கட்டாயத் தேவை!

 கட்டுப்பாடுகள் அவசியம்

இந்தியாவில் ஆண்டுதோறும் 20,000 பேர் நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் இறப்ப தாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

சமீ பத்தில், சென்னையில் பிட்புல் நாய் கடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நாயை வளர்த்து  வந்த பெண் ஒருவரும், நாய்க் கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் கோவையில் இரண்டு பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டு மல்ல, தெருவில் திரியும் நாய்களாலும் குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார் கள். சில நேரங்களில் கால்நடைகளையும் அவை விட்டுவைப்பதில்லை.

 தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் அவை மனிதர்களை கடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளால்  அவற்றை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று ஒரு சாராரும்  அடைக்கக்கூடாது என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர்.

பொது இடங்களில் பலர் உணவளிப்பதால் நாய்களின் பெருக்கம் அதிகரித்து அடிக்கடி அவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தலைநகர் தில்லியிலும் நாய்க் கடி அதிகரித்த காரணத்தால்  தெருநாய்க ளை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கையை அடுத்து தற்போது அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.  தெருநாய்களுக்கு பொது இடங்க ளில் உணவளிக்க கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. ரேபிஸ் அல்லது ஆக்ரோஷமான நடத்தை  கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத் தக்கது.

அதேபோன்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை  முறையாக பராமரிப்பதும் அவற்றுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடுவதும் அவசியம். நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பை  தடுக்க இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம்.

 வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பொது இடங்க ளுக்கு கொண்டு செல்லும் போது அவற்றின் வாய் கவசத்தால் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆபத் தான மற்றும் ஆக்ரோஷமான நாய் வகைகளை வீட்டில் வளர்க்க அனுமதிக்கக்கூடாது.

தெருநாய்கள் பல்கி பெருகியுள்ளதால் அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த  இனப் பெருக்க  கட்டுப்பாடுகள் அவசியம். மேலும் இந்த பணியை உள்ளாட்சி அமைப்புகள் மீது மாநில அரசு சுமத்துவதால் அவற்றின்  நிதி பற்றாக் குறை யால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

  எனவே சிறப்பு நிகழ்வாக கருதி மாநில அரசுகளே இதற்கான செலவை மேற்கொள்ளவேண்டும்.

நாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில்  ரேபிஸ்நோய் தடுப்பு மருந்து போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்கவேண்டும்.

 தெருநாய்களின் நட மாட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.

எந்த நாய்,எப்போது யாரைக் கடிக்கும் எனத் தெரியாத நிலை.

இந்நிலையில் பீட்டா சொன்னது,மேனகா காந்தி சொன்னார். செரிமானமற்ற பணமுதலை குடும்பப்பெண்கள் நாய்காக்க மெழுகுவத்தி ஏந்தி  ஊர்வலம் போனார்கள் என்று யோசிக்காமல் துரித நடவடிக்கை தேவை.

ரேபிசில்  குரைத்து அகோர மரணம் அடைவது ஏழைக்கள்,ஒன்றுமறிய மழலைகளும்தான்.

மாளிகை வாசிகள் அல்ல.













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி