவு உறுதிப்படுத்தியது," என்கிறார்


ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் புவி வேதியியலாளர் கள்.


உலகின் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகப் பொருட்கள் பூமியின் மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதையும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

அவமானப் பட்ட நயினார்.


Nainar Nagendran was humiliated when Pawan Kalyan came to Chennaiதமிழக பாஜக சார்பில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சில் நேற்று (26/05/25) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை வந்திருந்தார். அவருக்காக கிண்டி நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருக்கு அரசு தரப்பில் இன்னோவா கார் தயாராக இருந்தது. பாஜக சார்பிலும் கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதே சமயம் நயினார் நாகேந்திரன் பெயர் அடிப்பட்ட ரூ.4 கோடி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசாரி விசாரணையில் இருக்கும் பாஜகவின் கான்ட்ராவெர்சி பிரமுகர் கோவர்த்தனன், பவன் கல்யாண் செல்வதற்காக ரோல்ஸ் ராய் சொகுசு காரை ஏற்பாடு செய்திருந்தார். அந்த காரை தேர்வு செய்த பவன் கல்யாண் அதில் ஏறி அமர்ந்துகொண்டார். அப்போது பவன் கல்யாணுடன் பயணிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அந்த காரில் ஏற முயற்சி செய்தார்.

அப்போது பவன் கல்யாணுடன் வந்திருந்த அவரது நண்பர் ஒருவர், நயினாரை தடுத்து விட்டார். உடனே, நான் பாஜக மாநில தலைவர் என நயினார் சொல்ல, அதனால் என்ன? பின்னால் வாருங்கள். இதில் ஏறக்கூடாது" என்று சொல்லி அந்த நபர் தடுத்து விட்டார். மறுபுறம் இதனைக் கவனித்த பவன் கல்யாணும் இது குறித்து எதுவும் சொல்லவில்லை.

இதனால் அவமானப்பட்ட நயினார், மற்றொரு காரில் ஏறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். பவன் கல்யாண் காரில் நயினார் நாகேந்திரன் ஏற முடியாமல் அவமானப்படுத்தப்பட்டுள்ள இந்த சம்பவம் பாஜகவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கிடையே, திட்டமிட்டபடியும் எதிர்பார்த்தபடியும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கருத்தரங்கத்திற்குக் கூட்டம் வராததால் நிகழ்ச்சியும் பிசுபிசுத்து விட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை