கரூர் சம்பவம்!

 பாரி கார்த்திக் நியூஸ் தமிழ் சேனல் செய்தியாளர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தான் நேரடியாக பார்த்ததை விவரிக்கிறார்... 

இதுக்கு முழு காரணம் விஜய் என்று.. 

காரணம் 1 ) கன்சோல் ரூம் வச்சிருக்காங்க தவெகவினர் விஜயின் பஸ் அந்த இடத்தில் நின்று தான் ஸ்பீக்கர் கனெக்ட் பண்ணி பேசனும்... அந்த இடத்திற்கு பேரிகாட் போடவே இல்லலை .. நானும் அனைத்து கட்சி மீட்டிங்கிலும் கலந்திருக்கிறேன் இது போன்று பஸ்ஸை மக்கள் கூட்டத்திற்குள் வந்து யாரும் பேசுவதில்லை.. பேரிகேட் அமைத்து வைத்திருப்பார்கள்  .ஆனால் தவெகவினர் கூட்டத்தை காண்பிக்க அதைச் செய்யவில்லை...

2) நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் விஜய் வரும் போது அந்த பஸ்ஸுக்கு இடம் விட கன்சோல் ரூமுக்குள் ஓடியவர்கள் தள்ளு முள்ளு ஏற்பட்டு பஸ் உள்ளே வரும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்கள்... அப்பவும்மைக்கை பிடித்து பேசியிருக்கான்.... இவர்கள் மயக்கமடைவதைப் பார்த்தவுடன தவெக நிர்வாகிகள் தெரித்து ஓடி விட்டார்கள்.

3) தவெகவினர் போட்டிருந்த தகர மறைப்பு பஸ் உள்ளே வர வர நெரிசல் தாங்க மாட்டாமல் மக்கள் தகரத்தை உடைத்து உள்ளே விழுந்தார்கள் ...

4)மாடியின் மீது ஏறியவர்கள் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ நெரிசல் இன்னும் அதிகமாகியது.. 

5) அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸை தவெகவினர் அடித்து நொறுக்கினர்.. காவல் துறை அவர்களை அகற்றி மயங்கியவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியது...

6) நெரிசலில் மக்கள் விழ விழ ஒருவரை ஒருவர் மிதித்து தொடர்ந்து விழுந்திருக்க றார்கள். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் விஜய பேசிக் கொண்டே இருந்தார்.. இந்த சூழலிலும் விஜயுடன் செல்ஃபி எடுத்த மிருகங்களை பார்த்தேன்.....

எடப்பாடி பேசிய இடத்தை விட பெரிய இடமாகவே கொடுத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியும் நான் தான் கவர் பண்ணேன்...  கூட்டம் நாகரீகமாக நடந்தது...

மக்கள் விழ விழ கொத்துக் கொத்தாக மேலும் மேலும் விழுந்தார்கள்..,.  

நானும் எவ்வளவோ கட்சி நிகழ்ச்சிகளை கவர் பண்ணியிருக்கிறேன.. இவ்வளவு மோசமான கட்டுப்பாடற்ற கூட்டத்தைப் பார்த்ததில்லை... 

                                              -பாரி செய்தியாளர்.

கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழப்பு. 111 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை.
 இரவோடு இரவாக கரூர் விரைந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
விஜய் கூட்டம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் கலவர பூமிபோல காட்சியளிக்கிறது. சாலையெங்கும் சிதறிக் கிடக்கும் காலணிகள், கிழிந்து தொங்கும் பேனர்கள்.
கரூரில் 10,000 தவெக தொண்டர்கள் வருவார்கள் என்று கூறிவிட்டு, 27,000 பேர் வந்தபோதும் உரியப் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக டிஜிபி வெங்கட்ராமன் பேட்டி.




பி.பி.சி.செய்தி விபரம்.

தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். 

"காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை.

 மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்.கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. .

யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்," என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, "காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது.

 மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்." என்றார்.

கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி.

பிபிசியிடம் பேசிய அவர், "காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்." எனத் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி