பொம்மலாட்ட கட்சி?

 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. இணையதளம் முடங்கியதால் நாளை வரை நீட்டித்து அறிவிப்பு

நாட்டின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு

.ஹரித்வார் செல்வதாக கூறிய செங்கோட்டையன் அமித் ஷாவுடன் சந்திப்பு. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெற்றதால் அதிமுகவில் சலசலப்பு

 திருக்கோவிலூர் அருகே மேடையில் இருந்து இறங்கும் போது கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி. சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
மும்பையில் கடல் அலையில் சிக்கிக் கொண்ட வேன். கடலில் தத்தளித்த வேனில் இருந்த 6 பேரும் பத்திரமாக மீட்பு.
நேபாளத்தில் சமூக ஊடக தடையை எதிர்த்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

Gen Z என தங்களை அடையாளப்படுத்தும் இளம் தலைமுறையினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்றுதிரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பீகாரில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம்.பி.யை தோளில் சுமந்து சென்ற கிராமவாசி. இணையத்தில் வீடியோ வெளியான நிலையில் கடும் விமர்சனம்.
நேபாளத்தில் வெடித்த இளைஞர்களின் போராட்டத்திற்கு பணிந்தது அரசு. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவிப்பு.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் நாட்டில் அரசு கவிழ்ந்தது. பிரதமர் பேரூ அரசு கவிழ்ந்ததை கொண்டாடிய எதிர்க்கட்சிகள்.
'நான் சொல்வதை ஒரு எச்சரிக்கையாக கருதி காசாவை விட்டு உடனே வெளியேறுங்கள்'-காசாவில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு எச்சரிக்கை.


பொம்மலாட்ட கட்சி?


அ.தி.மு.க.வில் கலகக் கொடி தூக்கிய செங்கோட்டையனிடம் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 

கட்சியிலிருந்து நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சியைப் பொறுத்தவரை செங்கோட்டையன் சீனியர். 1991ல் ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சி அமைத்தபோதே அமைச்சராக இருந்தவர். ஈரோடு மாவட்டத்தில் தனக்கென செல்வாக்கைக் கொண்டவர். 

தன் அரசியல் வாழ்வில் ஒரு முறை தவிர, கோபி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர். அதே ஈரோடு மாவட்டம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பூர்வீகம். அவரது சொந்தக்காரர்கள் அங்கே இருக்கிறார்கள். அவரது சொந்தக்காரர்கள் செங்கோட்டையனுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இதில்தான் உள்அரசியல் அடங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் அவருடைய சுற்றுப்பயணத்தை திட்டமிடுபவராகவும் இருந்தவர் செங்கோட்டையன். பிறகு அந்த நம்பிக்கை தகர்ந்துபோகிறது.

 செங்கோட்டையன் மீது கட்சிக்குள்ளும் ஆட்சிநிர்வாகத்திலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. காய்களை மாற்றுவது அரசியல் சதுரங்கத்தில் சர்வசாதாரணமானது.

 செங்கோட்டையனுக்குப் பதில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு போயஸ் தோட்டத்தில் முக்கியத்துவம் கிடைக்கிறது. அதற்கு காரணமானவர் சசிகலா.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்தபோது செங்கோட்டையன் செல்வாக்கு குறைந்திருந்தார். சசிகலா தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அதுவரை அந்தப் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தம் நடத்தினார். 

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே உதறித்தள்ளிவிட்டு அதிகாரத்தை அனுபவிக்கும் பக்கா அரசியல்வாதி என்பதை நிரூபித்தார். கட்சிக்கு பொதுச்செயலாளராகவும் ஆகிவிட்டார்.

பழனிசாமியின் அதிகார அரசியலால் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., கே.சி.பழனிசாமி என அ.தி.மு.க.வின் நேரடி-மறைமுக புள்ளிகள் கட்சிக்குள் செல்வாக்கை இழந்து தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டிய நிலை உருவானது.

 அ.தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, எடப்பாடி பழனிசாமியை கூட்டணித் தலைவர் என்று சொல்லிக்கொண்டே அவருடைய பலத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை கட்சிதமாக மேற்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்து நின்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை வைத்த விமர்சனங்கள் படுகாத்திரமானவை.

 தற்போது அ.தி.முக.-பா.ஜ.க ஒரே கூட்டணியில் உள்ள நிலையில், அண்மைக்காலமாக அண்ணாமலை  அடக்கி வாசிப்பதும், அவரது சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் செங்கோட்டையன், அதே சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், அந்தக் குரலை ஆதரித்து, ஏற்கனவே எடப்பாடியால் ஓரங்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் (இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தினர்) பேசுவதும் அவர்கள் நீண்டநாட்களாக காத்திருந்த சூழலுக்கான வாய்ப்பு கிடைத்திருப்பதையே காட்டுகிறது.

அரசியலைப் பொறுத்தவரை சீனியர்-ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது. வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் வெற்றி-தோல்வி உள்ளது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்தலைவரான கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது,  பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. கலவரம் செய்தபோது, அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் செல்வி ஜெயலலிதா சொன்னதை செய்வதற்காக, முதலமைச்சர் மீது பாய்ந்து தாக்கி, அவரது கருப்புக்கண்ணாடியைத் தட்டிவிட்டவர்தான் செங்கோட்டையன். 

அவருடைய அரசியல் பாதையில் இதுபோன்ற தலைமைக்கான எடுபிடி-அடியாள் வேலைகளும், சொந்தத் தொகுதியில் உள்ள சமூக ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான் நிறைந்துள்ளனவே தவிர, அமைச்சர் பதவியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் நிறைவேற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போதுதான், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துக்கு தலையாட்டி, +1 வகுப்பிலும் பொதுத்தேர்வு என்பதைக் கொண்டு வந்தார். 

மாணவர்களின் மன அழுத்தம் கருதி தற்போதைய அரசில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. துறை சார்ந்த பொறுப்போ, மக்கள் நலன் சார்ந்த பார்வையோ செங்கோட்டையனிடம் கிடையாது. தலைமையிடம் நல்ல பிள்ளை போல நடந்தகொண்டு கட்சிப்பதவி-மந்திரிப் பதவி ஆகியவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் அரசியலை செய்தார் சீனியர் செங்கோட்டையன். 

அவருக்கு ஜூனியரான எடப்பாடி பழனிசாமி அதே அரசியல் பாணியைத்தான் செய்தார்.

வாய்ப்பு கிடைத்தபோது கட்சித் தலைமையையே தூக்கிப் போட்டுவிட்டு, தன் தலைமையில் கட்சியைக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டு அரசியல் வியாபாரிகளையும் தன் கண்ட்ரோலில் வைத்து பொம்மலாட்டம் ஆடுகிறது பா.ஜ.க. தலைமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி