மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும்

  தேர்தல் ஆணையம்

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணை யம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித் துள்ள குற்றச்சாட்டுகள் சாதரணமானவை அல்ல. 

இதுகுறித்த தரவுகளையும் அவர் வெளியிட்டு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த விரிவான ஆய்வில், பாஜகவுடன் தேர்தல்  ஆணையம் கூட்டு வைத்து ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக அவர் சந்தேகிக்கிறார். 

1. போலி வாக்காளர்கள், 

2.போலி முகவரி, 

3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்,

 4.தவறான புகைப் படங்கள்,

 5.படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது என 5வகைகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்கிறார்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதைப் போல், கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்கு கள் திருடப்பட்டுள்ளன. 

இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்த மோசடி என்றால், நாடு முழுவதும் எவ்வளவு மோசடி நடந்திருக்கும்! 

இதே தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை.

பல ஆண்டுகளாக நம்பகமான அரசியல் சாசன நிறுவனமாக இருந்த தேர்தல் ஆணையம், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்க ளின் கட்சி அலுவலகம் போல் மாற்றப்பட்டுவிட்டது. 

தலைமைத் தேர்தல் ஆணையர், ஏனைய ஆணை யர்கள் தேர்வில் இருந்தே இந்த மோசடி தொடங்கி  விடுகிறது. பாஜக ஆதரவு அதிகாரிகள் ஆணை யர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 

குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு அம்ப லப்படுத்திய பிறகும் பாஜக அதை ஏற்க மறுத்து குற்றச்சாட்டு எழுப்பியவர் மீதே புழுதி வாரித் தூற்றுகிறது. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். 

முன்பு, ஆதாரம் இல்லை, ஆனால் தற்போது ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய் யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இனியும் சாக்குப்போக்கு சொல்லக் கூடாது.

 எதிர்க் கட்சிகளுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். 

விரைவில் பீகார் மாநிலத்திற்கும் அடுத்தாண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநி லங்களுக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது.

  ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் மீது  உரிய நடவடிக்கை எடுத்தால் தான் வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதாக இருக்கும். 

 ‘அதே போல் புகார் கூறினால் சத்திய பிரமாணம் செய்யச் செல்லி நிர்ப்பந்திப்பது, மிரட்டுவது போன்று உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். நடைபெற்ற முறைகேடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி