கண்ணாடிக் கோட்டை!

பீஹார் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த SIR மீதான விசாரணையில் கபில் சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய் சிங் மற்றும் அபிஷேக் மனு சிங்வி போன்ற வழக்கறிஞர்களின் நீண்ட வாதங்களுக்குப் பிறகு மனுதாரர் யோகேந்திர யாதவ் ஒரு சிறப்பான சம்பவத்தைச் செய்தார்…

பீஹார் தேர்தல் கமிஷனால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அட்டவணையிலிருந்து நீக்கப்பட்ட 17 பேரை உயிருடன் கொண்டுவந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பாக நேரில் ஆஜர்படுத்தினார். இந்த வரலாற்றுச் சம்பவத்தால் நீதிமன்றமே ஒருநிமிடம் ஆடிப்போனது. தேர்தல் கமிஷனின் வழக்கறிஞர்கள் குழு விழிபிதுங்கி நின்றதாம்…

கடந்த வாரம் நடந்த விசாரணையில்…

தேர்தல் கமிஷன் இறந்துவிட்டதாக கூறியுள்ளவர்களில் குறைந்தது 15 பேரைக் கொண்டுவந்து எங்கள் முன் நிறுத்தினால் தேர்தல் கமிஷனின் அனைத்து வாதங்களையும்  ரத்து செய்து உத்தரவிடுவோம் என்று இதே உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் தனது வார்த்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தனது வார்த்தைகளில் அது எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்திய மக்களாட்சியின் வாழ்நாள் தீர்மானிக்கப்படும்.

தப்பி ஓட்டம்...முன்னாள் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்தியாவை விட்டு வெளியேறி மால்டா நாட்டில் குடியேறினார்.
-உங்கள் கருத்துக்கள்,பேச்சுகள் எல்லாம்,சரியாகவும் பிரமாதமாகத்தான் இருக்கும்.தீர்ப்பு மட்டும் எப்போதும் சங்கிகளுக்கு ஆதரவாக இருக்கும்.
தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்.-ஆர்.யன் ரவியிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி ஜீன் ஜோசப் குற்றச்சாட்டு.
“துணைவேந்தர்கள் தேர்வு - ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.யன்.ரவியின் தேநீர் விருந்து. அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு.
தெலுங்கானாவில் ஆளுநர் பரிந்துரைத்த 2 எம்எல்சி நியமனம் நீக்கம். உச்ச நீதிமன்றம் அதிரடி.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது. மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்:  திடீர்உடல்நலக்குறைவால்மருத்துவமனையில் அனுமதி.
சிஏஜி அறிக்கையில் தகவல்: 2022-23ல் இந்திய ரயில்வே வருவாய் 25 சதவீதம் உயர்வு; 6,484 கோடி ரூபாய் முறையற்ற செலவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்; ஆணவக் கொலைக்கு எதிராக பிரத்யேக தடுப்பு சட்டம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு.






கண்ணாடிக் கோட்டை!

எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளில் ஆளு­நர்­களை கொண்டு மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்து வரும் நிலை­யில், அதன் கொட்­டத்தை அடக்­கும் வகை­யி­லான தீர்ப்பை பெற்று, ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் எதேச்­ச­தி­கா­ரத்­துக்கு எதி­ரான போராட்­டத்­தில் மொத்த நாட்­டுக்­கும் வழி காட்­டி­யி­ருக்­கி­றது முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான தமிழ்­நாடு அரசு.

414 பக்­கங்­களை கொண்­டி­ருக்­கும் தீர்ப்பு, கூட்­டாட்­சியை வலுப்­ப­டுத்­தும் தி.மு.­க.­வின் வர­லாற்­றில் முக்­கி­யப் பங்கை இனி வரும் காலங்­க­ளில் நிச்­ச­யம் வகிக்­கும்.

தீர்ப்­பின் முக்­கி­ய­மான கருத்­துக்­கள் இவை தான்:


அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிப்­ப­தற்­கென ’as soon as possible’ என்­ப­தற்­கான கால வரை­ய­றையை நிர்­ண­யித்­ தி­ருக்­கி­றது உச்ச நீதி­மன்­றம். மாநில அர­சின் மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிப்­பதா இல்­லையா என தீர்­மா­னிப்­ப­தற்கு என குடி­ய­ரசு தலை­வ­ருக்கு மூன்று மாத கால வரை­ய­றையை நிர்­ண­யித்­தி­ருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம்.


இந்த கால வரை­யறை என்­பது மசோ­தாக்­களை குடி­ய­ரசு தலை­வ­ருக்கு ஆளு­நர் அனுப்­பிய நாளி­லி­ருந்து தொடங்­கும்.


மசோ­தாக்­களை முடக்­கும் வகை­யில் ஆளு­நரோ குடி­ய­ர­சுத் தலை­வரோ காலம் தாழ்த்­து­வதை தடுக்­கும் பொருட்டு, தேவைப்­பட்­டால் உச்­ச­நீ­தி­மன்­ற­மும் தலை­யி­டும் என தீர்ப்­பில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.


ஆளு­நர் ஒரு மசோ­தாவை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்த பிறகு, குடி­ய­ரசு தலை­வர் அந்த மசோதா குறித்து எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் கிடப்­பில் போட்­டால், மாநில அர­சாங்­கம் உச்ச நீதி­மன்­றத்தை நாட­லாம்.

இரு தரப்­பி­லி­ருந்­தும் பதில் ஏதும் கிடைக்­காத பட்­சத்­தில் உச்ச நீதி­மன்­றத்­தில் முறை­யிட எல்லா நியா­யங்­க­ளும் மாநில அர­சுக்கு இருக்­கிறது.


ஆளு­நரை போல குடி­ய­ர­சுத் தலை­வ­ரும் மாநில அர­சின் செயல்­பாட்டை குலைக்­கும் வகை­யில் காலம் தாழ்த்­தக் கூடாது என உச்­ச­நீ­தி­மன்­றம் அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றது.


உட­ன­டி­யாக ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும் அல்­லது ஒப்­பு­தல் அளிக்­கா­மல் இருப்­ப­தற்­கான கார­ணங்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென குடி­ய­ரசு தலை­வ­ரின் பொறுப்பை விவ­ரித்­தி­ருக்­கும் உச்­ச­நீ­தி­மன்­றம், இத்­த­கைய மசோ­தாக்­களை ஆலோ­சிக்­கும்­போது, அவற்­றின்சட்­டத்­தன்மை குறித்து சந்­தே­கம் இருந்­தால் குடி­ய­ரசு தலை­வர், உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­டம் அறி­வுரை கேட்க வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.

அதே நேரத்­தில் மாநில அர­சு­க­ளின் அதி­கா­ரத்தை பறிப்­ப­தற்­காக இந்த நடை­மு­றை­யை­யும் பயன்­ப­டுத்­திக் கொள்­ளக் கூடாது என்­றும் அது எச்­ச­ரித்­தி­ருக்­கி­றது.


ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்­நாடு அர­சின் செயல்­பாட்­டுக்கு இடை­யூறு விளை­வித்து வரும் நிலை­யில், அவ­ரது போக்கை உச்­ச­நீ­தி­மன்­றம் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருக்­கி­றது.


ஆளு­நர் பொறுப்­பில் இருப்­ப­வர்­கள், அர­சி­யல் சாச­னத்தை பின்­பற்­றித்­தான் முடி­வு­களை எடுக்க வேண்­டும் என்­றும் குறு­கிய கால அர­சி­யல் ஆதா­யங்­களை கருதி, முடி­வு­கள் எடுக்­கக் கூடாது என்­றும் உச்­ச­நீ­தி­மன்­றம் விமர்­சித்­தி­ருக்­கி­றது.

மேலும் தீர்ப்­பில், மாநில அர­சின் மசோ­தாவை தனிப்­பட்ட அதி­ருப்­தி­யாலோ, அர­சி­யல் ஆதா­யம் கரு­தியோ பிற கார­ணங்­க­ளுக்­கா­கவோ குடி­ய­ரசு தலை­வ­ருக்கு அனுப்பி வைக்க அர­சி­யல் சாச­னத்­தில் அனு­மதி கிடை­யாது என்­றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது.


தமிழ்­நாடு சட்­ட­சபை இரண்­டாம் முறை ஆளு­ந­ருக்கு மசோ­தாக்­களை அனுப்­பிய பிறகு, அவற்றை அவர், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு சட்­டப்­படி அனுப்­பி­யி­ருக்­கக் கூடாது என தீர்ப்பு குறிப்­பி­டு­கி­றது.

எனவே அவற்­றின் மீது குடி­ய­ரசு தலை­வர் என்ன முடிவு எடுத்­தி­ருந்­தா­லும் அது சட்­டப்­படி செல்­லாது எனக் குறிப்­பிட்டு, கடுமை காட்­டி­யி­ருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம்.


ஆளு­நர் உள்­ளிட்ட எந்த அர­சி­யல் சாச­னப் பொறுப்­பு­க­ளுக்­கும் மாநில அர­சின் மசோ­தாவை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கும் ‘Absolute Veto’ அதி­கா­ரம் கிடை­யாது எனக் குறிப்­பி­டும் உச்­ச­நீ­தி­மன்­றம், இது குடி­ய­ரசு தலை­வ­ருக்­கும் பொருந்­தும் என்­றும் அதி­கார வரம்­பு­களை தெளி­வு­ப­டுத்தி இருக்­கி­றது.


ஒரு­வேளை சட்­டத்­துக்கு புறம்­பாக மசோதா இருப்­ப­தாக கரு­தி­னா­லும், அதற்­கான முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்­குத் தான் உண்டு என்­றும் தீர்ப்­பில் குறிப்­பி­டப்­பட்­டி­ ருக்­கி­றது.


சட்­ட­ச­பை­யின் அதி­கா­ரத்­துக்கு இத்­தீர்ப்பு முக்­கி­யத்­து­வம் அளித்­தி­ருக்­கி­றது. ‘மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வர்­கள், மக்­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டிய கடமை உண்டு. மக்­க­ளின் நலன் கருதி சட்­ட­சபை கொண்டு வரும் மசோ­தாக்­கள், சட்­டங்­கள் ஆக­வில்லை எனில், மக்­கள் பிர­தி­நி­தி­கள் மக்­க­ளின் எதிர்ப்பை சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும்.


எனவே மசோ­தாக்­கள் கிடப்­பில் போடப்­ப­டு­வது என்­பது மக்­கள் ஆட்­சிக்கு எதி­ராக மாறும் சாத்­தி­யம் கொண்­டது,’ எனக் குறிப்­பி­டும் தீர்ப்பு, ‘மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிக்­கா­மல், வேண்­டு­மென்றே ஆளு­நர் காலம் தாழ்த்­திக் கொண்­டி­ருந்­தால், அதை நாட்­டின் கூட்­டாட்­சிக்கு எதி­ரான செயல்­பா­டா­க­தான் கருத வேண்­டும்’என்­றும் அழுத்­தந்­தி­ருத்­த­மாக விளக்­கி­யி­ருக்­கி­றது.


ஆளு­நர் ஆர்.என்.ரவியை கடு­மை­யாக கண்­டித்­தி­ருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். ‘ஆளு­நர் பொறுப்பு தொடர்­பாக வெளி­யான உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பு­கள் எதை­யும் தமிழ்­நாடு ஆளு­நர் மதிக்­கவே இல்லை. இந்த மசோ­தாக்­கள் மீது அவர் நட­வ­டிக்கை எடுப்­பார் என்­ப­தில் எங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை.


என­வே­தான் சட்­டப்­பி­ரிவு 142 உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு அளித்­தி­ருக்­கும் அதி­கா­ரத்­தைக் கொண்டு 10 மசோ­தாக்­க­ளுக்­கும் நாங்­களே ஒப்­பு­தல் அளிக்­கி­றோம்,’ என உச்­ச­நீ­தி­மன்­றம் கடு­மை­யான முடிவை எடுத்­துள்­ளது.


ஆளு­நர் பொறுப்­பின் முக்­கி­யத்­து­வம் மற்­றும் தன்மை ஆகி­ய­வற்றை தீர்ப்­பில் உச்­ச­நீ­தி­மன்­றம் விவ­ரித்­தி­ருக்­கி­றது. ‘பத­விப் பிர­மா­ணத்­தின்­போது, ’அர­சி­யல் சாச­னத்­தை­யும் சட்­டத்­தின் ஆட்­சி­யை­யும் காத்து, மாநில மக்­க­ளின் நல­னுக்­காக உழைப்­பேன்’ என்­று­தான் ஆளு­நர் உறு­தி­மொழி எடுப்­பார்.


எனவே அர­சி­யல் சாச­னப்­ப­டி­தான் அவர் நடக்க வேண்­டும். மக்­க­ளின் நல­னுக்­காக உழைப்­ப­தாக அவரை உறு­தி­மொழி எடுக்க செய்­வ­தற்­கும் கார­ணம் இருக்­கி­றது. மாநி­லத்தை மக்­க­ளின் நலன் கரு­தி­தான் அவர் செயல்­பட வேண்­டும்.


மாநில அர­சு­டன் இயைந்­து­தான் அவர் செயல்­பட வேண்­டும். இல்­லை­யெ­னில், அவர் எடுத்த உறு­தி­மொ­ழிக்கே புறம்­பாக செயல்­பட்­ட­தாகி விடும்.’ என்­கி­றது இந்த தீர்ப்பு.

இறு­தி­யாக அர­சி­யல் சாச­னத்தை பற்றி விவ­ரிக்­கை­யில், ‘எழு­பத்­தைந்து ஆண்­டு­கள் ஆகி­யும் இன்­னும் இதே அர­சி­யல் சாச­னத்தை நாம் பயன்­ப­டுத்­து­வ­தற்கு கார­ணம், அது­தான் நமக்­கான உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

நமக்­கான பொறுப்­பு­களை வரை­ய­றுக்­கி­றது,’ என தீர்ப்­பில் குறிப்­பிட்டு, அர­சி­யல் சாச­னத்தை மாற்ற முயற்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் திட்­டத்­துக்­கும் மறை­மு­க­மான விமர்­ச­னத்தை வைத்­தி­ருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம்.


இன்­னும் ஒரு படி மேலே சென்று, அர­சி­யல் சாச­னத்தை இயற்­றிய டாக்­டர் பி.ஆர்.அம்­பேத்­க­ரின், ”நல்ல அர­சி­யல் சாச­ன­மாக இருந்­தா­லும், அதை செயல்­ப­டுத்­து­ப­வர்­கள் மோச­மா­ன­வர்­க­ளாக இருந்­தால், அர­சி­யல் சாச­ன­மும் மோச­மாகி விடும்,” என்ற கூற்றை மேற்­கோள் காட்­டி­யி­ரு­கி­றது தீர்ப்பு. இது­தான் பாஜக அர­சுக்கு வைத்த கொட்டு ஆகும்.


‘’நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்­கும், மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் அர­சுக்­கும் மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் ஆளு­நர்­கள் செயல்­பட வேண்­டும்’’ என்ற இறுதி எச்­ச­ரிக்­கையை இத்­தீர்ப்பு செய்­துள்­ளது.

ஆளு­நர்­கள் மூல­மாக இரட்­டை­யாட்சி நடத்­தத் துடிக்­கும் ஒன்­றிய பாஜக அர­சுக்கு ‘செக்’ வைக்­கப்­பட்­டுள்­ளது.


மேலும்­மே­லும் அதி­கா­ரத்தை தன்­ன­கத்தே குவித்­துக் கொண்டு எதேச்­ச­தி­கா­ரத்தை நோக்கி விரைய முயற்­சித்­துக் கொண்­டி­ருக்­கும் பா.ஜ.­க.­வின் ஆதிக்க ஆட்­சிக்கு எதி­ராக ஜன­நா­யப்­பூர்­வ­மான கூட்­டாட்­சிக்­கான போராட்­டத்­தில் முக்­கி­ய­ மான மைல்­கல்லை இத்­தீர்ப்பு மூலம் தமிழ்­நாடு அரசு பெற்­றி­ருக்­கி­றது.


பா.ஜ.க.வை வீழ்த்­து­வ­தற்­கான போரில் மற்­று­மொரு ஆயு­தத்தை உரு­வாக்கி அளித்­தி­ருக்­கி­றது தி.மு.க.

கண்­ணா­டிக் கோட்­டை­யாக பா.ஜ.க. கட்டி எழுப்­பிக் கொண்­டி­ருக்­கும் பாசி­சத்­தின் மீது இன்­னொரு பாறாங்­கல்லை உருட்டி விட்­டி­ருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி