இருள் சூழ்

இந்திய மக்களாட்சி?

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், நீக்கத்துக்கான காரணத்தையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.


தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு 

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மிக நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியடைந்த 4 மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி விசாரிக்கும்.
.2024 நாடாளுமன்றத் தேர்தலில் 79 தொகுதிகளில் தீர்ப்புகள் திருடப்பட்டுள்ளது.திருத்தப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பரகலா பிரபாகர் அறிக்கை.
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பத்திரிக்கையாளர்களை மிரட்டும் சுரேஷ்கோபி. "ஆடிகார் டாக்ஸ் குறைக்க அவர் பாண்டிச்சேரிக்காரன், திருவனந்தபுரத்தில் வீடு உள்ளதால் திருவனந்தபுரக்காரன், கொல்லத்திலும், திருச்சூரிலும் என்று கள்ள ஒட்டுக்காரர்" என்று கேரளா பத்திரிக்கைகள் சுரேஷ் கோபியை விமர்சிக்கின்றது.








இருள் சூழ் இந்தியா?

பாஜகவுக்குச் சாதகமான இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.

 இதற்கு, அசாம் மாநி லத்தின் துப்ரி மாவட்ட மோசடி ஒரு சிறந்த உதாரணம். இது இந்தியா முழுவதும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டுச்சதியை அம்பலப்படுத்துகிறது.

துப்ரி மாவட்டம் பைகான் ரிசர்வ் வனப்பகுதி யில் 850 ஏக்கர் நிலப்பகுதியில் வசித்து வந்த வங்க மொழி பேசும் 50,000 இஸ்லாமிய மக்களின் வீடு களை பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்து அகற்றியது. இந்தச் செயலை நில ஜிஹாத் என்ற பெயரில் நியாயப்படுத்தும் பாஜகவின் முயற்சி,  மதவெறுப்பு அரசியலின் வெளிப்பாடு ஆகும். 

அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தவித்துக் கொண்டிருக்கையில், அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக, அவர்கள் பெயரிலேயே படிவம் 7 சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இது வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கொடூரமான அத்துமீறிய செயலாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14ஆவது பிரிவு சமத்துவத்தையும், 326ஆவது பிரிவு வாக்கு ரிமையையும் வழங்குகிறது. 

ஆனால், துப்ரியில் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆங்கிலத்தில் குறுஞ் செய்தி மட்டுமே அனுப்பிவிட்டு பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உள் நோக்கத்துடன் அனுப்பப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ்., கூட்டுச் சதியின் ஒரு பகுதியே.

இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளின்படி சட்டவிரோ தமாகும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை  நீக்குவதற்கு முன் சம்பந்தப்பட்டவருக்கு விளக் கம் அளிக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை பாஜக திட்டமிட்டு மீறியுள் ளது. தேர்தல் ஆணையம் கடந்த காலத்தில் ஒரு சுதந்திரமான அமைப்பாக இருந்து வந்தது.

ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும், பாஜக வின் ஒருபிரிவாக தேர்தல்ஆணையம் மாறிவிட்ட தோ என்ற ஐயமே எழுகிறது.

 துப்ரி விவகாரத்தில் அதன் செயல்பாடு சந்தேகத்தை மேலும் வலுப் படுத்துவதாக இருக்கிறது. படிவம் 7 தாக்கல் செய் யப்பட்டால், ஆணையமே நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இங்கு எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை. 

மாறாக, தேர்தல் அதிகாரியே பெயர்க ளை நீக்கியதை நியாயப்படுத்துவது, ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதை உறுதிப் படுத்துகிறது.

பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ஏற்கெனவே நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த திருத்தங்கள் குறித்து  உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தனது கவலையை  தெரிவித்துள்ளது. 

வாக்காளர் பெயர்களை நீக்கு வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. துப்ரி நிகழ்வு கள், ஒரு சமூகத்தினரின் வாக்குரிமையைப் பறிக்க அரசும் அதன் இயந்திரங்களும் கூட்டுச்சேர் வதை வெளிப்படுத்துகிறது.

 இந்திய ஜனநாயகத் தின் எதிர்காலத்திற்கு இது ஒரு இருண்ட அத்தி யாயம். இதனைத் தடுத்து நிறுத்தி அகற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி