மீண்டும்,மீண்டும் வா?

  மீண்டும் ஆரம்பம்!

தேர்தல் நெருங்கினாலே பாஜக தலைவர்க ளும் பிரதமர் மோடியும் பதற்றத்திலும் மிரட்சியி லும் தன்னிலை மறந்து பேசத்துவங்கி விடுவார்கள் என்பதை நாடு பல தேர்தல் காலங்களிலும் கண்டி ருக்கிறது.

 பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கும் சமய மானதாலும் தேர்தல் ஆணையத்தின் நடவ டிக்கைகளால் அம்பலப்பட்டு, கேவலப்பட்டுப் போனதாலும் மீளும் வகையறியாத நிலையில் பாஜக சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வாக்காளர் உரிமைப் பேரணி மூலம் பாஜக - தேர்தல் ஆணைய கூட்டுச் சதியை மாநி லம் முழுவதும் அம்பலப்படுத்தியதாலும் கையறு நிலையில் இருந்தது பாஜக. 

இதற்காகவே அமைந்தது போல, அமைத்தது போல- கடந்த வாரம் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரை யின் போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில் பிரதமர் மோடியின் தாயைப் பற்றி பேசியதாக தகவல் பரவியது.அவர் பா.ஜ.க.ஏற்பாடு செய்த நபராக இருக்க வாய்ப்பு அனேகம்.

அந்த அடையாளம் தெரியாத நபரை யார் எனக் கண்டுபிடிக்க முடியாதா பீகார் ஆட்சியா ளர்களால்? ஆனால் இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பாஜக தலைவர்களும் பிரதமர் மோடியும் தங்கள் வெறுப்புப் பேச்சைத் துவக்கி விட்டனர்.

 பிரதமர் மோடி காணொலி மூலம், எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டன; எனது தாயை மட்டுமல்ல இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளையும் அவமதித்து விட்ட னர் என்று கூறி வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்கள் மீதான வெறுப்புப் பேச்சை மோடி விதைத்துவிட்டார். அதன் மீது தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

உச்சநீதிமன்றத் தில் தில்லியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தொ டர்ந்த பொது நலவழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டது.

 யார் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொண் டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டை ஆக்கிர மித்தார்களோ அவர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பார்கள் என்று விஷம் கக்கி னார். நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள் என்று வெறுப்பைப் பரப்பினார். 

அதுமட்டுமின்றி நான் உயி ரியல்ரீதியாக பிறக்காதவன் என்று கூறியதன் மூலம் தனது தாயை அவமரியாதை செய்த வர்தான் மோடி. தன்னை அவதார புருஷனாக உயர்த்திக் கொள்வதற்காக தன் தாயைத் தாழ்த்தி யவர் அவர் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல், வெளி நாட்டிலிருந்து வந்ததும் நேரே பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குச் சென்ற மோடி, தாய் மார்கள் மீதும் சகோதரிகள் மீதும் வைத்திருக்கும் பாசம் வெறும் வேஷம் தான் என்பது ஏற்கெ னவே வெளிப்பட்டதாயிற்றே.

 மணிப்பூரில் பெண் கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்ற போது, துடிக்காத மோடியின் இதயம் இப்போது, பெண்களுக்காகத் துடிப்பது தேர்தல் பாசம்தான். 

இந்தப் பேச்சு எடுபடாது.

பாசிசம் குறித்த ஒரு பார்வை!

பாசிசம் என்றால் என்னவென்று பெருமளவு உலகிற்கு உணர்த்தியவன் முசோலினி, வெறும் இருபது வருடங்கள் மட்டுமே கோலோச்சி, பாசிசத்தின் உச்சத்தைத் தொட்டு உலகையே அச்சுருத்திய முசோலினி ஒரு பாலத்தின் கீழே குடும்பத்துடன் உயிரற்றப் பிணமாகத் தொங்க விடப்பட்டான் ஏன்?

அதிகார விருப்பு,   போர்களின் மீதான விருப்பம், வன்முறையின் மீதான நாட்டம், சோசலிஸத்தின் மீதான வெறுப்பு இவைகளே முசோலினியை பிணமாக தலைகீழாகத் தொங்க விடப்பட்டதிற்கான காரணமும் வரலாறும்.

இன்று உலகம் முழுக்க  பெருமளவில் புழங்கப்படும் சொல்லாக பாஸிஸம் மாறியிருக்கிறது. அதை எளிய மக்களாகிய நாம் அடையாளம் காணுவதும் அதன் கொடுமைகளை உணர்வதும் மற்றவர்க்கு உணர்த்துவதும் அவசியமான ஒன்று.

லாரன்ஸ்பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிஸம் என்றால் என்னவென்று 14 கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம் நண்பர்களே...

1. அதீத தேசியவாதம்.

அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது....

2. தனிமனித உரிமை மறுப்பு.

அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல...

3. பொது எதிரி என்கிற கற்பனை எதிரியை உருவாக்குவது, 

மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம். 

4. ராணுவத்தின் அதிகாரம்.

நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்....

5. ஆணாதிக்கம்.

அதிகாரத்திலிருபபவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்....

6. ஊடகங்கள அரசு கைகளில்.

அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.

7. தேசப் பாதுகாப்பு அச்சம் உருவாக்கப்படும்.

தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.

8. மதமும் அரசும் ஒன்றாக இருக்கும்.

குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.

9. முதலாளிகள் நலன் பாதுகாக்கப்படும்.

தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்....

10. உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுவர்.

தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்...

11. கல்வி மறுக்கப்படும்.

அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்...

12. தண்டனைகள் மீதான ஆர்வம்.

பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்...

13. ஊழல்.

முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்...

14 முறைகேடான தேர்தல்கள்.

பாஸிஸம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்...

மேற்கூறிய 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், 

இந்த14 ம் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா 

என யோவசியுங்கள், 

பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாசிஸ்ட்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.

ஏனென்றால் பாசிஸம் முதலில் மக்களின் ஆதரவின்றி வளர்வதில்லை ....




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி