எங்க நாட்டுக்கு வராதே!
மராமத்து செய்யப் பட்ட விக்டோரியா ஹால் ஆக. 15ல் மீண்டும் திறப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக கோரக்கை மனு.
கூட்டணி பற்றி கவலையில்லை: ஆட்சியில் பங்கு தர நான் ஏமாளி அல்ல: அமித்ஷாவுக்கு எடப்பாடி பதில்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த தொழில் துறை, சேவைத் துறை, சுற்றுலா என ஒவ்வொரு வணிக முறையைக் கையில் எடுப்பது வழக்கம். அந்த வகையில் சுற்றுலா ஒரு முக்கிய வணிக முறையாக உள்ள தெற்கு ஐரோப்பாவில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு ஐரோப்பியாவை சேர்ந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பதால், அந்நாட்டவரின் செலவினங்கள் அதிகரிப்பதுடன், உள்ளூர் வாசிகள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பார்சிலோனா பகுதியில் water gun மற்றும் வண்ண புகைகளைக் கொண்டு கடை வீதியில் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
SET எனப்படுகிற Southern Europe Against Touristification என்னும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதிகளில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில், ‘Tourist go home’, ‘உங்கள் விடுமுறை நாட்கள், எங்கள் துயரம்’ (Your holidays, may misery), அதிகரிக்கும் சுற்றுலா, நகரத்தைக் கொல்கிறது (Mass tourism kills the city) போன்ற வாசகங்களும் முழக்கங்களும் பெரும் அளவில் காண முடிகிறது.
கடந்த 2024ம் ஆண்டு தரவுகளின்படி பார்சிலோனாவில் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், சுற்றுலா மூலம் 26 மில்லியன் பேர் வருகை தந்துள்ளனர். 31 சதவீதம் பேர் சுற்றுலா பயணிகளின் மூலம் தங்களின் செலவின அதிகரிப்பதாக கருதுகின்றனர். இத்தகைய நீண்டகால கருத்துகளின் வெளிப்பாடு ஒருங்கிணைக்கப்பட்டு போராட்டமாக உருப் பெற்றுள்ளது.
பார்சிலோனாவை பொருத்த அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளது. சுற்றுலா வருகை அதிகரிப்பால் கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு வாடகைகள் 68 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் வீடுகளின் விலை 38 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை வேலை வாய்ப்பை தருவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது எனப் பொதுவாகக் கூறப்படும் கருத்தை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ரைட்டர்சிடம் பேசியுள்ளார்.
பொருளாதாரத்தைக் கொண்டு வரும் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் கேட்டலோனியா அரசு விமான நிலையத்தை விரிவு படுத்துவது தொடர்பான திட்டத்தையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விமர்சித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, நார்வே நாட்டில் சுற்றுலா மூலம் இயற்கையான சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த 2026ம் ஆண்டு முதல் 3 சதவீதம் வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட வேண்டிய இடம்?
இந்தியாவின் உதாரணப் புருஷராகச் சொல்லப்படுபவர் உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத். அவரிடம் இரண்டே இரண்டு வேட்டிதான் இருக்கிறதாம். ஒரு வேட்டியை கட்டி இருப்பார்.
இன்னொரு வேட்டியை துவைத்துக் காய வைத்திருப்பார். அந்த வேட்டி காயாததால், டெல்லி விமானத்தை கூட தவறவிட்டுவிட்டார். இப்படி ஒரு கப்சா கதை உண்டு. பா.ஜ.க.வின் வாட்ஸ் அப் பல்கலைக் கழக கப்சாகளில் இதுவும் ஒன்று.
அத்தகைய உதாரணப் புருஷரான யோகி ஆதித்யநாத், இரண்டு செயல்களை கடந்த வாரம் செய்திருக்கிறார். ஒன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களை மூடுவது என்று முடிவெடுத்து இருக்கிறார். இன்னொன்று ஜெகஜோதியாக மதுபான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறார்.
மதுபான தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிதிநிலைமையைக் காரணமாகக் காட்டி 5 ஆயிரம் பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி இருக்கிறது. “கல்வி, படிப்பைப் பார்த்து பா.ஜ.க. அஞ்சுகிறது” என்று கண்டித்துள்ளார் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்.“ஏழைக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று சொல்லி இருக்கிறார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோகிக்கு கவலை இல்லை. அவர் மதுபான ஆலை அதிபர்களின் மாநாட்டை நடத்தி முடித்து விட்டார்.

இந்திய நாட்டிலேயே முதன்முதலாக மதுபான தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய பெருமை பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் பெற்றுள்ளது. யோகி நடத்தி உள்ள மதுபான தொழில் முதலீட்டு மாநாட்டில் 200 நிறுவனங்கள் பங்கெடுத்தன.
15 நிறுவனங்கள் அரசுடன் ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. இதன் மூலமாக 4 ஆயிரத்து 320 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கோரக்பூர், லக்னோ மற்றும் மதுரா உள்ளிட்ட 15 வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள் தங்கள் அலகுகளைத் தொடங்குவார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் 2018-2019 நிதியாண்டில், மது விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் 23 ஆயிரத்து 927 கோடி ரூபாயாக இருந்தது. இது இப்போது 52 ஆயிரத்து 570 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
மது விற்பனை மூலம் நாட்டிலேயே அதிக வரி வருவாய் ஈட்டும் உத்தரப் பிரதேசம், அதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இம்மாநாட்டை நடத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசம் 62.95 கோடி லிட்டர் மதுபானங்களை உற்பத்தி செய்து வந்தது. 2025 ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து 132.6 கோடி லிட்டராக உயர்ந்தது.
இந்தியாவில் இதுதான் அதிக எண்ணிக்கையிலான மாநில உற்பத்தி ஆகும். அந்த விருதையும் தரலாம்.
உ.பி. கலால் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) நிதின் அகர்வால் சொல்வதைக் கேளுங்கள்...." முன்னதாக, மதுபான உற்பத்தியாளர்கள் (சாதாக்கள், ஜெய்ஸ்வால்கள்) உத்தர பிரதேசத்தில் மதுபான உற்பத்தியில் பெரிய ஜாம்பவான்களாகக் கருதப்பட்டனர்,
ஆனால் 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் நாங்கள் கொள்கைகளை மாற்றியதால், சிறு வணிகர்களும் அதில் நுழைந்தனர்,” என்று சொல்லி இருக்கிறார். அனைவரும் காய்ச்சலாம் என்று ஜனநாயகப் படுத்தி இருக்கிறார்களாம்!
உ.பி. அரசின் கலால் கொள்கையின் கீழ், நடப்பு நிதியாண்டில் 3,171 உள்நாட்டு மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 3,392 பியர் கடைகள் மற்றும் 2,799 வெளிநாட்டு மதுபானக் கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் 2,791 உள்நாட்டு மதுபானக் கடைகளில் பியர் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உ.பி. கலால் துறை மார்ச் 2022 இல் ஒரு சுதேசிக் கொள்கையை வகுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட ஒயின்'என்பதுதான் அந்தக் கொள்கை. உள்ளூர் பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானங்களுக்கு கலால் வரி விதிக்கப்படுவதில்லையாம். '
சுதேசி' மது பானத் திட்டம் இது.மாம்பழங்கள் மற்றும் உள்ளூரில் விளையும் பல்வேறு பழங்களிலிருந்து மதுபானங்களை உற்பத்தி செய்யும் உ.பி.யின் முதல் பழ ஒயின் ஆலை லக்னோவின் மாலிஹாபாத் பகுதியில் திறக்கப்பட்டு உள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலையில் உ.பி. அமைச்சரவை கூடி ஒரு முடிவு எடுத்தது.ஷாப்பிங் மால்களில் உயர்தர மதுபானம் மற்றும் பீர் விற்பனை செய்யலாம் என்பதே யோகியின் முடிவு. அரசுக்கு 12 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு கட்ட வேண்டும்.
இது மதுவை சாதாரணப் பொதுமக்களின் பார்வைக்கு விருந்தாக வைக்கப்பட்டது. ‘தி பிரிண்ட்' இதழுக்கு உ.பி. அதிகாரி கொடுத்த பேட்டியில், பெண்கள் அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்' என்று பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.
இந்திய சர்வதேச மதுபானங்கள் மற்றும் ஒயின்கள் சங்கம் உச்சிமாநாட்டில் வெளியிட்ட அறிக்கையில்,“ மாநிலத்தின் மதுபானத் தொழில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது.
மாநிலத்தின் வரி வருவாயில் மதுபான விற்பனை 25 சதவீதமாகும். IMFL பிரிவும் ஆண்டுக்கு 10 சதவீத அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பா.ஜ.க. மாடல் ஆட்சிக்கு கிடைத்த சான்றுகள் ஆகும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதுவுக்கு எதிராக குரல் எழுப்பும் பா.ஜ.க.,வினர், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் மதுபான தொழிற்சாலைக்கும், உற்பத்திக்கும், விற்பனைக்கும் தாராள அனுமதி வழங்கி வருகின்றனர் என்பது இதன் மூலமாக வெளிச்சமாகி இருக்கிறது.
மதுபானம் தறிகெட்டு ஓடும் புதுச்சேரியின் ஆளுநராக இருந்து விரட்டப்பட்ட தமிழிசையும், 'அண்ணா எனக்கு இப்ப எந்த வேலையும் இல்லைண்ணா' என்று சொல்லும் அண்ணாமலையும் போய் மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டிய இடம் உத்தரப்பிரதேசம்தான்.