பிணந்திண்ணிக் கூட்டம்!
ஸ்டெர்லெட் நாசகார ஆலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கைக் கூலிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி திருநெல்வேலி - நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது
இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா கொடுத்த புகாரில் "உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எந்தவித அனுமதி இல்லாமல் போக்குவரத்து இடையூறு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் ஸ்டெர்லைட் ஊழியர்கள், சில பணத்தை வாங்கிக்கொண்டு கலந்து கொண்டனர்.
மேலும் இவர்கள் அனைவரும் பலவேன்களில் வந்து போக்குவரத்திற்கு இடையூறாக வேன்களை நிறுத்திய டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
இதையடுத்து ஸ்டெர்லைட் அதிகாரிகள் 5 பேர், 3 வழக்கறிஞர்கள், மற்றும் 53 வேன் டிரைவர்கள், 20 ஆட்டோ டிரைவர்கள், மகளிர் குழு தலைவிகள், மீனவர் அமைப்பினர், ஆலை ஆதரவாளர்கள் உட்பட வர்கள் மீது 126 (2), 189(2) பிஎன்எஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கைக்கூலிகளை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முதன் முதலாக ஆர்ப்பாட்டம்,மனு கொடுக்கும் போதே மா.ஆ.தலைவர்,காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை போட்டு கைது செய் திருந்தால் இந்த பிணந்திண்ணி கைக்கூலிகள் ஒழுங்காக இருந்திருப்பார்கள்.
காகங்கள் கூட தன் இனத்தில் ஒன்று மின்கல விபத்தில் இறந்துவிட்டால் அதை சுற்றி வந்து கரையும்.ஆனால் இந்த பிணம்திண்ணி கைக்கூலிகள் தன் சக மனிதர்கள் துடிதுடித்து சுட்டுக் கொல்லப்பட்டும் அந்த கொலைகார அனில் அகர்வால் தூக்கிப் போட்ட பிச்சைக் காசை கவலி எடுத்து அவனுக்கு,அந்த நச்சு நாசகார ஆலையை திறந்து இன்னும் பலரை கொல்லத் துடிக்கிறார்கள்.
வேதனை.மிக வேதனை.