'பேக்கரி டீலிங்'
ஆசிம் முனிர் - டிரம்ப் 'பேக்கரி டீலிங்' ரகசியத்தை இப்படி போட்டுடைக்கலாமா பாகிஸ்தான்??
"பலுச்சிஸ்தானிலிருக்கும் தாதுப் பொருட்களை அமெரிக்காவுக்கு கொடுப்பதற்கான விவகாரம் பற்றிப் பேசத் தான் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்கிறார் ராணுவ தளபதி ஆசிம் முனிர்" என அமைச்சர் கைசர் ஷேக் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

சீனா 'பெற்ற' அதே தாதுவை இப்போது அமெரிக்கா 'பெறுகிறது'.
தாதுக்கள் மட்டுமல்லாமல் பலூச் பகுதியில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கவும் ஆசிம் முனிர் 'ஒப்புதல்' கொடுத்திருப்பதாக வதந்திகள் வருகின்றன.
அத்தளங்களில் இருந்து ஈரானைத் தாக்கலாம்.
ஒரு புறம் 'ஈரானைத் தாக்கும் இஸ்ரேலைக் கண்டிக்கிறோம்' என்று அறிக்கை விடும் பாகிஸ்தான், மறுபுறம், 'ஈரானைத் தாக்க எங்கள் தளங்களை அமெரிக்கா உபயோகிக்கலாம்' என்று பேக்கரி டீலிங் பேசி வருகிறது.
'ஜனநாயகத்தை' தூக்கிப் பிடிக்கும் அமெரிக்கா முறைப்படி பாகிஸ்தான் மக்களால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' பிரதமர் ஷரீஃபுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக இராணுவ தலைவனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.