செயற்கை நுண்ணறிவால்..

 வேலை இழப்பா?

பொறியாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இந்தியப் பொறியாளர்களின் மனநிலையை ஆழமாக ஆராய்ந்துள்ளது.


67% பொறியாளர்கள் தங்கள் வேலைகள் ஏற்கனவே AI-ஆல் பாதிக்கப்பட்டு வருவதாக நம்புகிறார்கள்.


86% பேர், மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் பொருத்தமாக இருக்க, தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்வது (upskilling) அவசியம் என்று கூறுகிறார்கள்.

இந்தத் தரவுகள், இந்தியப் பொறியியல் சமூகம், எதிர்கால மாற்றங்களுக்குத் தயாராகி வருவதை உறுதிப்படுத்துகின்றன. பழைய வேலை முறைகளைத் தாண்டி, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.


85% பொறியாளர்கள், வரும் நிதியாண்டில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) ஆகியவை முதலிடத்தில் உள்ளன.


மற்ற விருப்பமான துறைகள்:

தரவு அறிவியல் (Data Science)

கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)

சைபர்பாதுகாப்பு (Cybersecurity)

மென்பொருள் மேம்பாடு (Software Development)

AI மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவில், ஜெனரேடிவ் AI (Generative AI), பைதான் (Python) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) போன்ற திறன்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இது, வெறும் கோட்பாடுகளைத் தாண்டி, நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கும் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.


பொறியாளர்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளத் தூண்டும் முக்கிய காரணிகள்:

நிதி வளர்ச்சி: 20% பேர் வருமான உயர்வை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

புதிய வாய்ப்புகள்: 12% பேர், புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்.

பதவி உயர்வு: 12% பேர் பதவி உயர்வுக்காகத் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள்.

பொருத்தமாக இருப்பது: 11% பேர், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.


இந்த ஆய்வு, பொறியாளர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் முறையிலும் ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது.

66% பொறியாளர்கள், ஆறு மாதங்களுக்கும் குறைவான குறுகிய கால படிப்புகளை விரும்புகிறார்கள்.


பாரம்பரிய முதுகலைப் பட்டங்களை விட, இந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ் படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது, வேலைக்கு உடனடியாகப் பயன்படும், நடைமுறை சார்ந்த பயிற்சிகளை நோக்கி ஒரு புதிய நகர்வைச் சுட்டிக்காட்டுகிறது.


இத்தனை ஆர்வங்களுக்கு மத்தியிலும், வேலையில் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

85% பொறியாளர்கள், புதிய வேலை மாற்றங்களைத் தேடுகிறார்கள்.

வேலை-வாழ்க்கை சமநிலை (33%), வேலை பாதுகாப்பு (18%) மற்றும் தொழில் தேக்கம் (14%) ஆகியவை அவர்களின் முக்கிய கவலைகளாக உள்ளன.


“ஏரோஸ்பேஸ் துறையில் பணிபுரியும் நான், தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக உலகை மாற்றுகிறது என்பதை நேரடியாகப் பார்த்துள்ளேன்.


அதனால்தான், AI மற்றும் மெஷின் லேர்னிங் -ல் முதலீடு செய்ய முடிவு செய்தேன். எதிர்கால பொறியாளர்களுக்கு எனது ஆலோசனை என்னவென்றால், அடிப்படைத் திறன்களை வலுவாக வளர்த்துக்கொண்டு, புதுமைகளை நாடிச் செல்லும் ஆர்வத்தையும், மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொள்ளுங்கள்,” என்கிறார் விண்வெளி நிபுணர் மாருதி ராவ் தாலுரு.

“இன்றைய பொறியாளர், இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்தவரை விட முற்றிலும் வேறுபட்டவர். அவர்கள் AI மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாற்றங்களின் மையத்தில் இருக்கிறார்கள்.


எங்கள் நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பின்னணியில் இருந்து வருகிறார்கள். இது, இந்த சமூகம் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வதை உணர்த்துகிறது,” என்கிறார் கிரேட் லேர்னிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹரி கிருஷ்ணன் நாயர்.

இந்திய பொறியாளர்கள், இந்த தொழில்நுட்பப் புரட்சியில் தங்கள் பங்கை உணர்ந்து, அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்துகிறார்கள்.


இந்த மாற்றங்கள், தனிப்பட்ட முறையில் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் சுற்றும் திராவிடம்-12.

                                              -கோவி.லெனின்

அமெரிக்காவின் டெனோசி மாநிலம். 1931 மார்ச் 25ஆம் நாள். அந்த ரயிலில் வெள்ளைக்காரர்களும் கருப்பினத்தவர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். “இவனுங்க அட்ராசிட்டி எல்லா இடத்திலும் அதிகமாயிடிச்சி ஜான்” என்றான் ஒரு வெள்ளைக்கார இளைஞன். அவர்களின் பேச்சும் அதைத் தொடர்ந்து அவர்களின் சீண்டல்களும் கருப்பின இளைஞர்களைக் கோபப்படுத்தியது. “ரயில் உங்களோடதில்ல.. நாங்களும் டிக்கெட் எடுத்துட்டுத்தான் வரோம்” -கருப்பின இளைஞன் ஒருவனின் பதிலை வெள்ளை இளைஞர்கள் எதிர்பார்க்கவில்லை. “ரயில் உன்னோடதில்ல.. ஆனா, நாடு எங்களோடது…” “அமெரிக்கா யாருக்கும் சொந்த நாடு கிடையாது. நாங்க ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது போல, நீங்க ஐரோப்பாவிலிருந்து வந்தவங்கதான்” கோபமான வெள்ளைக்கார இளைஞர்கள் கருப்பின இளைஞர்கள் மீது பாய்ந்தார்கள். இரு தரப்புக்கும் கடுமையான சண்டை. அடுத்த நிலையத்தில் ரயிலை நிறுத்திய போலீஸ், கருப்பின இளைஞர்களைத் தேடியது. 9 இளைஞர்களைக் கைது செய்தது. அடிதடி வழக்கு, ரயிலில் இருந்து வெள்ளையர்களை கீழே தள்ளிவிட்ட வழக்குடன் மற்றொரு கொடூர வழக்கு அந்த இளைஞர்கள் மீது பாய்ந்தது. அந்த ரயிலில், ஆண்களைப் போல வேடமணிந்திருந்த விக்டோரியா பிரைஸ், ரூபி பேட்ஸ் என்ற இரண்டு வெள்ளைக்காரப் பெண்களை அந்த 9 இளைஞர்களும் வன்புணர்வு செய்தனர் என்பதுதான் அதிரடிக் குற்றச்சாட்டு. ஸ்காட்ஸ்பரோ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதால், ‘ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ்‘ வழக்கு என்று பரபரப்பானது. அமெரிக்காவின் அலபமா மாநிலத்தில் சட்டமும் நீதியும் நிற வேறுபாடுகளுடன் இருந்த காலம் அது.

வெள்ளைக்காரப் பெண்களை கருப்பினத்தவர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கினால் மரணதண்டனை நிச்சயம் என்கிற நிலையில், அந்த 9 இளைஞர்களுக்கும் சட்ட உதவி கிடைக்கவில்லை. 9 பேரில் 13 வயது இளைஞனைத் தவிர மற்ற 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த 9 கருப்பின இளைஞர்களின் நீதிக்காக களமிறங்கினார்கள் அமெரிக்க கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுடன் கருப்பின உரிமைக்கான அமைப்புகளும் இணைந்தன. உலக நாடுகளின் கவனங்களை ஈர்க்கும் செயல்பாடுகளும் தொடங்கின. 9 கருப்பின இளைஞர்களில் ஆன்டி ரைட், ராய் ரைட் இருவரும் சகோதரர்கள். அவர்களின் விதவைத் தாய் அடா ரைட்டை கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்தார்கள். சட்டப் போராட்டக் களத்தில் துணை நிற்க வேண்டினர்.


தன்னுடைய பாட்டி ஒரு வீட்டில் அடிமையாக வேலை செய்ததை சிறுவயதில் கவனித்தவர் அடா. தன் மகன்களுடன் தண்டிக்கப்பட்ட மற்ற இளைஞர்களையும் மகன்களாகக் கருதி களத்தில் இறங்கினார். உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதற்காக 1932 கோடையில் ஐரோப்பாவுக்கு வந்தார் அடா ரைட். அந்த கோடைக் காலத்தில்தான் பெரியாரும் ஐரோப்பாவில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். 1932 ஜூன் 28 அன்று கிளர்க்கென்வெல் அரங்கில் , ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் பக்கம் ஒன்றுபட்டு நின்று நீதியை நிலைநாட்டுவது தொடர்பான கூட்டம் நடந்தது. நிகழ்வை ஒருங்கிணைத்த இங்கிலாந்து நாட்டின் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி சக்லத்வாலாவின் நண்பராக பெரியார் அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார். ஒரு தாயின் மனதிலிருந்து வெளிப்படும் குரலாக அடாவின் பேச்சு இருந்தது.

தன்னுடைய இரண்டு மகன்கள், எதிர்பாராத வழக்கு, சிறையில் படும் அவஸ்தை, மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் கொடூரம் எல்லாவற்றையும் மென்மையான குரலில் சொல்லிவிட்டு, “என்னுடைய இரண்டு மகன்களையும் மற்ற இளைஞர்களையும் விடுதலை செய்ய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஸ்காட்ஸ்பரோ பையன்களுக்காக நீங்கள் போராடுவது உலக நாடுகள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டமாகும்” என்றார். பெரியார் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டார். ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் விடுதலை கூட்டத்துக்கு தலைமை வகித்த லண்டன் கடல் பணியாளர் அமைப்பின் ஜிம் ஹெட்லி, விடுதலைப் போராட்டத்திற்கான நன்கொடை வழங்குமாறு கூட்டத்தினரிடம் கோரிக்கை வைத்தார்.

பல பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை நன்கொடையாக சேர்க்கப்பட்டது. ஒரு ஜெர்மன் வெள்ளிச் சங்கிலியை அரை பவுண்டுக்கு ஏலம் எடுத்தார் பெரியார். கருப்பின இளைஞர்களின் விடுதலைக்கானத் தன் பங்களிப்பை செலுத்தினார். (இந்த விவரங்களை ஆய்வாளர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி பல நூல்களை மேற்கோள் காட்டி கட்டுரையாக எழுதியுள்ளார். 1960ல் வெளியான To kill a mocking bird என்ற புகழ்பெற்ற நாவல் இந்த ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் வழக்கின் தாக்கத்தில் உருவானது என்பதையும் குறிப்பிடுகிறார்) ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் வழக்கு, பல கட்ட விசாரணைகளைக் கடந்தது. நீதி வென்றதா? (சுற்றும்)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி