பாம்புகள் தினம்!
இந்தியா - ராணுவ முன்னேற்றம்**: இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை விட சக்திவாய்ந்த புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது இந்திய ராணுவத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் பல வைட்டமின்கள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக பாம்புகள் தினம்
ஜூலை 16பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினம் என மனிதர்கள் நம்புகின்றனர்.
அதனால் தான் பாம்பை கண்டால் படையே நடுங்கும். பாம்பை கண்டால் தலையை நசுக்கு போன்ற பழமொழிகள் உருவாகின. பாம்பு என்றாலே கொல்வதற்குரிய உயிரினம் என்ற எண்ணம் பலரிடம் தவறாக விதைக்கப்பட்டுள்ளது.
பாம்புகள் பல்லுாயிர் பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும் வகையில் ஜூலை 16 உலக பாம்புகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. விஷமுடையவை, விஷமில்லாதவை என 2 வகையாக பிரிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சாரை, கொம்பேறி மூக்கன், வெள்ளிக்கோல் வரையன் உள்ளிட்ட பாம்பு வகைகள் பரவலாக காணப்படுகின்றன. ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் ராஜநாகங்களும் காணப்படுகின்றன.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் கரும்பு விளைச்சல் காலங்களில் கண்ணாடி விரியன் பாம்பால் கடி படுபவர்கள் அதிகம். குடியிருப்பு பகுதிகளில் சாரை, கட்டுவிரியன் பாம்புகளால் கடி படுபவர்கள் அதிகம்.பாம்புகள் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிப்பவை. பாம்புகளை கொல்வதால் விளைநிலங்களில் சுற்றி திரியும் எலிகளின் எண்ணிக்கை அதிமாகி பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கிறது. நமக்கும் உதவும் பாம்புகளை கொல்வதை நாமும் தவிர்க்கலாமே ...
பாம்பை தெரியாமல் தொட்டாலோ, மிதித்து விட்டாலோ முதலில் அது எச்சரிக்கை செய்யும். ஒவ்வொரு பாம்புகளும் ஒவ்வொரு விதமாக எச்சரிக்கை செய்யும். ஆனால் மனிதர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு கொல்கின்றனர்.
பாம்புகளுக்கு பற்கள் கிடையாது அதன் விஷம் மூலம் இரையை உட்கிரகித்து உண்ண உதவுகிறது. பெரிய இரைகளை தாக்கி உண்ணவும் உதவுகிறது. இதனால் பாம்புக்கு விஷம் இன்றியமையாதது.
அனைத்து மதங்களிலும் பாம்பு ஒரு முக்கிய அங்கம் பெறுகிறது. குறிப்பாக ஹிந்து மதத்தில் நாகம் தெய்வமாகவே வணங்கப்படுகிறது.
பாம்புகள் உணவு சங்கிலி மூலம் இயற்கையை சமநிலைப்படுத்துகிறது. முடிந்தவரை பாம்புகளை அடிக்காமல் வனத்துறையிடம் தெரிவிப்போம்.
மிக பெரிய பாம்பான அதிக விஷம் கொண்ட ராஜநாகம் முதல் மிக சிறிய வகை புழு பாம்பு (செவிட்டு பாம்பு) வரை தரைவாழ் பாம்புகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
ராஜநாகம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் காணப்படுகிறது. உயிர் சங்கிலிக்கு பாம்புகள் அதிகம் உதவுகிறது. விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளை தின்று தானியங்களை பாதுகாக்கிறது.
உணவு பற்றாக்குறையை தடுக்கிறது. பாம்பு கடிக்கு மருந்து, பாம்புகளின் விஷத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. புற்றுநோய்க்கும் பாம்பு விஷத்திலிருந்து மருந்து தயார் செய்யப்படுகிறது.

பாம்புகளை கண்டவுடன் அதை கொல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்குடன் வனத்துறைக்கு தகவல் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நமது சுற்றுப்புறத்தில் பழைய பூட்ஸ், குழாய்கள் போன்றவற்றால் அடைத்து வைக்காமல் இருந்தாலே பாம்புகளின் வருகையை தவிர்க்கலாம். அவற்றின் வாழ்வாதாரம் சுருங்கி உணவை தேடி அதற்கான வாய்ப்புள்ள இடங்களில் வரும்போது மனிதனை எதிர் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
இயற்கையின் உணவு சங்கிலியில் பயிர்களுக்கும் உணவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எலிகளை கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய இடம் வகிக்கிறது.
அவற்றை கண்டால் தேவையற்ற பதட்டம் அடையாமல் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றும் விதமாக வனத்துறை, தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்து காக்கலாம்.