நண்பனா? நாடா??

 ZEE தொலைக்காட்சிஅதிபர் சுபாஷ் சந்திராவங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 6500 கோடி ரூபாய். மோடியை சந்தித்தவுடன் அவனுக்கு கிடைத்த கடன் தள்ளுபடி 5000 கோடி ரூபாய்.எல்லாம் வங்கியல் மக்கள் சேமிப்பு.

பீகார் வாக்காளர் பட்டியல்.-

--------------------------------

வாக்காளர் பெயர்~ பிரியம்கா ராஜ்

கணவர் பெயர்~ வோட்டர் இடி கார்ட்

பெயர் ~ குமாரி ஷில்பி

கணவர் பெயர்~ ஹஸ்பென்ட் ஹஸ்பென்ட்

பெயர் ~ நேஹா குமாரி

அம்மா பெயர்~ எலக்ஷன் கமிஷன் ஆப் இந்தியா.

பாரதீய தேர்தல் ஆணையம் தயாரித்த துல்லிய வாக்கார் பட்டியல்.

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபிக்கிறது: எடப்பாடிக்குடி.ஆர்.பி.ராஜா பதில்.

அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இந்தோனேசிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைப்பு: 3 பேர் பலி; 5 பேர் படுகாயம்.

கேரளா பத்தனம்திட்டா,  சாலையில் முதியவர் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டார்.

ஜெர்மனியில் தமிழர்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு .
மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு.100 பேரில் 98 பேர் உயிரிழப்பு; குட்டை, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; தமிழ்நாடுஅரசுஅறிவுறுத்தல்

இஸ்ரேலிய தாக்குதலில் ஏமனின் ஹவுத்தி அரசாங்கத்தின் தலைவர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்களும் கொல்லப்பட்டனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் வாகனத்தில் மது அருந்தி கொண்டே சென்ற இந்து முன்னணியினர்!






நண்பனா? நாடா??

தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோள், தமிழ்நாட்டுக்கானது மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் நன்மைக்காகவும்தான்!


“அமெரிக்காவின் 50 விழுக்காடு வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.


ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.


இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வந்த பிறகு அவர் செய்யும் பல செயல்கள் அந்த நாட்டை மட்டுமல்ல; மற்ற நாடுகளையும் அதிகம் பாதித்து வருகிறது.


குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 விழுக்காடு வரியை அதிகப்படுத்தினார்.


நேற்றைய தினம் கூடுதலாக 25 விழுக்காடு வரியை அதிகரித்துள்ளார். இதன்காரணமாக, அமெரிக்காவுவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி இனி செலுத்த வேண்டும்.


இந்தியாவைப் பற்றிய மோசமான பிம்பத்தை உருவாக்குவதில் டிரம்ப் கவனம் செலுத்தினார். “அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள 'மோசமான நாடுகளில்' ஒன்று” என்று இந்தியாவைப் பட்டியலிட்டார் டிரம்ப்.


இதன் காரணமாக இந்தியா மீது 27 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதுவரை 2 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், “இந்தியா மீது 27 விழுக்காடு வரி போடப்படும்" என்று சொன்னார்.


வர்த்தகக் கொள்கைகளைப் பொறுத்தவரை, 'இந்தியா மிகவும் கடினமாக நடந்துகொள்கிறது' என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியச் சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடினமாக்குகிறது என்று குறிப்பிட்ட அவர், “இந்தியா மிக மிக கடுமையாக நடந்து கொள்கிறது. பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்து சென்றிருந்தார்.


அவர் எனக்கு சிறந்த நண்பர். நான் அவரிடம், 'நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை' என்று சொன்னேன். அவர்கள் 52 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கிறார்கள்.


நாம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை" என்று அப்போது டிரம்ப் சொன்னார். இப்படிப் பேசியதன் மோசமான விளைவுகளைத் தான் இனி பார்க்கப் போகிறோம்.

இவ்வளவு சொல்லிய டிரம்ப்புக்கு தொடக்கத்தில் சரியான எதிர்வினையை மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் செய்யவில்லை. பேச்சுவார்த்தைகள் நடத்தியது பா.ஜ.க. அரசு. அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில்தான் 50 விழுக்காடு வரியை உறுதி செய்து விட்டார் டிரம்ப்.


இந்தியாவைப் பற்றி டிரம்ப் கவலைப்பட மாட்டார். ஆனால் மோடி கவலைப்பட வேண்டாமா?

அவர் மெத்தனமாக இருந்துகொண்டதுதான் இன்று அபாயம் ஆகிவிட்டது.


இந்த வரிவிதிப்பின் மூலமாக இந்திய ஏற்றுமதியின் முதுகெலும்பை முறிக்கும் செயலை டிரம்ப் செய்துள்ளார். இந்திய நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 13 விழுக்காடு அமெரிக்காவுக்குச் செல்கிறது. இது முழுக்க முழுக்க முடங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இவை மொத்தமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சந்தையை மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளும்.


ஜவுளிகள், துணிகள், ஆயத்த ஆடைகள், மீன், இறால், ரத்தினம், தங்க நகைகள், தோல்கள், காலணிகள், எஃகுப் பொருட்கள், அலுமினியம், இயந்திரங்கள், இயந்திரப் பொருட்கள் ஆகியவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி ஆகிறது. இதன் உற்பத்தியானது இந்தியாவில் இனி பாதிக்கப்படும்.


அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். 6.5 விழுக்காடு வளர்ச்சி என்று பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. அதில் பாதிப்பு ஏற்படும். 5.6 விழுக்காடாகக் குறையலாம் என்றும் சொல்லப்படுகிறது.


இதில் தமிழ்நாட்டின் நிலைமையும் நெருக்கடிக்கு உள்ளாகும். தமிழ்நாடு மின்னணு உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது.


செல்போன்களுக்கான உதிரி பாகங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. தமிழ்நாட்டில் இருந்து இறால் ஏற்றுமதி ஆகிறது. கோவையில் இருந்து ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திர உதிரிபாகங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.


திருப்பூரில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி ஆகின்றன என்றால் அதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. டிரம்பின் இந்த வரி விதிப்பால் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள பொருட்கள் தேக்கம் அடையும்.


புதிய உற்பத்தியும் குறையும். தொழிற்சாலைகளை மூட வேண்டியதாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும்.


இவைபற்றி எல்லாம் பா.ஜ.க. அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏற்றுமதியில் சிறந்த தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமானது பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.

இதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.


தனது நண்பருக்காக நாட்டின் வளர்ச்சியைக் காவு கொடுக்கப் போகிறாரா மோடி?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி