பாசிச வழியில்
சுரங்க திட்டங்களுக்கு மக்கள் கருத்துக் கேட்பில் விலக்கு அளிப்பது மக்களாட்சிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

உண்மையிலயே இவர் நாலு வருசம் முதலமைச்சரா இருந்தாரா?
நூதன மோசடியில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகி கைது.புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன்
2008ல் அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை தொடங்கி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உறுப்பினர்களை சேர்த்துள்ளார்
உறுப்பினர்களை அறிமுகம் செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளார்
உறுப்பினர்களிடம் 5,000 கோடி ரூபாய்க்கான காசோலையை காட்டி அறக்கட்டளையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்பதால் ரிசர்வ் வங்கி இந்த காசோலையை மாற்ற சம்மதிக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றி புதிய உறுப்பினர்களை சேர்த்து வந்துள்ளார்
உறுப்பினர்கள் நம்பும்படியாக அவர்களுக்கு தானே முன்னின்று வங்கிக்கணக்கை தொடங்கி கொடுத்து, இந்த கணக்கில் அந்த ஒரு கோடி ரூபாய் வரும் என்று நம்ப வைத்துள்ளார்
2009ல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தி ரூ.50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள், அயர்ன்பாக்ஸ், மிச்சி வழங்கி உள்ளார்
இந்த நலத்திட்ட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்த நடிகை சினேகா, நடிகர் வடிவேலு, நடிகர் சார்லி, நடிகர் தாமு, நடிகர் ராதாரவிக்கு லட்சக்கணக்கில் வாரி இறைத்துள்ளார்
புதுக்கோட்டையில் தொடங்கிய மோசடியை, திருச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் என்று விரிவுபடுத்தி வந்துள்ளார்
கடந்த 17 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்
புகார்களின் பேரில் ரவிச்சந்திரனை சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர்.
ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம் .
வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி .

இது ஒருபுறமிருக்க இந்தியர்களின் வீடுகளில் பயன்படுத்தாத நிலையில் 20 கோடி மொபைல் போன்களும், லேப்டாப்களும் கிடக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்தின் (ஐசிஇஏ) தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘அக்சன்சர்’ அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 20.60 கோடி மின்னணு சாதனங்கள் பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிச வழியில் இந்தியா?
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக கூறப்படும் பல அரசு அமைப்புகளை பாசிச பா.ஜ.க. கும்பல் தனது கைப்பாவையாக மாற்றிவருகிறது.
அந்தவகையில், ஒன்றிய அரசின் கீழ் வரும் அமலாக்கத்துறை பாசிச பா.ஜ.க. அரசின் ஏவல் அமைப்பாகவே மாற்றப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அமலாக்கத்துறையை மோடி அரசு எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதற்கு, கடந்த மாதம் ஜூலை 29 அன்று ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.
அத்தகவலின்படி, ஜனவரி 1, 2015 முதல் ஜூன் 30, 2025 வரையிலான காலகட்டத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையால் மொத்தம் 5,892 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதில், 1,398 புகார்கள் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, 77 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகைக் கூட தாக்கல் செய்யப்படவில்லை.
மேலும், பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் வெறும் 300 வழக்குகளில் மட்டுமே பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து (frame of charges) உத்தரவிட்டுள்ளன. இதில் எட்டு வெவ்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் இன் கீழ் 15 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது கடந்த பத்தரை ஆண்டுகளாக பதியப்பட்ட 5,892 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 பேர் மட்டுமே.
இதன் குற்ற விகிதம் 0.14 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) தரவுகளின்படி, சராசரி குற்ற விகிதம் 45 முதல் 50 சதவிகிதம் ஆகும்.
இது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளுக்கும் அவற்றின் மீதான நடவடிக்கைகளுக்கும் இடையிலான பெரும் ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கிறது.மேலும், 49 வழக்குகளில் மட்டுமே மூடல் அறிக்கைகள் (closure reports) தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இத்தனை பேர் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லையென்றால், ஆளுங்கட்சியின் நலனுக்காக அவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறார்கள் என்பது உறுதியாகிறது.
2019-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பாசிச நோக்கத்திற்கேற்ப பணமோசடி தடுப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சான்றாக, முன்னறிவிப்பின்றி யாரையும் கைது செய்வது, பிணை மறுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டன.
இத்திருத்தங்கள் அமலாக்கத்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியது. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், தங்களுக்கு அடிபணியாத தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்து, அவர்களின் இடங்களில் சோதனைகள் நடத்துவது, கைது செய்வது உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளில் மோடி -அமித்ஷா கும்பல் ஈடுபட்டது
மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 98 சதவிகிதம் பொய் வழக்குகளாகவே உள்ளன என்பது அம்பலமாகி இருக்கிறது.
மொத்தத்தில், குதிரை பேரம் நடத்துவது, எதிர்க்கட்சியினர், கார்ப்பரேட் முதலாளிகளை மிரட்டி பணிய வைப்பது, பணம் பறிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ கூலிப்படையாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டி, அவர்களை விலைக்கு வாங்குவது போன்ற நடவடிக்கைகள், “ஒரே நாடு, ஒரே கட்சி” என்ற பா.ஜ.க-வின் பாசிச திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், இப்பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மக்களிடம் அம்பலப்படுத்தவும், போராடவும் முனையாமல், “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் வெறும் வார்த்தைப் போரை மட்டுமே நடத்தி வருகின்றன.