அமெரிக்க சொர்க்கம்?

ஒசூரில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்கள் மாநாடு.ரூ.24,307 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல். மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும். நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு அரசும் இயற்ற பிருந்தா காரத் வலியுறுத்தல்
பீகாருக்கு ரூ.7,616 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிக நிதி ஒதுக்கீடு.
பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ஒரே ஆண்டில் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பு. மேக் இன் இந்தியா திட்டத்தின் மீது உரிய கவனம் செலுத்தாததால் எதிர்பார்த்த வெற்றி இல்லை.
'கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும் கட்சி அதிமுக'-எடப்பாடி பழனிசாமி 
நேபாளத்தில் வெடித்த GEN Z தலைமுறை கிளர்ச்சியில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்வு. நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு.
இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு டிரம்ப் இரட்டை வேடம். 100 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமும் வலியுறுத்தல்.
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி- NIA அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் செங்கல்பட்டில் அண்மையில் லஷ்கர் இ தொய்பா- பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது கைது செய்யப்பட்டார். பீகாரைச் சேர்ந்த முகம்மது- லஷ்கர் அமைப்பின் ஸ்லீப்பர் செல்லாக, கூலித் தொழிலாளி போல செங்கல்பட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.

தற்போது முகம்மதுவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகம்மது தந்த தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஹவுசிங் காலனியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தங்கி இருந்த பீகார் இளைஞரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும்எனகைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் பீகார் மாநிலத்தில் கதியார் மாவட்டத்தில் இக்பால் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்அதிமுக ஆட்சி காலத்தில் ஏன் கள் இறக்க அனுமதி அளிக்கவில்லை? என்று கேள்விஎஸ்.பி.வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்ததால் பரபரப்பு.





அமெரிக்க நிலை.

வளமும் வசதியும் நிறைந்த அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலும், சிலர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


28 வயதான ஸ்டெபானி வீடில்லாமல், கென்னடி சென்டர் அருகே ஒரு போம் மேட்ரஸில் ஓய்வெடுத்தபடி இருந்தார். அவரது உலகம் அங்கு இருக்கும் சிலரைப் போலவே சோகத்திலும் தனிமையிலும் மூழ்கியிருந்தது.

ஸ்டெபானியின் நிலை, ஒரு மறைக்கப்பட்ட போராட்டத்தின் சின்னம். வேலைவாய்ப்பு இழப்பு, உயர்ந்துவரும் வீட்டு வாடகை, மனநலப் பிரச்சினைகள், குடும்ப ஆதரவு இல்லாமை - இவை அனைத்தும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன.


நகரின் பிரகாசமான வெளிப்புறங்களும், கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளம் நிறைந்த இடங்களும், இவர்களைப் போன்றவர்களின் வாழ்வியலை மறைத்து விடுகிறது.


வீடற்றோர் பிரச்சினை அமெரிக்காவில் தீவிரமாகி வருகிறது,நாட்டின் கவுரவம் கெடும் என்று வாஷிங்டன், டி.சி.யில் சாலைகளில் தங்குவதை அரசு ஆதரிப்பதில்லை அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர், சாலைகளில் தங்கியிருப்பதற்காகவே போராடுகிறார்கள்.


அரசு மற்றும் சமூக அமைப்புகள் உணவு, தற்காலிக முகாம்கள், மருத்துவ உதவிகளை வழங்கினாலும், அது போதவில்லை .


சிலர் கடுமையான காலநிலை, பாதுகாப்பின்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய வாழ்வால் இப்படி இன்னும் பாதிக்கப்படுகிறார்கள்.


இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சிலர். சொர்க்கபுரி அமெரிக் கா என நினைப்பது

தவறு.உண்மை வேறு..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி