மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை பலரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.
பலரும், தாங்கள் தான் ஜெயலலிதாவின் மகள், மகன் என கூறி உரிமை கொண்டாடுகின்றனா். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெயர் ஜெயலலிதாவின் மகள் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.
சுனிதா என்ற அந்த பெண் தாக்கல் செய்த மனுவில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா 1980களில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கான அடிப்படையில், அவர்களுடைய சொத்துகளில் தனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.முக்கியமாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான் பெற்றோர் என நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அதேசமயம், ஜெயலலிதாவின் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகள் தனது உரிமையை மறுக்கும் விதமாக உள்ளதாகவும் சுனிதா கூறியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக தான் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக வைக்கவும் தயார் என்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மிக விரிவான விவரங்களைக் கொடுத்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வந்தபோது, நீதிபதிகள் அதிர்ச்சியுடன் சிந்தனை வெளியிட்டு – “இது கடுமையான மரபுரிமை விவகாரம், அதை சுமாராக தள்ளுபடி செய்ய முடியாது.
ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விசாரணை மேற்கொள்வோம்” என்று அறிவித்தனர்.இந்திய பைட்டர்
உலக நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் உலகின் சக்தி மிகுந்த நாடுகளாக மாறுவதற்கு, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளவும் முயற்சிக்கின்றன. இதற்காக ஆபத்தான ஆயுதங்களை உருவாக்கி சோதனை செய்கின்றன. இந்த நிலையில் இந்தியா சார்பில் புதிய ரக போர் விமானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது சீனாவிடம் இல்லாத ஒருவகை விமானம் ஒன்று கூறப்படுகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை மிக நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்ட புதிய போர்விமானம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. "மிக நீண்ட தூர தாக்குதல் விமானம்" என அழைக்கப்படும் இந்த விமானம், ஒரே இரவு முழுக்க உலகம் மற்றுமொரு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடிய வலிமையை பெறவுள்ளது.
இந்தியாவின் புதிய குண்டுவீச்சு விமானம் 12,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இந்தியா ஒரு புதிய நீண்ட தூர போர் விமானத்தை உருவாக்க உள்ளது. இது 12,000 கி.மீ தூரத்தில் இருந்து தாக்கும். இது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை கூட அடைய முடியும். எரிபொருள் நிரப்பாமல் அவ்வளவு தூரம் பறக்கக்கூடிய ராணுவ விமானம் சீனாவிடம் கூட இல்லை.
இந்த விமானத் திட்டம், சீனாவின் மிக நவீனமான ஸ்டிராடஜிக் பாம்பர் விமானங்களைவிட மேலாக அமையும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் B-21 ரைடர் மற்றும் ரஷ்யாவின் டியு-160 விமானங்களை முந்தும் திறனை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த இந்திய யுஎல்ஆர்எஸ்ஏ திட்டம், எதிர் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, எதிரி ஒரு அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலளிக்க இந்த விமானம் பெரும் சாதனையாக இருக்கும். இது இந்தியாவின் அணுஆயுதக் காப்பீட்டு கொள்கைக்கு முக்கிய ஒட்டுமொத்த ஆதாரமாக அமையும்.
இந்த விமானத்தில் வைக்கப்படும் முக்கிய ஆயுதமாக பிரம்மாஸ் புதிய ஜெனரேஷன் சூப்பர்சோனிக் குறுகிய தூர ஏவுகணை இருக்கும். இந்த ஏவுகணைகளால் பல்வேறு வகையான நிலை மற்றும் கடற்படை இலக்குகளை தாக்க முடியும். மேலும் இந்த விமானம் ஸ்டெல்த் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால் எதிரியின் ரேடார் கண்டறிய முடியாமல் தாக்குதல் நடத்தும் திறனும் அதற்கு உள்ளது.
இந்த புதிய விமானத்தின் மேம்பாட்டுக்காக இந்தியாவின் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்), எச்ஏஎல் மற்றும் எடிஎ ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. விமானத்தில் அமையக்கூடிய இன்ஜின் குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரஷ்யாவின் டியு-160 இல் பயன்படுத்தப்படும் என்கே-32 என்ஜினை போன்றதொரு தொழில்நுட்பத்தை இந்தியா தழுவ வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தின் முதன்மை வடிவமைப்பு மற்றும் சோதனைகள் 2032-ம் ஆண்டு வரை நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவைக்கு வரும் காலக்கட்டம் 2036-க்குள் இருக்கலாம் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் இந்தியாவை உலகளவில் வலுவான ராணுவ சக்தியாக மாற்றும் வாய்ப்பு உள்ளது. மேலும், சீனாவுடன் தொடர்ந்து நடைபெறும் நிலக்குறிப்பு மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் வலுப்பெறும் தாக்குதல்களுக்கிடையில், இந்தியா உலகளாவிய பாதுகாப்பு சூழலில் தனது இடத்தை உறுதி செய்யும் ஒரு முக்கியமான அத்தியாயமாக இது அமைவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...