விண்வெளி நாயகன்?
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு நுரையீரல் தொற்று சிகிச்சை.

விண்வெளி நாயகன்?
இமாச்சல் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரின் சொந்த மாநிலம் .இதனால் விண்வெளி தினம் கொண்டாட அவரை ஒரு பள்ளி சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.
அங்குபோன அனுராக் தாகூர் மாணவர்களிடையே தன் அறிவுத்திறனைக் காட்ட விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?எனக் கேட்க அவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் என்றுள்ளனர்.
அதை தவறு என்றவர்.முதலில் சென்றவர் அனுமன்தான் என்று கூற அனைவரும் அவரின் அறிவைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேசக் கூட இயலாமல் நின்றனர்.
மாணவர்களே தவறாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத்தின் யூரி காகரின்.
ஆம்ஸ்ட்ராங் 1969ல் விண்வெளிக்குச் சென்று நிலவில் நடந்த முதல் மனிதரானார்.
ஆனால், அனுராக் அதைத் திருத்தாமல் புராணக் கதையைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
அரசியலமைப்பின் பிரிவு 51 A (h) அரசு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அனுராக் மேலும் கூறுகையில், “அனுமனாக இருக்கலாம் . இது நமது பாரம்பரியம், அறிவு, கலாசாரம் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வளவு முக்கியமானவை என்பதை காட்டுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றித் தெரியாமலே, பிரிட்டிஷ்காரர்கள் கற்றுத்தந்தவற்றிலேயே சிக்கிக்கொண்டுவிடுகிறோம்.
பள்ளி முதல்வருக்கும், எல்லோருக்கும் எனது வேண்டுகோள் – பாடநூல்களுக்கு வெளியே சிந்தியுங்கள். நமது தேசம், நம் பாரம்பரியம், நம் அறிவு ஆகியவற்றைப் பாருங்கள்.
அந்தக் கோணத்தில் நீங்கள் பார்ப்பீர்களெனில், பார்ப்பதற்கு நிறையவே கதைகள் இருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
அவர்கூட இன்னும் அதிகம் சிந்திக்க வேண்டும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
அனுமனை கூறியவர் நம் நாரதரை மறந்து விட்டார்.
சதாகாலமும் நாராயணா என ராமநாமத்தை உச்சரித்து வானத்திலே ஒவ்வொரு லோகமாக சஞ்சாரிக்கும் அவர்தான் முதல் விண்வெளிநாயகன் என எண்ணுகிறேன்.
ஒருவேளை அனுமன் ,நாரதரை விட முதிர்ந்தவரோ?
அல்லது சிவலோகம் ,வைகுண்டம் போற்றவற்றில் இருந்து இந்த பூலோகத்திற்கு அடிக்கடி மனிதர்களுக்கு வரம்,வீடுபேறு தர வரும் சிவா,விஷ்ணு போன்றவர்கள் விண்வெளி நாயகர்களாக இருக்கிறார்கள் என்பதை ஏன் மறந்தார் தாகூர்.
ஒருவேளை மாணவர்களுக்கு இதே போதும் என்றி எண்ணி இருப்பார்.
நம் விண்வெளி நாயகன் கமல்ஹாசனைக் கூறலாம்.ஆனால் அவருக்கு அனுமனை விட வயது குறைவு.
விட்டு விடலாம்.
அனுராக் தாகூர் பிரிட்டீசாரால் மறைக்கப்பட்ட பாரதப் பெருமைகளை "முதல் மண்டை மாற்று அறுவை செய்யப்பட்ட விநாயகர்,புஷ்பக விமானம்,சிவா,விஷ்ணு போன்றோர் திடீரென நினைத்த இடத்தில் தோன்றி,மறையும் தொழில் நுட்பம்,ஒரே உடலில் பாதி பெண்,பாதி ஆணாகும் சூட்சமம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கலாம்.
பரவாயில்லை.வச்சு செய்வோம்.
ஜெய் ஸ்ரீராம்.
பாரத் மாதாக்கி ஜெய்.
அனுராக் தாக்கூருக்கி ஜெய்.
கோமோ சேப்பியன்?
கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்த மூத்த மனித இனத்தின் மரபணுவை கொண்ட அபூர்வ மனிதரும் மதுரை பகுதியில்தான் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யச் செய்தி.

மதுரை உசிலம்பட்டி அருகே ஜோதி மாணிக்கம் என்ற குக்கிராமம் உள்ளது. இவ்வூரில் 1977ல் பிறந்தவர் விருமாண்டி. அமெரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்த பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் இணைந்து, தங்கள் ஆய்வில் இம்மனிதரை கண்டறிந்தனர்.
அமெரிக்காவில், இம்மனிதர் குறித்து புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது. மனித இனம் எப்போது தோன்றியது எனும் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும், மனிதன் தோன்றியது மத்திய ஆப்ரிக்கா எனும் கூற்றும் ஏற்கப்பட்டிருக்கிறது.
ஆய்வாளர்கள் இம்மனித இனத்தை, ‘கோமோ சேப்பியன்’ என்கின்றனர். புதிய கற்கால துவக்கத்தில், மத்திய ஆப்ரிக்காவில் இருந்து, மக்கள் குழுக்களாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
தமிழக பகுதிகளுக்கும் வந்தனர். ஆப்ரிக்காவில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதரின் மரபணு எம்.160 என்பது கண்டறியப்பட்டது. இம்மனித மரபினர் ஆப்ரிக்காவில் இன்றும் வாழ்கின்றனர்.