இறையாண்மையை மீறி
இன்று முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: 809 மையங்களில் நடைபெறுகிறது.
வீடு தேடி பழைய பொருட்கள்,கழித்தப் பொருட்கள் சேகரிப்பு; ஒரேநாளில் 45.64 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்:சென்னை மாநகராட்சி அசத்தல்.


மெட்ராஸ் பொருளாதாரக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் உ.பி.யைச் சேர்ந்த ரோஹித் சந்திரா (21) என்பவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
அலையில் சிக்கிய மற்றொரு கவின் பிரசாந்த் என்ற மற்றொரு மாணவனின் சடலம், நேற்று எலியட்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்டது.
இறையாண்மையை மீறி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது ஆகும் என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து நேற்று இரவு பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் ஆட்சியாளர்கள்.
ஆப்கானிஸ்தான் ராணுவம்
இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மீறுவது போல செயல்பட்டது.
ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தியது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் ஆயுதப் படைகள் இரவு டுராண்ட் கோட்டில் உள்ள பாகிஸ்தான் படை மையங்களின் மீது வெற்றிகரமாக பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த ஆபரேஷன் நள்ளிரவில் முடிந்தது.
பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறினால், எங்களுடைய படைகள் எல்லைகளைப் பாதுகாக்க தயாராக இருக்கும் மற்றும் சரியான பதிலடியைத் தரும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இதுவரை எதுவும் கூறவில்லை.