வீடு பேறடைந்தவர்கள்!
இரட்டை வாக்களிப்பு மற்றும் "வாக்கு திருட்டு" என்ற "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு" தேர்தல் ஆணையமோ அல்லது வாக்காளர்களோ பயப்படவில்லை என்று ஞானேஷ் குமார் வலியுறுத்தினார், சிலர் விளையாடும் அரசியலைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து தரப்பு வாக்காளர்களுடனும் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கும் என்றும் ஞானேஷ் குமார் கூறினார்.
"ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு வெளிப்படையான செயல்பாட்டில் 'வாக்கு திருட்டு' நடக்க முடியுமா?" என்று ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பினார்..
பீகாரில் வாக்குச் சாவடிப் பட்டியல் திருத்தம் மற்றும் காங்கிரஸால் எழுப்பப்பட்ட 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
பல கட்சிகளின் புகார்கள் மற்றும் நாட்டிற்குள் வாக்காளர்கள்
இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து சமீபத்திய சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார். "தெரிந்தே, தெரியாமலேயே, சிலர் இடம்பெயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக பல வாக்காளர் அட்டைகளை வைத்திருக்க வேண்டியிருந்தது.... சிறப்பு தீவிர திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது ஒரு கட்டுக்கதை. ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியலை சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்," என்று ஞானேஷ் குமார் கூறினார்.வீடற்றவர்களுக்குத்தான் 0 என்று குறிப்பிடப் பட்டதாகவும் அவர் கூறினார்.ஆனால் அந்த 0 எண் கொடுத்து ஏற்புடையதாக இல்லை.ஆயிரக்கணக்கானவர்களுக்கு அப்படி 0 என்று கொடுப்பது எப்படி ஏற்றுக் கொள்வது.தெரு பெயர் 0 வீட்டு எண் 0 என்று பல்லாயிரம் வாக்காளர்களைச் சேர்ப்பதை ஒன்றாம் வகுப்புது தேர்வில் ஒன்பதுமுறை தோல்வியடைந்தவன் கூட சரி எனக் கூறமாட்டான்.
இப்படி பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு தேர்தல் ஆணையர் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?