கரூர் கொலைகள்- உச்சநீதிமன்றம்.

 கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறையும் இந்தியாவுக்கு தேவை: ராகுல் காந்தி.
சென்னையில் ஸ்ரேசன் ஃபார்மா(இருமல் மருந்து) மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: 4 துறை அதிகாரிகளிடம் விசாரணை.
ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஆபாச பேச்சு.
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக தனிப்படை விசாரணை.

தமிழ்நாட்டில் இன்று

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.










கரூர் கொலைகள்- உச்சநீதிமன்றம்.

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.


"இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது.


எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.


சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.


ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.


சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை