ஒன்றும் சொல்லமாடோம்!
*எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.மீனவர்களை நீண்ட காலமாக சிறையில் வைப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களையும், அவர்களது மீன் பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



*முரசொலிக்கு அகவை 84!.தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை ஏன் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பதில் தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட தேவையில்லை என்றும், அப்படி வழங்க தேர்தல் ஆணைய சட்ட விதிமுறை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும், வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
விதிகளை மீறாதே!சமூக ஊடக உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் மெட்டா (Meta), இந்தியாவில் 6.8 மில்லியன் வாட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயன்பாட்டின் விதிமுறைகள் மற்றும் சமூக நெறிமுறைகளை மீறி, மோசடிகளில் ஈடுபட்டதால், இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக அந்த மோசடி முயற்சிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட பல்வேறு புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் தானாகக் கண்டறியப்பட்ட கணக்குகளே பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளதாக மேட்டை தெரிவித்துள்ளது.
OTP-based verification scams, spam messages மற்றும் அடிக்கடி பணம் கேட்கும் போலியான மெசேஜ்கள் போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இதை செயல்படுத்தியுள்ளது மெட்டா.
மோசடிகள் எப்படி செயல்படுகின்றன?
மோசடியில் ஈடுபடும் நபர்கள், OpenAI இன் ChatGPT-ஐப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை உருவாக்குகிறார்கள்: இந்தச் செய்திகள் பெரும்பாலும் பயனர்களை டெலிகிராம் செயலிக்கு வழிநடத்துகின்றன, அங்கு அவர்கள் ஒரு குழுவாகக் கூடி, டிக்டோக்கில் வீடியோக்களை லைக் செய்வது போன்ற எளிய பணிகளை வழங்குகிறார்கள். மேலும் தாங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளார்கள் என்பதை அதே குழுவில் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் திட்டத்தில் நம்பிக்கையை வளர்க முயல்கிறார்கள். பின்னர், கிரிப்டோ கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய தூண்டுவதாக மெட்டா தெரிவித்துள்ளது.

மெட்டா கூறும் ஆலோசனைகள்
இந்த மோசடிகளை தடுப்பதற்காக, வாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய பாதுகாப்பு அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. குழு பற்றிய தகவலை சுருக்கமாக இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும், சேமிக்கப்படாத எங்களுக்கு செய்திகளை அனுப்பும் பொது, பயனர்களுக்கு எச்சரிக்கையும் அளிக்கிறது. பயனர்கள் மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க, மெட்டா பின்வரும் ஆலோசனைகளை வழங்குகிறது:
- புதிய செய்திகளுக்கு பதிலளிப்பதற்கு முன் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
- எல்லா செய்திகளையும், குறிப்பாக பணம், பரிசுகள் அல்லது பின் குறியீடுகளுக்கான கோரிக்கைகளை கவனமாக பரிசீலியுங்கள்.
- அதிக ஊதியத்திற்கு உறுதியளிக்கும் நம்பத்தகாத வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
- மோசடி செய்பவர் தன்னை உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் எனக் கூறினால், முன்பு சேமிக்கப்பட்ட எண்ணுக்கு, SMS அல்லது தொலைபேசி அழைப்புகள் போன்ற பிற வழிகள் மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த நடவடிக்கை, வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், சமூக ஊடகங்களில் விரைவாக பரவும் இணைய மோசடிகளை குறைக்கும் நோக்கத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் தாங்கள் பெறும் ஒவ்வொரு மெசேஜையும் விழிப்புணர்வுடன் அணுக வேண்டும் எனவும் , சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்படுகிறது.