போலி வருத்தங்கள்

 ஏதோ ஸ்டாலின் தான் கத்தி எடுத்து குத்தியது போல் பேசும் எதிர்க்கட்சி அறிவாலிகளே....... சாரி கேட்டால் சரியாகிவிடுமா என கேட்கும் அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறோம்....... கோத்ரா ரயில் எரிப்பில் மூவாயிரம் பேரை கொலை அறுத்த மோடி சாரியாவது கேட்டாரா?.....

ஜூலை21ல் மழைக்காலமக்களவைக் கூட்டத்தொடர் துவக்கம்.
உறுப்பு தானம் தந்த 129 பேரால் 6 மாதங்களில் 725 பேர் மறுவாழ்வு விபரம் வெளியானது.






போலி வருத்தங்கள் 

எடப்பாடி பழனிசாமிக்கு மன்னிப்பின் மகத்துவம் தெரியுமா என முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. திமுக நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “திருப்­பு­வ­னத்­தில் காவ­லர்­கள் சிலர் கொடூ­ர­ மாக நடந்து கொண்­டார்­கள். இதில் அஜீத்­கு­மார் என்­ப­வர் பலி­யா­னார்.


குற்­றச் சம்­ப­வத்தை மறைக்­கவோ, யாரை­யும் காப்­பாற்­றவோ அரசு முயற்­சிக்­க­வில்லை.


கொடூ­ர­மாக நடந்து கொண்ட காவ­லர்­கள் 5பேர் மீதும் கொலை வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது.

அவர்­கள் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப் ­பட்­டார்­கள்.


டி.எஸ்.பி. பணி நீக்­கம் செய்­யப்­பட்டு இருக்­கி­றார்.


எஸ்.பி. மாற்­றப்­பட்டு இருக்­கி­றார்.


இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசா­ர­ணைக்கு  மாற்­றி­னார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.


‘அர­சின் உட­னடி நட­வ­ டிக்­கை­கள் ஏற்­கத்­தக்­கது’ என்று சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை நடத்­திய விசா­ர­ணை­யின்போது நீதி­ய­ர­சர் அவர்­களே பாராட்­டும் தெரி­வித்­தார்­கள்.

யாரும் கோரிக்கை வைப்­ப­தற்கு முன் இந்தவழக்கை சி.பி.ஐ.க்கு மாற்­ற­வும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டார்­கள். ‘மடி­யில் கன­மில்லை’ என்­ப­தாக முத­ல­மைச்­ச ­ரின் இந்த அறி­விப்பு அமைந்­தது.மர­ணம் அடைந்த அஜீத்­கு­மார் வீட்­டுக்கு அமைச்­சர் பெரி­ய­க­ருப்­பனை அனுப்பி வைத்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.


அஜித்­கு­மா­ரின் அம்­மா­வுக்­கும், தம்­பிக்­கும் ஆறு­தல் கூறி­னார் அமைச்­சர். அப்­போது அமைச்­ச­ரைத் தொடர்பு கொண்ட முத­ல­மைச்­சர் அவர்­கள், அஜீத்­கு­மா­ரின் அம்­மா­வி­ட­மும் பேசி­னார். தம்­பி­யி­ட­மும் பேசி­னார்.


மனித மனத்­தின் மாபெ­ரும் மாண்பு, ‘மன்­னிப்பு’கேட்­பது ஆகும். ஈடு செய்ய முடி­யாத இழப்பு என்­பதை அறிந்த நிலை­யில் முத­ல­மைச்­சர் அவர்­கள், ‘நடந்­த­துக்கு ஸாரிம்மா’ என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் தழு­த­ழுக்­கச் சொன்­னார்­கள். ‘பணி­ யு­மாம் எந்­தன் பெருமை’ என்ற நிலை­யில் அமைந்­தி­ருந்­தது முத­ல­மைச்­ச­ரின் அந்­தச் செயல்.“முத­ல­மைச்­சர் என்­னி­டம் ஆறு­தல் கூறி­ னார்.


‘எனக்­கும் வருத்­த­மா­கத் தான் இருக்­கி­றது. இந்த சம்­ப­வத்­துக்­காக வருத்­தம் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். உங்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் செய்து தரு­கி­றேன்’ என்று முத­ல­மைச்­சர் கூறி­னார். அவர் பேசி­யது எங்­க­ளுக்கு ஆறு­த­லாக இருக்­கி­றது” என்று அஜீத்­கு­மா­ரின் அம்மா பேட்டி அளித்­தி­ருக்­கி­றார். ‘குற்­றம் செய்­த­வர்­கள் யாரும் தப்ப முடி­யாது’ என்று அஜீத்­கு­மா­ரின் தம்­பி­யி­டம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள்.


இது அந்­தக் குடும்­பத்­துக்கு பெரிய ஆறு­த­லாக அமைந்­து­விட்­டது.

சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­ட­தும், அஜீத்­கு­மார் குடும்­பத்­தி­டம் பேசி­ய­தும் முத­ல­மைச்­ச­ரின் பார­பட்­ச­மற்ற, உட­னடி நீதியை உறுதி செய்­தது.இதை வைத்து அர­சி­யல் செய்ய நினைத்த பழ­னி­சா­மி­யின் பிழைப்­பில் உட­ன­டி­யாக மண் விழுந்து விட்­டது.


சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு பிழைப்பை ஓட்­ட­லாம், அந்த குடும்­பத்­துக்கு நீதிஎன்று சொல்லி மீதிக் காலத்தை ஓட்­ட­லாம் என்றுநினைத்­தார் பழ­னி­சாமி. அது முடி­யா­மல் போன அரிப்­பில் அறிக்கை விட்­டுள்­ளார் பழ­னி­சாமி.


‘முத­ல­மைச்­ச­ரின் தொலை­பேசி உரை­யா­டல் அலட்­சி­யத்­தின் உச்­சம்’ என்று இந்த தடித்­தோல் பழ­னி­சாமி சொல்லி இருக்­கி­றது.


13 பேரை தூத்­துக்­கு­டி­யில் சுடச் சொல்­லி­விட்டு, ‘நான் டி.வி.யைப் பார்த்­துத் தான் தெரிஞ்­சுக்­கிட்­டேன்’ என்று பல்லைக் காட்­டி­ய­படி பேட்டி கொடுத்­தாயே அது தான் ஆண­வம்!தூத்­துக்­குடி சம்­ப­வம் பற்றி அ.தி.மு.க. ஆட்­சிக்காலத்­தில் நீதி­பதி அருணா ஜெக­தீ­சன்அவர்­கள் தலை­மை­யில் விசா­ரணை ஆணை­யம்அமைக்­கப்­பட்­டது.


பழ­னி­சா­மிக்­குத் தெரிந்தே தான் அந்­தக் கொலை­கள் அரங்­கேற்­றப்­பட்­ட­தாக அந்த ஆணை­யமே சொல்லிஇருக்­கி­றது. அறிக்­கை­யின் 2 ஆவது பாகம் – 219 ஆவது பக்­கத்­தில் இடம் பெற்­றுள்ள 252 ஆவது கருத்து இது:

“ …..have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate – the Commission would opine” என்று சொல்லி இருக்­கி­றது அந்த அறிக்கை.


“தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வம் பற்றி அப்­போ­தைய முதல் அமைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி, ‘அந்­தச் சம்­ப­வத்தை மற்­ற­வர்­­களைப் போல ஊட­கங்­க­ளில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்­டேன்’ என்று பத்­தி­ரிக்­கை­யாளர்­க­ளுக்­கு பேட்டி அளித்­தார்.


ஆனால் இந்த ஆணை­யத்­தி­டம் மிக வலு­வாக இருக்­கும் ஆதா­ரம் என்­ன­வென்­றால், சாட்­சி­யாக விசா­ரிக்­கப்­பட்ட அப்­போ­தையதலை­மைச்செய­லா­ளர் கிரிஜா வைத்­தி­ய­நா­தன், அப்­போ­தைய டி.ஜி.பி. ராஜேந்­தி­ரன், அப்­போ­தைய உள­வுத்­துறை ஐ.ஜி. சத்­தி­ய­மூர்த்தி ஆகி­யோர் தூத்­துக்­கு­டி ­யில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளை­யும், அங்­குள்ள நில­வ­ரங்­க­ளையும் நிமி­டத்­துக்கு நிமி­டம் எடப்­பாடி பழ­னி­சா­மியி­டம் தெரி­வித்து வந்­த­தா­கக் கூறி­னார்­கள்.


எனவே,ஊட­கங்­கள் மூல­மா­கத் தான் அந்­தச் சம்­ப­வம் பற்றி தெரிந்து கொண்­ட­தாக எடப்­பாடி பழ­னி­சாமிகூறி­யது தவ­றான கருத்து என்­பது இந்த ஆணை­யத்­தின் கருத்­தா­கும்” – என்று ஆணை­யத்­தின் அறிக்கைசொல்­கி­றது. இதற்­குப் பிற­கும் அறிக்கை அர­சி­யல் செய்ய பழ­னி­சா­மிக்கு அவ­மா­ன­மாக இல்­லையா?

சாத்­தான்­கு­ளத்­தில் தந்­தை­யை­யும் மக­னை­யும் காவல் நிலை­யத்­தில் வைத்து கொன்று விட்டு, ‘உடல் நலக் குறை­வால் மர­ணம்’ என்றுஅறிக்கை விட்­ட­து­தான் ஆண­வம்!


கடையை மூடமறுத்­த­தால் காவ­லர்­கள் தாக்­கி­னார்­கள் என்ற தொனி­யில் அறிக்கை விட்­டது பழ­னி­சாமிதான்.


‘பென்­னிக்ஸ் மூச்­சுத்­தி­ண­ற­லால் இறந்­தார், ஜெய­ராஜ் உடல் நலம் பாதிக்­கப்­பட்டு இறந்­தார்’ என்­றும் அறிக்கை வெளி­யிட்­டார் அன்­றைய முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி. ‘சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு தி.மு.க. நீதி­மன்­றத்தை நாடும்’ என்று தி.மு.க. தலை­வர் அவர்­கள் சொன்ன பிற­கு­தான், சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டார் பழ­னி­சாமி. ‘காவ­லர்­கள் மீது கொலை வழக்­கா­கப் பதிவு செய்­வ­தற்­கான முகாந்­தி­ரம் உள்­ளது’ என்று சொன்­னது சென்னை உயர்­நீ­திமன்­றத்­தின் மது­ரைக் கிளை.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளால் வர­லாற்­றின்முதல் முறை­யாக சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லை­யம், காவல்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் இருந்து எடுக்­கப்­பட்டு வரு­வாய்த்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் ஒப்­ப­டைக்­கப்­பட்டது.உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளால் விசா­ரணை செய்ய உத்­த­ர­வி­டப்பட்­ட­வர் கோவில்­பட்டி மாஜிஸ்­தி­ரேட் பார­தி­தா­சன். அவரை சாத்­தான்­கு­ளம் காவல் நிலை­யத்­தில் காவ­லர்­கள் மிரட்­டி­னார்­கள். ‘உன்­னால் ஒன்­றும் …… முடி­யாது’ என்றுகாவ­லர் ஒரு­வர் மிரட்­டி­ய­தாக மாஜிஸ்­தி­ரேட்டே நீதி­மன்­றப் பதி­வா­ள­ரி­டம் புகார் செய்­தார்.“…கடையை மூடச் சொன்ன எங்­களை மிரட்­டிய ஜெய­ரா­ஜும், பென்­னீக்­ஸும் தரை­யில் புரண்­டார்­கள். அதில் அவர்­க­ளுக்கு ஊமைக்­கா­யம் ஏற்­பட்­டது..” என்று முதல் தக­வல் அறிக்கை எழு­தி­யது பழ­னி­சா­மி­யின் போலீஸ்.

சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தின் மது­ரைக் கிளை­யில் அ.தி.மு.க. அர­சின் வழக்­க­றி­ஞர் இத­னைப் பூசி­மெ­ழு­கப் பார்த்­தார். ‘இது லாக்­அப் மர­ணமே அல்ல’ என்று அன்­றைய அமைச்­சர் கடம்­பூர் ராஜூ சொன்­னார்.கண்­ணால் பார்த்­ததை வாக்­கு­மூ­ல­மா­கக்கொடுத்த தலை­மைக் காவ­லர் ரேவதி மிரட்­டப்பட்­டார். சாத்­தான்­கு­ளம் காவல் நிலை­யத்­தில்இருந்த சி.சி.டி.வி. காட்­சி­கள் அழிக்­கப்­பட்­டன. ஆதா­ரங்­கள் மறைக்­கப்­பட்­டன. இவ்­வ­ள­வும் ஆட்சி மேலி­டத்­தின் உதவி இல்­லா­மல், உயர்காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் தயவு இல்­லா­மல் சாதா­ரண காவ­லர்­க­ளால் செய்­தி­ருக்க முடி­யாது. ஊட­கங்­க­ளில் ஏரா­ள­மான வீடியோ ஆதா­ரங்­கள் வெளி­யான பிறகு சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு ஒத்­துக்­கொள்ள வேண்­டிய நிலைக்கு பழ­னி­சாமி நெருக்­க­டிக்­குள்­ளா­னார்.

சாத்­தான்­கு­ளம் அரசு மருத்­து­வ­மனை மருத்­து­வர் தனது கட­மை­யைத் தவ­றி­யுள்­ளார் என்­றும், முறை­யாக அவர் பரி­சோ­தனை செய்­ய­வில்லை என்­றும் சி.பி.ஐ. விசா­ரணை சொல்­கி­றது.

 சாத்­தான்­கு­ளம் அரசு மருத்­து­வ­மனை தொடக்­கப் பதி­வே­டு­கள், அடுத்­த­டுத்த மருத்­து­வப் பரி­சோ­தனை அறிக்­கை­கள், கோவில்­பட்டி சிறை­யில் அடைத்­த­போது எழு­தப்­பட்ட ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குள் முரண்­பா­டு­கள் இருப்­ப­தா­க­வும் சி.பி.ஐ. சொன்­னது. இது­தான் பழ­னி­சாமி ஆட்­சி­யின் லட்­ச­ணம் ஆகும்.இப்­ப­டிப்­பட்ட பழ­னிசாமி, இன்று அறிக்கை அர­சி­யல்நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்.

திருப்­பு­வ­னம் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய காவ­லர்­கள் ‘கொலை’ வழக்­கில் கைதாகி இருக்­கி­றார்­கள். மர­ணம் அடைந்த அஜீத்­கு­மா­ரின் தாயி­டம், தம்­பி­யி­டம் மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் வருத்­தம் தெரி­வித்­துப் பேசி­யது என்­பது மக்­க­ளாட்­சி­யின் மாண்பு ஆகும். இதெல்­லாம் தடி­தோல்­க­ளால் உணர முடியாது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய