அடிமைத்தன உச்சம்!

 ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக், தனது 79-வது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவை அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, சத்யபால் மாலிக், சர்க்கரை நோய் சார்ந்த சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.


மே 11 அன்று சிறுநீர்ப்பாதை தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செப்டிக் ஷாக், நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்புகள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.


உத்தரப் பிரதேசத்தின் பாக்மத் பகுதியைச் சேர்ந்த சத்யபால் மாலிக், 1970-களில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மீரட் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவராக மாலிக், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு பிள்ளையார் சூழி போட்டுத் தொடங்கினார்.


கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்தில், அவர் பல கட்சிகளில் பயணித்துள்ளார். 1980-ல் சரண் சிங் தலைமையிலான லோக் தளத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1984-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1986-ல் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினரானார். அரசியலில் வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அறியப்பட்ட மாலிக், தனது அரசியல் வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.


சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக அவர் இருந்த காலத்தில்தான், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டன.


அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை லோதி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளராக உள்ள ஆர்த்தி சாதே என்பவரை,மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 4 பேர் உயிரிழப்பு. காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்

தான் பாஜகவுக்கு அடிமை இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் கருத்து

இந்தியா மீதான வரியை அடுத்த 24 மணி நேரத்தில் உயர்த்த திட்டம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்.

இந்தியா மீதான வரி உயர்வு குறித்த டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கண்டனம். வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றும் கருத்து.


ஆரியர்கள் வந்தேறிகள். அவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. அதனால் தான் செத்தவர்களை ஆற்றில் வீசினார்கள். அதன் தொடர்ச்சி தான் காசியில் பிணத்தை கங்கையில் வீசுவது.

ஆனால் திராவிடர்கள் சிந்து சமவெளியில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நிலம் இருந்தது. இறந்தவர்களை புதைத்தார்கள்.  பட்டினத்தார் கடவுள் இல்லை. வள்ளலார் கடவுள் இல்லை. சாய் பாபாக்கள் பங்காரு அடிகளார் எப்படிக் கடவுள். கடவுள் இல்லை என்பது தமிழரின் ஆன்மீகக் கோட்பாடு.

-சுகி சிவம்.

பாஜக ஆளும் 16-மாநிலங்கள்

தமிழ் நாட்டை விடஅதிகமா கடன் வாங்கி இருக்குமோடி அரசு அள்ளி அள்ளி கொடுத்தும் அவங்க தான் அதிகமா கடன் வாங்கிட்டு இருக்காங்க-பொருளாதார கணிப்பு தகவல்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக்கோரி ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டம். கராச்சியில் போலீஸ் தடுத்ததால் இருதரப்பு இடையே மோதல்

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரிடமும் பூசாரிகள்,தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் : கோவில் நிர்வாகம்.













அடிமைத்தன  உச்சம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி