இயற்கையின் எச்சரிக்கை!
அரசு திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை - உச்சநீதிமன்றம்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகில் ரோஹத்சி, வில்சன் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை இன்று விசாரித்தது.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
’உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' போன்ற திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு நலத்திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிரான மனு தேவையற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. அனைத்துக் கட்சிகளும் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபடுவதை மனுதாரர் எதிர்க்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு திட்டத்தை மட்டும் எதிர்த்ததன் உள்நோக்கம் கேள்விக்குரியது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என்றால், அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்க வேண்டும். அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது.
இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மனுத் தாக்கல் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.உச்சநாதிமன்ற வழிகாட்டலைப் பற்றி உணராமல்,தி.மு.க எடுத்துக் கூறியும் தடை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு என முறையீடு செய்த சி.வி.சண்முகத்துக்கு 20லட்சம் அவராதம் விதிப்பதாக கூறிய நீதிமன்றம் அவர் வழக்கை திரும்ப பெறுவதாக மன்னிக்கும் படிம வேண்டியதால் 10 லட்சம் அபராத்த்துடன் விட்டனர்.
கலைஞரின் ஏழாமாண்டு நினைவு!
சென்னை மாநகரில் பெண் காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., காவலர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரவு நேர ரோந்துப் பணியில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவு.
50 சதவீத வரி விதிப்பு என்பது அநியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க வைக்கும் மிரட்டல் முயற்சி. பிரதமர் மோடி, இந்திய மக்களின் நலன்களை பலியாக்கிவிடக்கூடாது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தல் .
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியது தமிழ்நாடு. திமுக ஆட்சியில் தமிழ்நாடு அபரிமித வளர்ச்சி பெற்றிருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் உறுதியானது.
நெருக்கடிகள், அவதூறுகளை கடந்து பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். இன்னும் அதிகமான உயரத்தை திராவிட மாடல் 2.0 தொட இருப்பதாகவும் உறுதி.
உடுமலை அருகே சிறப்பு துணை ஆய்வாளர் சண்முகவேல் கொலை வழக்கு. தந்தை, மகனை கைது செய்து போலீஸ் விசாரணை.
உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சுதா ராமகிருஷ்ணன்,
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) காலை தனது சக எம்பி ராஜதி சல்மாவுடன் டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா ராமகிருஷ்ணனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.
இந்த அதிர்ச்சி சம்பவம், தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சங்கிலி பறிப்பு சம்பவத்திற்குப் பிறகு, எம்.பி சுதா ராமகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
உள்துறை அமைச்சரின் சக நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் கதி என்னவாகும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மாதேரான் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்ஷா பயன்பாடு தற்போதும் உள்ளது. அது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு மனிதனை உட்காரவைத்து இன்னொரு மனிதன் இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வண்டிகள் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியது.
வாழ்வாதாரத்துக்காக மக்கள் இத்தகைய மனிதானமற்ற முறையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இது தனி நபர்களின் கண்ணியத்தை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக குறிப்பிட்டது.
வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் மனித கண்ணியம் என்ற அடிப்படையான கருத்துக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளது.
இதனை அனுமதிப்பது அரசியலமைப்பு உறுதி செய்துள்ள சமூக, பொருளாதார நீதிக்கு எதிரானது என்று கூறி கை ரிக்ஷா திட்டத்துக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள் மறுவாழ்வுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரால் கை ரிக்ஷாவை ஒழித்து, அதன் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிகள் ரிஷ்ஷாக்களை வழங்கினார்.
சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழலும் சாதாரண சாமான்ய நடுத்தர மக்களின் நல்வாழ்வைக் குறித்தே எந்நேரமும் சிந்தித்து செயலாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் பூத்த புரட்சிகரமான திட்டம் இது. மனிதாபிமானத்துடன் கலைஞர் எடுத்த நடவடிக்கை இது.
மனிதனை அமர்த்தி மனிதனே இழுக்கும் அவலத்துக்கு கலைஞர் முற்றுப்புள்ளி வைத்த நாள் இது.
தற்போது 50 ஆண்டுகள் கழித்து கலைஞரின் சிந்தனையை உச்சநீதிமன்றம் பிரதிபளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிக்ஷாவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைஞரின் ஏழாமாண்டு நினைவு!
இயற்கையின் எச்சரிக்கை!
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. சமீபத்திய உதாரணம், உத்தரகண்டின் தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5, அன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு. இந்தச் சம்ப வம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் பயங்கரமான விளைவுகளை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
இந்த துயர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும், 40-50 வீடுகள் மற்றும் 50 ஹோட்டல்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் (இஸ்ரோ) தரவுகளின்படி, உத்தரகண்டில் 1988 முதல் 2023 வரை 12,319 நிலச்சரிவுகள் பதிவாகி யுள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக நிலச் சரிவுகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித் துள்ளது. 2023-இல் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

உலக வானிலை அமைப்பின் 2024 அறிக்கை யின்படி, ஆசியக் கண்டம் உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வரு கிறது. இந்த வெப்பமயமாதல், இமயமலை பனிப் பாறைகள் உருகுவதற்கு காரணமாகிறது.
2024-இல், கண்காணிக்கப்பட்ட 24 பனிப்பாறைகளில் 23 பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க அளவு உருகி யுள்ளன. இது நீர் ஓட்டத்தை அதிகரித்து, மலைப் பகுதிகளில் மண்ணின் ஸ்திரத்தன்மையை குறைத்து, நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்கள் (GLOFs) போன்ற அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தால் பருவமழை முறை கள் மாறி, திடீர் மேகவெடிப்பு மற்றும் மிக அதிக கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இமயமலைப் பகுதிக ளில் பருவமழை காலத்தில் நிலச்சரிவு அபாயம் 90 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உத்தரகண்டின் நிலச்சரிவு நெருக்க டிக்கு, ஒரு சில உடனடி மற்றும் நீண்டகாலத் தீர்வுத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
அபாயகரமான பகுதிகளில் புதிய கட்டுமா னங்களுக்குத் தடை விதிப்பது மிக முக்கியம். வன அடர்த்தியை அதிகரித்து மலைச் சரிவுகளின் இயற்கை நிலைத்தன்மையை மேம்படுத்த வேண் டும். கார்பன் உமிழ்வு குறைப்பு மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
மலைப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களு க்கு (சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம்) முன்னு ரிமை அளிக்க வேண்டும்.பாரம்பரிய அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்த இயற்கை சார்ந்த தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இப்பூவுலகின் எதிர்காலம், பருவநிலை மாற்றத் தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் மற்றும் இயற் கையோடு இணக்கமான வளர்ச்சி மாதிரியை ஏற்றுக் கொள்கிறோமா என்பதைப் பொறுத்தே அமையும்.