இதனை விட அவமானம் வேண்டுமா?
நான் முதல்வன் யுபிஎஸ்சி முதன்மைத்தேர்வு ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு: வரும் 13ம்தேதி வரை நீட்டிப்பு.
பீகாரில் 100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட பாட்னா-கயா நெடுஞ்சாலையின் நடுவே ஆங்காங்கே மரங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை விட அவமானம் ஏது?
“தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கப் போகிறேன்” என்று கிளம்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவர் பா.ஜ.க.விடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்கட்டும். அதன் பிறகு தமிழ்நாட்டை மீட்கலாம்.
தான் பதவி வகித்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க. தலைமையிடம் அடமானம் வைத்தவர்தான் இந்த பழனிசாமி. அவர்தான் வந்து வாய்கிழியப் பேசுகிறார்.
‘நீட் தேர்வை எழுதித்தாங்க ஆகணும்' என்று சொன்னது எந்த வாய்? பழனிசாமியின் வாய்தான். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்க உத்தரவிட்டது யார்? இதே பழனிசாமி தான். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தது யார்? அதே பழனிசாமிதான். காவிரிப் பிரச்சினைக்காக கண்காணிப்பு ஆணையம் அமைக்கலாம் என்று சொன்னதற்கு மாறாக ஜல் சக்தி துறையிடம் அது ஒரு குழுவாக பா.ஜ.க. அரசு ஆக்கியபோது வாய்மூடி, கண்மூடிக் கிடந்து துரோகம் செய்தது யார்? இதே பழனிசாமிதான். தமிழ்நாட்டின் நிதிக்காக போராடினாரா? இல்லை. தமிழ்நாட்டின் நீதிக்காகப் போராடினாரா? இல்லை. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகப் போராடினாரா? இல்லை. எதுவும் செய்யவில்லை. சும்மா, 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
தன்னிடம் இருக்கும் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பா.ஜ.க. தலைமை சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார் பழனிசாமி. என்னை இந்த நாற்காலியில் உட்கார வைத்திருந்தால் போதும் என்று நினைத்தார். அவரதுஅரசியல் அவ்வளவுதான். தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ்நாட்டின்உரிமையைப் பற்றியோ அவருக்கு எந்தக் கவலையும் அப்போதும் கிடையாது. இப்போதும் கிடையாது. எப்போதும் கிடையாது.
‘உனது பதவியைக் காப்பாற்றிக் கொடுத்த எங்களுக்கு கைமாறு செய்' என்று கேட்கிறது பா.ஜ.க. பன்னீர்செல்வம் இல்லாத, தினகரன் இல்லாத, சசிகலா இல்லாத கூட்டணி வேண்டும் என்கிறார் பழனிசாமி. ஏனென்றால் மீண்டும் போய், சசிகலா காலில் விழ முடியாது என்று நினைக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க. வின் கொத்தடிமைகளாக பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டவர்கள் இவர்கள். இவர்களைக் கைவிட்டு விடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. இந்த நிலையில்தான் பா.ஜ.க. தனக்குத் தெரிந்த ஒரே வழியான, 'ரெய்டு' மூலமாக பழனிசாமியை மிரட்டியது. 'பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை' என்று சொல்லி வந்த பழனிசாமி, பா.ஜ.க.வின் காலடியில் பதுங்கினார். கூட்டணிக்கு உடன்பட்டார்.
அந்த கூட்டணி அறிவிப்பையாவது பழனிசாமி செய்தாரா?இல்லை. இதனை அமித்ஷா அறிவித்த மேடையிலாவது, பழனிசாமிக்குபேச அனுமதி கிடைத்ததா? இல்லை. அறிவித்தார் அமித்ஷா. அவ்வளவுதான். பழனிசாமியின் கதை அத்தோடு முடிக்கப்பட்டது.
அது முதல் அமித்ஷா பேசுவது, 'தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி' என்பதுதான். 'பழனிசாமிதான் அடமானம் வைத்துவிட்டாரே? அதன்பிறகு அவரிடம் என்ன கேட்க வேண்டும்?' என்று நினைக்கிறார் அமித்ஷா. ஆனால் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள பழனிசாமிக்கு வெட்கமாக இருக்கிறது.

அமித்ஷா மிக எச்சரிக்கையாகவே சொல்லி இருக்கிறார். 'பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும், முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்' என்று சொல்லி இருக்கிறார். பழனிசாமி பேரைச் சொல்லவில்லை.
ஏனென்றால், பழனிசாமி இல்லாத வேறொருவரை பா.ஜ.க. தயார் செய்துவிட்டது பா.ஜ.க. இது ஊரறிந்த ரகசியம்தான் அது எஸ்.பி. வேலுமணியாக இருக்கலாம். கோவை வந்த அமித்ஷா தான் கலந்து கொண்ட விழாவில் தனக்குப் பக்கத்தில் எஸ்.பி.வேலுமணியைத்தான் வைத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்ட விழாவிலும் எஸ்.பி.வேலுமணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ‘அ.தி.மு.க.வில் இருந்து ஒருவர்' என்று அமித்ஷா சொல்லும் பின்னணி இதுதான்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வெங்கையா நாயுடுவை தமிழ்நாட்டுக்காகத் தயார் செய்தது பா.ஜ.க. அது கைகூடவில்லை என்றதும், நிர்மலா சீதாராமனை தயார் செய்தார்கள். அவரும் மயிலாப்பூரில் காய்கறி வாங்கினார். மாம்பலத்தில் நடந்து பார்த்தார்.
தூத்துக்குடியில் மக்களைச் சந்தித்தார். மக்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அதனால் அவரையும் டெல்லிக்கே வைத்துக் கொண்டார்கள். அண்ணாமலை வாயைக் கொடுத்தும் மாட்டிக் கொண்டார். 'கையைக்' கொடுத்தும் மாட்டிக் கொண்டார்.
எனவே பா.ஜ.க. முகம் எதுவும் டெபாசிட் வாங்கக் கூடத் தேறாது என்பதை அமித்ஷா அறிவார். இறுதியாக பழனிசாமியைப் பயமுறுத்தி அ.தி.மு.க.வை அபகரித்துவிட்டார்கள். பழனிசாமிக்கும் 'மாற்றுத் தலைவர்' உருவாக்கிவிட்டார்கள்.
‘முதலமைச்சர் யார் என்பதை பா.ஜ.க. நாடாளுமன்றக் கமிட்டிதான் முடிவு செய்யும்' என்று எச்.ராஜா சொன்னதை விட பழனி சாமிக்கு கேவலம் வேண்டுமா? மானஸ்தர் இதனைத் தாங்கிக் கொள்வாரா? ' ஒரே ஒரு ஆண்டுக்கு கட்சித் தலைவராக இருங்கள்' என்று வாய்ப்பளிக்கப்படாத ராஜா சொல்கிறார் பழனிசாமிக்கு பதில்.
இதனை விட அவமானம் வேண்டுமா?
அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியையே, பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கமிட்டியோடு இணைத்து விட்டார்கள். விழிபிதுங்கிக் கிடக்கிறார் பழனிசாமி.
இத்தகைய கேவலமான சூழலை மறைக்கத்தான், 'தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் போகிறேன்' என்கிறார் பழனிசாமி. அவருக்கும் இன்னும் பத்து மாதம் பொழுது போக வேண்டாமா?
அரசியல் ஆண்மை!
கூட்டணி விவகாரத்தில் 1980க்கு பிறகு மீண்டும் அதே நிலைமை தமிழக அரசியலில் திரும்பியிருக்கிறது.
அன்றைக்கு திமுக கூட்டணிக்கு வந்த நிலைமை இன்றைக்கு அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கிறது.
ஆனால், அன்றைக்கு கலைஞர் ஆண்மையுடன் எடுத்த அதிரடி முடிவை இன்றைக்கு பழனிசாமி எடுக்காமல் தயங்கி நிற்பதால் சோர்வில் உள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பேசி வந்த அதிமுகவை, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று பேச வைத்து விட்டது பாஜக தலைமை. இதுவரையிலும் கூட அதிமுகவினர் முழுமனதுடன் பாஜகவை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி வென்றதும் கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா கொளுத்திப் போட்டுவிட்டார். அதுவும் பழனிசாமியை மேடையிலேயே வைத்துக்கொண்டு இதைச் சொல்லிவிட்டார்.

அமித்ஷாவின் இந்த பேச்சினால் அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆனால், அதிமுக சீனியர்களோ, அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. கூட்டணி வென்றதும் அதிமுக ஆட்சிதான் என்று சொல்லி சமாளித்து வருகின்றனர்.
இதில் மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார் அமித்ஷா. என்.டி.ஏ. கூட்டணி வென்றதும் அதிமுகவைச் சேர்ந்தவர் ஒருவர்தான் முதலமைச்சராக வருவார் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா. அமித்ஷா இப்படிச் சொன்னதால், அப்படி என்றால் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி இல்லையா? பாஜகவின் தேர்வு செங்கோட்டையனா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலோடு அதிமுக காணாமல் போகும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘’எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’’ என்று சொல்லி இருக்கிறார். பழனிசாமி இப்படிச் சொல்லி இருப்பது பாஜகவுக்குத்தான் என்கிறார் விசிக திருமாவளவன்.
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றால் கூட்டணி ஆட்சியில் பழனிசாமிக்கு விருப்பம் இல்லையா? அப்படி இல்லை என்றால் அமித்ஷாவை அதை அறிவிக்க வைத்து விடலாமே. அப்படி செய்யாது இருப்பதால் அதிமுகவினரிடையே குழப்பம் நீடிக்கிறது. இதே குழப்பத்துடன் தேர்தல் வரை சென்றால் அது சரியாக இருக்காது என்றே கருதுகின்றனர் அதிமுகவினர். இதனால் கூட்டணி – அதிகாரத்தில் குழப்பம் இல்லாமல் தெளிவுபடுத்தி விட்டு அடுத்தக்கட்டவற்றை செய்ய வேண்டும் என்று பழனிசாமிக்கு அறிவுறுத்துகின்றனர் சீனியர் அரசியல் நிபுணர்கள் சிலர்.

1980இல் திமுகவும் காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்திக்க இருந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று யாரும் இல்லை. தேர்தலில் வென்றதும் திமுக, காங்கிரசில் எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் கிடைக்கிறார்களோ அதைப்பொறுத்தே எந்த கட்சி சார்பில் முதலமைச்சர் என்று தேர்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சொல்லி வந்த நிலையில் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்.வெங்கட்ராமனும் இதையே சொன்னபோது திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த கலைஞர், காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை உடனே நிறுத்தினார். இதில் அதிர்ச்சி அடைந்த இந்திராகாந்தி, கலைஞர் மு.கருணாநிதியே முதலமைச்சராக இருப்பார் என்று அறிவித்தார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து தெளிவுடன் அந்த தேர்தலை சந்தித்தது.

இன்றைக்கு அதே போன்று தேர்தலில் வென்றால் அதிமுக ஆட்சிதான், பழனிசாமிதான் முதலமைச்சராக இருப்பார் என்று அமித்ஷா சொல்ல வேண்டும். அவரை பழனிசாமி சொல்ல வைக்க வேண்டும். கலைஞருக்கு இருந்த அந்த துணிச்சல் இன்றைக்கு பழனிசாமிக்கு இல்லாமல் போனது ஏன்? என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பலரும் கேட்கின்றனர்.

செய்ய வேண்டிய இதை முறையாக செய்யாமல் ‘’எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’’ என்ற வீண் பேச்சு ஏன்? என்றே முணுமுணுக்கின்றனர் அதிமுகவினர்.