வஞ்சிப்பதே பிறவிக் குணம்!
ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பஞ்சாப் செல்லும் இரண்டு பேருந்துகளை நிறுத்தி அதில் இருந்து 9 பேரை இறக்கிவிட்டு பின்னர் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.


பா.ஜ.க, கொள்கையே தமிழரை வஞ்சிப்பதே!
தொன்மையான பண்பாட்டைக் கொண்ட தமிழ் இனத்தின் ஆவணச் சான்றாகத் திகழ்பவை கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள். கீழடியில் 2017 வரை இரு அகழ்வாராய்ச்சிகளை நடத்திய இந்தியத் தொல்லியல் துறை மேற்பார்வையாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடியில் ஒரு பழமைவாய்ந்த நாகரிகம் இருப்பதாக கூறியிருந்தார்.
அவரை அசாம் மாநிலத்திற்கு மாற்றிய மத்திய பா.ஜ.க. அரசு, அவரது இடத்திற்கு பி.எஸ்.ஸ்ரீராம் என்பவரை நியமித்தது. இவரால் கீழடியில் நடத்தப்பட்ட மூன்றாவது அகழ்வாராய்ச்சிகளின் முடிவில் எந்தவித முக்கியமான கண்டுபிடிப்புகளும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தார்.
அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைக்கு எதிரான அல்லது அதனை மறைக்கும் வகையிலான ஸ்ரீராமின் அறிவிப்புக்கு அப்போதே சக தொல்லியல் நிபுணர்களிடம் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து, 2019ல் கனிமொழி மதி என்பவர் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீராம் மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு பொறுப்புக்கு வந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, 2025 வரை கீழடியில் நடத்திய அகழ்வாராய்ச்சிகளில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுடுமண் (terracotta) குழாய் இணைப்புகளை கண்டுபிடித்தார்.
அதன்பின் பானைகளில் பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை கண்டெடுத்தார். அதன்பின் தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைக் கண்டெடுத்தார்.
இதன்மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததும், கடல் கடந்த வணிகத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கியதும் தெரியவந்தது.
இவை கீழடி அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெருமைகளை உலகுக்கு உணர்த்த விரும்பி மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறைக்கு அவற்றைச் சமர்ப்பித்தார். மத்திய பா.ஜ.க. அரசோ, போதுமான சான்றுகள் இல்லை என அந்த அறிக்கையை நிராகரித்து, மாற்றி எழுதித்தர வலியுறுத்தியது.
நிர்பந்தத்திற்கு உடன்பட மறுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா கடந்த ஜுன் மாதம் டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில்தான், கீழடியின் மூன்றாவது கட்ட அகழாய்வில் தமிழர் பண்பாட்டுக்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற பி.எஸ்.ஸ்ரீராமை மத்திய அரசு மீண்டும் நியமித்து, திருத்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியுள்ளது.
ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட ஸ்ரீராமை நியமித்திருப்பதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு உள்நோக்கம் இருப்பதாகவே தொல்லியல் வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள்.

அந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ராஜஸ்தான் அருகே நடந்த அகழாய்வில் மகாபாரதக் காலத்து பொருட்கள் கிடைத்திருப்பதாகவும், பூமிக்கடியே ஓடிய சரஸ்வதி நதியின் தடயங்கள் இருப்பதாகவும் எவ்வித அறிவியல்பூர்வமான ஆதாரமுமின்றி செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-சரஸ்வதி நாகரிகமே தொன்மையானது என நம்பவைக்கும் முயற்சியாகவே, 3000 ஆண்டுகால பழமையான தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகமான கீழடி அகழாய்வுகளைப் புறக்கணிக்கும் வேலைகளைத் தொடர்கிறது பா.ஜ.க அரசு.
மத்திய பா.ஜ.க. அரசு தமிழுக்கு செய்யும் வஞ்சகம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும் தொடர்கிறது. பரிதிமாற்கலைஞரில் தொடங்கி கலைஞர் கருணாநிதி வரை ஒரு நூற்றாண்டுகாலமாகப் பலரும் எடுத்த முயற்சியின் விளைவாக, 2004ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
இந்தியாவில் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி என்ற பெருமையும் தமிழுக்குக் கிடைத்தது. அதன்பிறகே சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் அந்தத் தகுதிக்குள் வந்தன.
கீழடி ஆய்வுகளின் உண்மைகளைப் புதைப்பதற்கு ஒரு ஸ்ரீராம் போல, செம்மொழித் தமிழின் வளர்ச்சிக்கும், உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுக்கான இருக்கையை அமைக்கவும் சென்னையில் நிறுவப்பட்ட செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் தமிழைச் சிதைக்க சுதா சேஷையன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செம்மொழி நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ள் இருந்தாலும், இது மத்திய அரசால் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் காரணத்தால் முழுமையாக அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கைகளை முன்னெடுக்கும் செயல்பாடுகளும் வரலாற்றுச் சம்பந்தமில்லாத அகத்தியர்தான் தமிழை உருவாக்கினார் என்பது போன்ற கற்பிதங்களுமே ஆராய்ச்சிகளாக மேற்கொள்ளப்படுகின்றன. “இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கத்தினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.
அதன் அழைப்பிதழில் தமிழும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைப்படி தமிழுடன் இருக்க வேண்டியது ஆங்கிலம்தான். ஆனால், அதற்கு மாறாக, செம்மொழி நிறுவனத்தில் இந்தியைத் திணித்து வஞ்சகத்தைத் தொடர்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.