ஏன் தேவை?, எதற்குத் தேவை
"இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்””ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான பாடல் மற்றும் லோகாவை இன்று இபிஎஸ் வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்று ஆஜராக போலீசார் சம்மன்.மதுரை ஆதீனம் சார்பில் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராக அனுமதி மறுப்பு - இன்று விசாரணைக்கு நேரில் வர போலீசார் உத்தரவு.
ஏன் தேவை?,
எதற்குத் தேவை??
தமிழ்நாட்டைப் போலவே மராட்டியமும் இந்தித் திணிப்பை எதிர்த்து தாய்மொழியைக் காத்து நிற்கிறது. தமிழ்நாட்டைப் போலவே வலுவான போராட்டத்தால் இந்தித் திணிப்பை விரட்டி அடித்துள்ளது மராட்டியம்.
எந்த வழியிலாவது இந்தியை திணிக்க வேண்டும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ‘தேசிய கல்விக்கொள்கை’ என்பதும் அதில் ஒரு வடிவம்தான். அதனால்தான் தமிழ்நாடு இந்த கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் முயற்சிப்பது போலவே மூன்றாவது மொழியாக இந்தியை திணித்து விடலாம் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வரத் திட்டமிட்டது மத்திய அரசு. இதற்காக மகாராஷ்டிரா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் இந்தி மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மராட்டியத்தின் கடும் எதிர்ப்பால் சமாளிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை உத்தரவை திரும்ப பெற்றுவிட்டது மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தாங்கள் நினைத்தை செய்துவிடலாம் என்ற நினைப்பில் மகாராஷ்டிராவில் இந்தியை திணித்து விட நினைத்து முடியாமல் வெட்கி தலைகுனிந்து நிற்கிறது பாஜக.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் மராத்தி, ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் மூன்றா கட்டாய மொழிப் பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிட்டது பாஜக கூட்டணி அரசு.
இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் ‘கட்டாயப்பாடம்’ என்பதை ‘விருப்பப்பாடம்’ என்று மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 20% மாணவர்கள் விரும்பினால் இந்தியைத் தவிர வேறு ஏதேனும் ஒரு மொழியைக் கற்கலம் என்று அரசாணை திருத்தப்பட்டது.

இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், மராட்டிய மொழியின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்றும் எதிர்ப்புகள் வலுத்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த அரசாணைக்கு எதிரான போராடின.
அதிகாரப்போட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாக்கரே சகோதரர்கள் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக இணைந்தார்கள். இதற்காக மும்பையில் பெரும் பேரணிக்கு நாள் குறித்தார்கள். ஜூலை 5ம் தேதி (இன்று) .
எதிர்ப்புகள் வலுப்பதை கண்டு கடந்த 29ஆம் தேதி அன்று மும்மொழிக் கொள்கை தொடர்பான இரண்டு அரசாணைகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார் மாநில முதல்வர்.

இதையடுத்து உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் பேரணியை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆனாலும், அரசாணை திரும்ப பெறப்பட்டு விட்டதால் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தை மும்பையில் நடத்தினர். இதில் பேசிய ராஜ்தாக்கரே, ‘’நாங்கள் இந்துக்கள்; இந்தி அல்ல. ஒரு போதும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம். இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திக்கு இங்கே என்ன தேவை இருக்கிறது? மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்று பேசினார்.
’’ இது மராட்டியர்களின் ஒன்றுமைக்கு கிடைத்த வெற்றி’’ என்றார் உத்தவ் தாக்கரே.
கடந்த 2005ஆம் ஆண்டு பிரிந்த தாக்கரே சகோதரர்கள் மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த வெற்றி பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பங்கேற்றது மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.