நீதிமன்றமும் அரசியலும்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வருகிற மக்கள் நலத்திட்டங்கள் பல, தேசிய அளவில் ஒவ்வொருவரும் மாநிலமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் இல்லாத தேர்தல் வாக்குறுதிகளே இல்லை என்ற அளவிற்கு, திராவிட மாடல் அரசின் திட்டம் இந்திய அளவில் மக்கள் ஈர்ப்பு திட்டமாக அமைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாட்டளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

 இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர், இத்திட்டத்தை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், மக்கள் நலப்பணியை உயிர்ப்போடு செய்து வரும் தி.மு.க அரசு, மக்களை மனங்களை மட்டுமல்ல, வழக்கையும் வென்றெடுத்துள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட தடை நீக்கம்தான், திமுக வெற்றிக்கான தொடக்கப்புள்ளி! : பி.வில்சன் திட்டவட்டம்!

தமிழ்நாடு அரசின் திட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' பெயரைப் பயன்படுத்திய ஜி.ஆர்.சுவாமிநாதன் இருக்கும்  சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான பி.வில்சன், “2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு, தொடக்கப்புள்ளியாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமைந்துள்ளது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, “அரசியல் தலைவர்களின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது என்பது நாடு முழுவதும் பின்பற்றப்படும் நிகழ்வு.

மனுதாரர் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு மனு தாக்கல் செய்துள்ளார். இது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும்.

அரசியல் சண்டைக்கு நீதிமன்றங்களை பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்தாவிட்டால் அவதூறு வழக்கு தொடரலாம்” என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எடுத்துரைத்தார்.




பா.ஜ.க, செய்தி தொடர்பாளர்

உயர்நீதிமன்ற நீதிபதி!

விளங்குமா நீதி?

ஒன்றியத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க, தனக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பதவி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை கையூட்டாக அளித்து வருகிறது. 

அதற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்கள் உகந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிகாரிகளுக்கு உயர் பொறுப்புகள் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரிகளாகவும் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற புதிய சலுகையை வெளிப்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு.

அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் தீவிர செயல்பாட்டாளராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் விளங்கி வந்த வழக்கறிஞர் ஆர்த்தி சாத்தே, தற்போது உச்சநீதிமன்றத்தால் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க நிர்வாகியிலிருந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரை! : மகாராஷ்டிரத்தில் வலுக்கும் கண்டனம்!

இதனைக் கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி மூத்த தலைவர் ரோகித் பவார், “ஆளும் பா.ஜ.க கட்சிக்கு ஆதரவாக வழக்கு விசாரணை செய்து வந்த ஆர்த்தி என்பவரை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.

அரசியல் பின்னணி இருக்கும் ஒருவர், எப்படி நடுநிலைத்தன்மையோடி வழக்குகளை கையாளமுடியும். அவ்வாறு நடுநிலைத்தன்மை வகிக்க முடியாத ஒருவர் எப்படி நீதித்துறையில் தலைமை பொறுப்பு வகிக்க முடியும்?

இந்த பணி நியமனத்தை அரசும், நீதித்துறையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி