கல்வியில் சிறந்த..

தமிழ்நாடு!

சென்னையில் இன்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டம். 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் 10,000 மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு.5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு.

 பீகாரில் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,000 செலுத்தும் திட்டம். நாளை தொடங்கி வைப்பு.தேர்தல்  முடிந்த பின் நிறுத்தப்படும் என எதிர்பார்ப்பு.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகலாம். புதிய கூட்டணியும் அமையலாம் என்று கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி. 
நேபாளம் பாணியில் லடாக்கில் 'Gen Z' போராட்டம் பிரகடனம். வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு, 70 பேர் காயம்.

ஆன்லைனில் வாக்காளர் பெயர் நீக்க ஆதார் ஓ.டி.பி கட்டாயம்: தேர்தல் ஆணையம்.
கர்நாடக சிஐடி கேட்ட ஆதாரங்களை எப்போது வழங்குவீர்கள்: தலைமை தேர்தல் ஆணையருக்கு ராகுல் காந்தி கேள்வி.
ஐநா தலைமையகத்தில் அதிபர் டிரம்ப் ஏறியதும் எஸ்கலேட்டர் நின்றது ஏன்? நிதியை நிறுத்தியதற்காக பதிலடி?

பிரதானின் தடுமாற்றம்!

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு வந்து பல்வேறு உருட்டுகளையும் புரட்டுகளையும் செய்து விட்டுப் போயிருக்கிறார். அவர் சொன்னதை அவரே மறுக்கிறார்.

"ஒன்றைப் புரிந்து ஆராய்ந்து கற்க வேண்டுமானால் தாய் மொழிக் கல்வியே அவசியம்” என்கிறார் தர்மேந்திர பிரதான். அவர்தான் இந்தியைத் திணித்து இந்தியை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நிதி கிடையாது என்று அராஜகமாகச் சொல்பவர். ‘ஒன்றைப் புரிந்து ஆராய்ந்து கற்க வேண்டுமானால் தாய்மொழிக் கல்வியே அவசியம்' என்று அவர் உண்மையான ஈடுபாட்டுடன் சொல்வாரேயானால், ‘அவரவர் அவரவர் தாய்மொழியை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்வாரா?

 இந்திக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்து இந்தி பேசாத மக்கள் வாழும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று 'இந்தி வியாபாரம்' செய்து வரும் அவர், தாய் மொழியைப் பற்றிப் பேசலாமா?

"தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது. தமிழகத்தில் அரசு மும்மொழிக் கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்சினை?

 ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனைவிட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள், நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரதான். 

இந்தியைத் திணிப்பது அவர்தான். தமிழ்நாடு அரசு எந்த மொழியையும் மாணவர் மீது திணிக்கவில்லை.

ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று அடம்பிடிப்பவர் அவர்தான். இப்படி அடம்பிடிப்பவர்தான் சொல்கிறார், 'நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்' என்று. ‘நிதி தர மாட்டேன்' என்பவரும் அவர்தான். ‘ஒத்துழைப்பு தருவேன்' என்பவரும் அவர்தான். புரிந்துதான் பேசுகிறாரா? புரியாமல் பேசி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறாரா?

“கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்” என்கிறார் பிரதான். அரசியல் செய்வது யார்?

 அவர்தானே?

 ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையையும், பள்ளிக் கல்வி நிதியையும் ஒன்றாக்கி, அதன் நிபந்தனையாக்கும் அரசியலைச் செய்வது யார்? தர்மேந்திர பிரதான் தானே?

"தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது” என்று சொல்கிறார் பிரதான். ஒன்றிய அரசு தனது இந்தித் திணிப்புக் கொள்கையை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிப்பது அரசியல் அல்லவா? அராஜகம் அல்லவா?

"இரு மொழிக் கொள்கை என்பதை அரசியல் நிலைப்பாடாக தி.மு.க. வைத்துள்ளது” என்கிறார் பிரதான். அரசியல் நிலைப்பாடாக அல்ல, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் அது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி, நாடாளு மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம் அது.

 இது தி.மு.க.வின் நிலைப்பாடு மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சட்டம் அது. அந்தச் சட்டத்தைக் கேள்வி கேட்கும் உரிமை, தர்மேந்திர பிரதானுக்கு இருக்கிறதா?

கேள்வி கேட்கும் உரிமை, தர்மேந்திர பிரதானுக்கு இருக்கிறதா? : முரசொலி சரமாரி கேள்வி!

“ஒன்றிய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை” என்கிறார் பிரதான். இந்திக்கு ஆதரவான செயல்களுக்கு என்ன பெயர்? திணிப்பு அல்லவா? வேறு ஏதாவது சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளீர்களா?

“மொழியின் அடிப்படையில் பிரிவினைகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். சமூகம் அதையெல்லாம் தாண்டிச் சென்று விட்டது” என்கிறார் பிரதான். அதையேதான் நாங்களும் சொல்கிறோம். ‘மொழியின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க முயல்பவர்கள் தோல்வியையே அடைவார்கள்'. இதனை இந்தித் திணிப்பாளர்கள் முதலில் புரிந்து கொண்டு திருந்த வேண்டும்.

“நான் தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரதான். இதையே தான் பத்து ஆண்டுகளாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி வருக்கிறார்.

 ‘என்னால் தமிழில் பேச முடிய வில்லை' என்று பத்து ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார் அமித்ஷா. இவர்கள் தமிழில் பேசினாலும் என்ன பேசப் போகிறார்கள்? இந்தியை ஆதரித்துத் தான் பேசப் போகிறார்கள். அதை இந்தியிலேயே பேசட்டும். தமிழில் பேசவேண்டாம்!

தர்மேந்திர பிரதான் தனது உரையில் ஒரே ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறார். "நம் நாடு வரலாற்றுப் பெருமைகளை கொண்டது. ஆனால், வடக்குப் பகுதிகளில் தொடர் படையெடுப்புகளால், நாகரிகங்களை தக்க வைக்க முடியா- மல் போனது.

 அதேநேரம், தென் மாநில மக்கள், தங்கள் நாகரிகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்”என்று சொல்லி இருக்கிறார் பிரதான். ஆம் உண்மைதான். நாம் படையெடுப்புகளால் சேதமுறாமல் நம்மைக் காத்தோம். இன்றும் அதே படையெடுப்புகள் தொடரத் தான் செய்கின்றன. நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்!

“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அராஜகவாதிகள், ஜனநாயகப் பண்பு இல்லாதவர்கள்” என்று நாடாளுமன்றத்தில் கொக்கரித்தவர்தான் இந்த தர்மேந்திர பிரதான். பின்னர் மன்னிப்புக் கேட்டவர் இவர்.

 ‘யாரோ ஒரு சூப்பர் சி.எம். பேச்சைக் கேட்டுக் கொண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை' என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை இந்திய நாடாளுமன்றத்தில் கொச்சைப்படுத்தி அசிங்க அரசியல் செய்தவர் தான்இவர் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. 

தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு கட்டியம் கட்டி ஆடுகிறார் பிரதான்.

லடாக் வன்முறை.

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் 2019ஆம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டபோது லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரும் தனியாக ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

பனிப்பொழிவு நிறைந்த லடாக் பகுதி சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது. வெறும் 3 லட்சம் மக்களைக் கொண்ட லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் சாசனத்தின் 6வது பிரிவின் கீழ் தங்களது பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.

Ladakh
இக்கோரிக்கையை வலியுறுத்தி லடாக் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் லே பகுதியில் 35 நாள் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் லடாக் பகுதி முழுவதும் வன்முறை ஏற்பட்டது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி லடாக் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் லே பகுதியில் 35 நாள் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் லடாக் பகுதி முழுவதும் வன்முறை ஏற்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் நின்ற வாலிபர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கிருந்த பா.ஜ.க அலுவலகத்தைத் தீவைத்து எரித்தனர்.


2 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் வரும் வழியில் நின்ற வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தினர்.

அதோடு அவற்றைத் தீவைத்தும் எரித்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதனால் போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்ய கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் போலீஸார் பயன்படுத்தினர். ஆனால் கூட்டம் கலைந்து செல்லவில்லை.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் 50 போலீஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அரசு அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.

இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதனால் லே பகுதி போர்க்களமானது. இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சோனம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு இந்த வன்முறையைத் தொடர்ந்து சோனம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று 14 நாட்களில் முடித்துக்கொண்டார்.


உண்ணாவிரதத்தின்போது சோனம், Gen Z மற்றும் Arab Spring-style போராட்டம் குறித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுத்தான் வன்முறைக்கு வித்திட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "பல தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்திய போதிலும், சோனம் அதைத் தொடர்ந்தார். Gen Z மற்றும் Arab Spring-style போராட்டங்கள் பற்றிய ஆத்திரமூட்டும் வகையில் பேசி மக்களைத் தவறாக வழிநடத்தினார்.


அவரது ஆத்திரமூட்டும் பேச்சுகளால் ஒரு கும்பல் உண்ணாவிரதப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சி(பா.ஜ.க,) அலுவலகம் மற்றும் லேயின் அரசாங்க அலுவலகத்தைத் தாக்கியது" என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

லடாக் போராட்டத்தில் வன்முறை
லடாக் போராட்டத்தில் வன்முறை

தனி மாநிலக் கோரிக்கை மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்க மத்திய அரசு வரும் அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.


இப்பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கார்கில் ஜனநாயகக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது.

அருகில் உள்ள நேபாளம் மற்றும் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் புரட்சி ஏற்பட்ட நிலையில் லே பகுதியில் ஏற்பட்டுள்ள இப்போராட்டம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே வடகிழக்குப் பகுதியில் உள்ள மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி