வின் பாஸ்ட்!

 தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் உற்பத்தி நிலையத்தில் இருந்து புதிய கார் விற்பனைக்கான முன்பதிவு ஜூலை 15ல் தொடங்குகிறதுவியட்நாமை தலைமையிடமாக கொண்ட வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் ஆலை அமைத்தது.கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி ஆலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கான சதியே அதிமுக - பாஜக கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். 
சென்னையில் வெயில் தகித்த நிலையில் கொட்டிய மழையால் குளிர்ச்சியான சூழல். காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட மாநிலத்தின் பல இடங்களிலும் வெளுத்து வாங்கிய கனமழை.
சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கின் விசாரணையை சிபிஐ துவங்கி உள்ளது. தமிழக காவல்துறையினரிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னை திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து (Goods Train Fire Accident) ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில் தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் ரயிலில் எரிபொருட்கள் இருக்கும் நிலையில்,  தீ மேலும் பரவும் அபாயம்,கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. 
உலகின் அதிவேக இன்டர்நெட்டை ஜப்பான் அறிமுகம் செய்து வைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்பிலிக்ஸ் படங்களையும் டவுன்லோடு செய்து விட முடியும். இன்டர்நெட் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை தகர்த்தெறிந்து தகவல் பரிமாற்ற வேகத்தில் புதிய உலக சாதனையை ஜப்பான் படைத்துள்ளது.

அதாவது, ஒரு நொடியில் 1.02 பெட்டாபைட்ஸ் இன்டர்நெட் வேகத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் (என்ஐசிடி) அறிவித்துள்ளது. இதன் மூலம் நெட்பிலிக்சிடம் உள்ள அத்தனை படங்களையும் ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஒரே நொடியில் பதிவிறக்கலாம். இந்தியாவில் தற்போது அதிகபட்ச இன்டர்நெட் வேகம் 63.55 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.

இதை விட ஜப்பானின் இன்டர்நெட் வேகம் 1.6 கோடி மடங்கு அதிகம். அமெரிக்காவின் இன்டர்நெட் வேகத்தை விட 35 லட்சம் மடங்கு அதிகம். இந்த அதிவேக இன்டர்நெட்காக சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களுடன் இணைந்து பிரத்யேக பைபர் கேபிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள் வழியாக ஒரே நொடியில் தரவுகளை 1,808 கிமீ தூரத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அதிவேக இன்டர்நெட் எதிர்கால ஏஐ தொழில்நுட்பத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய