ஏன் நன்றி. சொல்லவேண்டும்.?

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு.

தமிழகத்தை போல அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி .

“கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்; தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சியை காட்டுவதற்காகவும், வாக்கு வங்கியை நிரூபிப்பதற்காகவும் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்” - பெரம்பலூர் மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி.
கொடைக்கானல் மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கிய கார் ஆறு பேர் உயிர் தப்பினர்.
லடாக் வன்முறைக்கு ஒன்றிய பாஜக அரசே காரணம் - காங்.
அதானி துறைமுகம் வந்த ரூ.20 கோடி சரக்கு பெட்டகங்கள் மாயம்.
இலங்கையில் ரோப்கார் அறுந்து இந்தியர் உட்பட 7 புத்த துறவிகள் பலி
விமான படைக்கு மேலும் 97 தேஜஸ் இலகு ரக விமானங்கள்: ரூ.62,370 கோடிக்கு ஒப்பந்தம்.

சமூக ஊடக பதிவால்குஜராத் கிராமத்தில் பயங்கர கலவரம்: கடைகள் சூறை: வாகனங்கள் உடைப்பு.

தபால் வாக்கு எண்ணும் நடைமுறையில் மாற்றம்: தேர்தல் ஆணையம்.
வெளி மாநில பொருட்களுக்கு அதிக வரி விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.










ஏன் நன்றி. சொல்லவேண்டும்?

மைசூர் பாக் விலை ஸ்வீட் ஸ்டால்களில் குறைந்துவிட்டது என்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அங்கே போய், மோடிக்கு நன்றி சொல்லச் சொல்கிறார். பேக்கரியில் பன் விலை குறைந்திருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

 செருப்புக் கடைக்குச் சென்று விலை குறைந்துவிட்டது பற்றி விசாரித்து, அதைப் பதிவு செய்கிறார், இரண்டு மாநில ஆளுநர்களாக இருந்து இப்போது என்ன பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் தமிழிசை சௌந்தரராஜன்.

ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களால் கார் முதல் காலணி வரை விலை குறைந்திருக்கிறது என்று மோடி முதல் நிர்மலா சீதாராமன் வரை டெல்லியில் சொல்வதையும், அதற்காக பா.ஜ.க. அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் சொல்வதையும், டி.வி-சோஷியல் மீடியா எல்லாவற்றிலும் அதற்கான விளம்பரங்கள் வெளியிடப்படுவதையும் காண்கிறோம். வரி குறைப்புக்கு நன்றி சொல்லலாம். எப்போது?

வரியை வேறொரு அரசு போட்டு, அதை பா.ஜ.க. அரசு குறைத்திருந்தால் மக்கள் தானாகவே நன்றி சொல்வார்கள். ஜி.எஸ்.டி வரியை நடுராத்திரியில் நாடாளுமன்றத்தைக் கூட்டி அமல்படுத்தியதே மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான். 

அப்போதே எதிர்க்கட்சிகளும் மாநில அரசுகளும் இது குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவித்தன. இந்த வரி மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்றபோது, பா.ஜ.க.வில் ஒருவரும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

 மோடி செய்தால் நல்லதாகத்தான் இருக்கும், அது நாட்டு நலனுக்காகத்தான் இருக்கும் என்று வழக்கம்போல கோஷம் போட்டார்கள்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பல சிறு தொழில்களை பாதித்ததுடன், மக்களுக்கும் பெரும் சுமையாக மாறியது. அத்துடன், மாநிலங்களிடமிருந்த வரி வசூலிக்கும் உரிமையை ஏறத்தாழ மத்திய அரசு முழுமையாகப் பறித்துக்கொண்டது.

 இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் கூட்டாட்சி முறைக்கு இது எதிரானது என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தியும் பா.ஜ.க. அரசு கேட்கவில்லை.

 ஜி.எஸ்.டி. வரியால் எத்தகைய பாதிப்பை சந்திக்கிறோம் என்று கோவையின் பிரபலமான அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் சொன்னதும், அதற்காக அவரை அழைத்துவந்து மன்னிப்பு கேட்க வைத்ததும் அத்தனை சீக்கிரத்தில் மறந்துபோகாது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலை உருவானது. பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. 

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் வரவுள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்தை தீபாவளி பரிசு என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

 8 ஆண்டுகளாக எந்த அரசு, எந்த மக்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் நெருக்கடிக்குள்ளாக்கியதோ அந்த அரசு, அந்த மக்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல், அதே அரசு அதே ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்து அறிவித்திருப்பதற்கு உடனடியாக மக்களிடமிருந்து நன்றியை எதிர்பார்ப்பது நியாயமாகாது.

வரிக் குறைப்பின் பலன் எவ்வளவு, அதனால் நேரடியாக கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன, மறைமுக பலன்கள் என்ன என்பதைப் பொறுத்தே நன்றி வெளிப்படும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த வரிக்குறைப்பின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும், பாராட்ட மறுப்பதாலும் இதனை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில முதலமைச்சரும் இதே கருத்தைத் தெரிவித்திருப்பதுடன், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பு, விசா கட்டண உயர்வு போன்றவற்றை மறைக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை மறைக்கவும் மோடி அரசு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை முன்னிறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் நடுராத்திரியில்தான் நடைமுறைப்படுத்தினார்கள். 

அப்போது மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளானபோது, கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வர இந்த நடவடிக்கை உதவும். இல்லையென்றால் என்னை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துங்கள் என்கிற அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டார் பிரதமர் மோடி.

 பணமதிப்பிழப்பு தோல்வி என்பதை ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது. பிரதமர் எதுவும் தெரியாததுபோல கடந்து சென்றார். அவர் இப்போது நன்றி வேண்டும் என்று கேட்டால், மக்கள் வேறு ஏதாவது கேட்டுவிடுவார்கள்.

வரி அதிகரிப்பை வலியுடன் மக கள் ஏற்றுக் கொண்டதற்கு மோடி அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மக்கள் ஏன் நன்றி. சொல்லவேண்டும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி