முழுச்சங்கியாக உருமாறிய பழனி!
சற்று முன் அதிர்ச்சி.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது.
ரயில்வே கேட் மூடப்படாததால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கேட் கீப்பர் தூங்கியதால் ரெயில்வே கேட்டை மூடவில்லை.
ரெயிவே ஊழயர்களின் அலட்சியப் பணியே இக் கோர விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.மூன்று மாணவர்கள் உடல் கண்டறியப் பட்டுள்ளது.
மாணவர்கள், குழந்தைகள் உட்பட படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் பலர அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அப்போதைய முதல்வர் மோடி குஜராத்தில் பெட்ரோலியத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.21 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது.ஒரு ஸ்பூன் எண்ணெய் கூட கிடைக்கவில்லை.
இந்த நபர் எப்படி மோசடிகளைச் செய்து உயிர் பிழைத்தார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
அதனால்தான் அரசாங்கம் ECI, EVM போன்றவற்றின் உதவியுடன் தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்கிறது.
். Xதளத்தில் - Arun Shourie
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா.
முழுச்சங்கியாக உருமாறிய பழனி!
அதிமுகவைப் பொறுத்த வரையிலும் எந்தவொரு முக்கியமான காரியத்தை தொடங்கும் போதும் சென்னை மெரினாவில் இருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செய்வது என்பது மரபாக இருந்து வந்தது.
அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் இருந்துதான் அதிமுகவின் எந்தவொரு நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு வந்தன. அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இதை கடைப் பிடித்து வந்தார். ஓ.பன்னீர்செல்வமும் இதை கடைப்பிடித்து வந்தார்.

சசிகலா சிறைக்கு சென்றபோது கூட மெரினாவில் இந்த நினைவிடங்களுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் சென்றார். பழனிசாமியும் அதிமுகவின் இந்த மரபினை பின்பற்றி வந்தார். ஆனால், இன்று அந்த மரபினை மீறி இருக்கிறார்.
பாஜக சகவாசம்தான் அவரை இப்படி எல்லாம் மாற்றி இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், ’’பாஜக என்ற எலிப் பொறிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவிக்கிறார் பழனிசாமி’’ என்கிறார் சிபிஐ இரா.முத்தரசன்.
உண்மைதான், அதிமுக மரபை உடைத்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கையில் எடுத்திருக்கிறார் பழனிசாமி.
இன்னும் சொல்லப்போனால் முழு சங்கியாகவே மாறிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

கோவை முதல் பட்டுக்கோட்டை வரையிலும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை பிரச்சார பயணத்தை மேற்கொள்ளும் பழனிசாமி, இன்று கோவையில் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு தொடங்க வேண்டிய ‘ மக்களைக் காப்போம்!
தமிழகத்தை மீட்போம்!’ எனும் பிரச்சார பயணத்தை, கோவை மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறார் பழனிசாமி. இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புறக்கணிப்பு வேலையை செய்து வருவதால் பழனிசாமி மீது அதிமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறை வேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளியில் பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா எடுத்தனர்.
இந்த பாராட்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. பழனிசாமி படம் மட்டுமே பெரிதாக இருந்தன. அந்த பாராட்டு விழா அழைப்பிதழிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தவிர்த்திருந்தார் பழனிசாமி. இது அதிமுகவில் பெரிதாக வெடித்தது.
அதிமுக சீனியர் செங்கோட்டையன் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அது பெரும் பிரச்சனையாக சில காலம் அதிமுகவில் நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சார பயணத்திலும் அதிமுக முன்னோடிகள் நினைவிடங்களுக்கு செல்லாமல் பழனிசாமி சென்றதால், அவருக்கு தான் என்கிற அகந்தை அதிகம் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் இல்லாமல் தனக்கு தனிப்புகழ் தேட நினைக்கிறார். அது ஒரு நாளும் நடக்காது. அதிமுக என்றால் அது எம்.ஜிஆர்தான். அடுத்து ஜெயலலிதாதான் நினைவுக்கு வரும் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
பாஜக விடம் கட்சியை அடகு வைக்கவில்லை.மொத்தமாகவே விற்று விட்டார் என அதிமுக உண்மைத் தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் மொத்த இறக்குமதியில் 40% வரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

* ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. உக்ரைன் போருக்கு முன் 2 சதவீதத்தில் இருந்த இறக்குமதி இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
* ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட ரஷ்யா இறக்குமதி அதிகமாகும்.
* இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 5,32,700 பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இருக்கிறது.
இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் மூலம் சுமார் ரூ.6,850 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல் மீதான கொள்ளை லாப வரியை நீக்கி விட்டது. கடந்த 2022 ஜூலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் விமான பெட்ரோலுக்கு ரூ.6 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.13 எனவும் இந்த கொள்கை லாப வரி விதிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், இந்திய மக்களுக்கு கச்சா எண்ணெய் குறையும்போது அதற்கான பலன் கிடைக்கும் வகையில் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவுக்கு ஏன் 500 சதவீத வரி?
குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதுதொடர்பாக செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்,’ எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புடினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்’ என்று கூறினார்.
* ஒன்றிய அரசுக்கு ரூ.4,32,394 கோடி லாபம்
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், சர்வதேச போர் பதற்றம் இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.20 வரை குறைத்திருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரிகளால் ஒன்றிய அரசுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரிகளால் ரூ. 4,32,394.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
* நம்பர் 1 ரஷ்யா தான்
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யா இருக்கிறது, இரண்டாவது இடத்தில் ஈராக் மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் 3வது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இதில் பெரும்பாலான எண்ணெய் நாம் ரஷ்யாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.
* உலகில் நம்பர் 2 இந்தியா
இந்தியா தரம்பிரித்த பெட்ரோலிய பொருட்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரம்பிரித்த பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஐரோப்பா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா.உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக அளவில் இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் அங்கு விட இந்தியாவில் விலை அதிகம்.அனைத்து லாபங்களும் அம்பானியின் பையில்.