அமெரிக்க சோள அரசியல்!

 தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார். அவர் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

7 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது: 10 பேருக்கு பூம்புகார் மாநில விருது, முதல்வர் வழங்கினார்  
''இபிஎஸ்-க்கு பிரமாண்ட கூட்டம் கூடுது'' - அண்ணாமலை.
ரூ.1.3 லட்சம் கோடி கேட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது டிரம்ப் அவதூறு வழக்கு.
சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தீவிரம் தமிழகத்தில் கூடுதலாக 6,000 வாக்குச்சாவடிகள்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் நடத்த திட்டம் .
திருச்சி சமயபுரத்தில் நகைக்கடை மேலாளரை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை: மூன்று பேர் கைது.
நீலகிரியில் 12 பேரை பலி வாங்கிய ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு: மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு.









அமெரிக்க மக்காச் சோள அரசியல்.

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் சமீபத்தில் எழுப்பிய கேள்வி, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. "


இந்தியா 140 கோடி மக்கள் கொண்ட நாடு என்று பெருமை கொள்கிறது. அப்படியானால், ஏன் அந்த 140 கோடி மக்களும் ஒரு குவிண்டால் அமெரிக்க மக்காச்சோளத்தை கூட வாங்கக் கூடாது?" என்று அவர் நேரடியாக இந்தியாவை நோக்கி வினவிய இந்தக் கேள்வி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மக்காச்சோள வர்த்தகத்தில் நிலவும் பதட்டத்தை வெளிப்படுத்துகிறது.


2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மக்காச்சோள இறக்குமதி சுமார் 0.97 மில்லியன் டன் ஆகும். இதில், மியான்மர் (0.53 மில்லியன் டன்) மற்றும் உக்ரைன் (0.39 மில்லியன் டன்) ஆகிய நாடுகளிலிருந்தே பெரும்பான்மையான இறக்குமதி நடைபெற்றது.


அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் அளவு வெறும் 1,100 டன்கள் மட்டுமே.

ஆனால், இந்தியா ஏன் அமெரிக்க மக்காச்சோளத்தை அதிகம் இறக்குமதி செய்யவில்லை என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.


1. இறக்குமதி வரிகள் (Tariffs):

இந்தியா ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன் மக்காச்சோளத்தை 15% இறக்குமதி வரியுடன் அனுமதிக்கிறது. இந்த வரம்பை மீறி இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்திற்கு 50% வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதற்கு ஒரு தடையாக உள்ளது.


2. மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை (GMO Ban):

மிக முக்கியமாக, மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified) மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிப்பதில்லை. உலகிலேயே மக்காச்சோளம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.


ஆனால், 2024-ல் அமெரிக்காவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் சுமார் 94% மரபணு மாற்றப்பட்ட ரகங்களாகும். இந்த ரகங்கள் பூச்சிகள் மற்றும் களைக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறனை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்திய அரசின் இந்தக் கொள்கை அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.


அமெரிக்காவின் அவசரம் ஏன்?
அமெரிக்கா தனது மக்காச்சோளத்தை விற்பனை செய்ய அவசரப்படுவதற்கான காரணம், அதன் மிகப்பெரிய சந்தையான சீனாவுடனான வர்த்தகப் போரே. 2022-ல் அமெரிக்காவின் மக்காச்சோள ஏற்றுமதியில் $5.21 பில்லியன் சீனாவிற்குச் சென்றது.


ஆனால், 2024-ல் இது வெறும் $331 மில்லியனாக சரிந்தது. நடப்பு ஆண்டில் (ஜனவரி-ஜூலை), சீனாவிற்கான ஏற்றுமதி $2.4 மில்லியனாக மேலும் குறைந்துள்ளது. இதனால், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது விவசாயிகளுக்கு புதிய சந்தைகளைத் தேடி வருகிறது.


இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்து வருவதால், பால், முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்ற கால்நடைப் பொருட்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

இது கால்நடைத் தீவனத்திற்கான தேவையை அதிகரிக்கும். மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை கால்நடைத் தீவனத்தில் முக்கிய மூலப்பொருட்களாகும்.


அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் மக்காச்சோள நுகர்வு 2050-க்குள் 200.2 மில்லியன் டன்னாக உயர வாய்ப்புள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய 134 மில்லியன் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கை கணிக்கிறது. இந்த பெரும் சந்தையை அமெரிக்கா தன்வசம் இழுக்க ஆர்வமாக உள்ளது.


இந்தியாவின் நிலைப்பாடு:
தற்போதுள்ள சூழ்நிலையில், இந்தியா தனது இறக்குமதி வரியைக் குறைப்பதற்கோ அல்லது மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள இறக்குமதியை அனுமதிப்பதற்கோ வாய்ப்புகள் மிகக் குறைவு.

குறிப்பாக, பீகார் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் மாநிலமாக பீகார் உள்ளது. விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு முடிவை எடுப்பது இந்திய அரசுக்கு முக்கியமானது.


ஒரு முக்கியத் தகவல் என்னவென்றால், அமெரிக்கா உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் நாடாகும்.


ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் ஒரு கிலோ மக்காச்சோளத்தின் சராசரி விலை ரூ.15-க்கும் குறைவாக இருந்தது. இது இந்தியாவில் நிலவும் ரூ.22-23 மொத்த விலையை விடவும், அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.24-ஐ விடவும் மிகக் குறைவு. இருந்தும், இறக்குமதி கொள்கைகளில் உள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளவில்லை.


மொத்தத்தில், ஒருபுறம் வர்த்தகப் போரினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா புதிய சந்தையை தேடுகிறது. மறுபுறம், உள்நாட்டு விவசாயிகளின் நலனையும், உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்தியா உறுதியாக நிற்கிறது.


அமெரிக்காவின் மிரட்டல் பேச்சுக்கு இந்தியா பணிந்து போகுமா அல்லது தனது சொந்த கொள்கைகளில் உறுதியாக நிற்பதா என்பதை வருங்காலமே முடிவு செய்யும்.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்ய செப்.30 கடைசி நாள்!

ஊழியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரினாலும், அரசாங்கம் கடந்த ஆகஸ்டில் யு.பி.எஸ் - ஐ அறிவித்தது.


இந்த திட்டம் என்ன, அது ஏன் மெதுவாக உள்ளது என்பது இங்கே.

ஒன்றிய அரசு ஊழியர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்வு செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அளித்த தகவலின்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நிலவரப்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள சுமார் 23.94 லட்சம் ஊழியர்களில் 40,000 பேர் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


செப்டம்பர் 2 அன்று, மத்திய சிவில் சேவைகள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான) விதிகள், 2025-ஐ வெளியிட்டது. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியர்களின் பணி தொடர்பான விஷயங்களை இந்த விதிகள் ஒழுங்குபடுத்துகின்றன.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி