ஏ.ஐ.க்கு 83 வாரிசுகள்?

கபாலா காலாவதி ஆனது!

 எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவரும் கபாலா என்ற விதிமுறையை பின்பற்றுவது கட்டாயம். கபாலா என்பது வெளிநாடுகளில் இருந்து சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் உரிமையாளரை குறிக்கிறது. 
இவர்தான் ஸ்பான்சர்ஷிப் ஆக கருதப்படுவார்.

சவுதிக்கு வேலைக்கு வரும் பணியாளருக்கு இவர்தான் முழுப் பொறுப்பு. அதனால், பணியாளர்களின் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இவர் கையில்தான் இருக்கும். அவசர காலத்தில் ஏதேனும் உதவி தேவை என்றால் கூட இவரது அனுமதியின்றி எதையும் செய்ய முடியாது. இது ஒரு நவீன அடிமைத்தன வடிவமாக விவரிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை முதலாளி வாங்கி வைத்துக்கொள்கிறார். இதனால், விருப்பமில்லாத வேலையை செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அதிக நேரம் வேலை வாங்குவது, விடுமுறை அளிக்காமல் வேலை செய்ய துன்புறுத்துவது, உரிய சம்பளம், தரமான உணவு மற்றும் சுகாதாரமான தங்குமிடம் கொடுக்காமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அலைக் கழிக்கப்படுகின்றனர். இது, அவர்களை உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் பாதித்தது.
இதை எதிர்த்து தொழிலாளர்கள் சட்டரீதியில் தீர்வு காண வேண்டும் என்றாலும் அதற்கும் இந்த கஃபீல்களின் அனுமதி தேவை. எனவே, குடும்ப கஷ்டத்துக்காக வேறு வழியின்றி கொத்தடிமை போல வேலை செய்யும் நிலை தொடர்ந்து வந்தது. 

இந்த நிலையில்தான், உலக தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக சவுதி அரேபியா, தொழிலாளர் சட்டங்களில் தற்போது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தை நவீனமயமாக்குதல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் என்ற சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் 2030 தொலைநோக்கு திட்டத்துக்கு இத்தகைய சீர்திருத்தம் அவசியமான ஒன்றாகவும் மாறிவிட்டது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்பை அவர்களது முதலாளிகளுடன் இணைக்கும் 50 ஆண்டு கால பழமையான கபாலா (ஸ்பான்சர்ஷிப்) முறையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக 2025 ஜூன் மாதத்தில் சவுதி அரேபியா அறிவித்தது.

புதிய தொழிலாளர் சீர்திருத்த அறிவிப்பின் கீழ், சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இனி தங்கள் ஒப்பந்தத்தை முடித்த பிறகோ அல்லது உரிய அறிவிப்பை வழங்கிய பிறகோ முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் வேலைகளை மாற்றிக் கொள்ளலாம்.

தங்களது ஸ்பான்சரின் வெளியேறும் அல்லது மறு நுழைவு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு தொழிலாளர்கள் பயணம் செய்யலாம். 

இந்த கபாலா முறை ஒழிப்பால் தொழிலாளர் மீதான முதலாளியின் சுரண்டல் குறையும் என்பதுடன் நிறுவனங்களுக்கிடையே பணிமாறுதல் எளிதாகும். 

அதிக போட்டி ஊதியம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இந்த புதிய மாற்றம் வழிவகுக்கும்.

ஏ.ஐ.க்கு 83

 வாரிசுகள்?

அறிவியல் புனைக்கதை போல் தோன்றலாம், ஆனால் இது அல்ஜீரிய அரசியலில் நடந்த நிஜச் செய்தி! உலகிலேயே முதன்முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தை அமைச்சராக நியமித்த அல்பேனியாவில், பிரதமர் எடி ராமா ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர்களின் ஏ.ஐ. அமைச்சர், டீலா (Diella), 83 'டிஜிட்டல் குழந்தைகளுக்கு' தாயாகப் போகிறாராம்! ஆம், அவர் 'கர்ப்பமாக' இருப்பதாகக் கூறி, ஒவ்வொரு சோஷலிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கும் (MP) ஒரு ஏ.ஐ. உதவியாளரை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்துள்ளார்.

டீலா: ஒளிமயமான நிர்வாகத்தின் 'சூரியன்'

'டீலா' என்ற பெயருக்கு அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று அர்த்தம். ஊழலற்ற, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொது கொள்முதல் (Public Procurement) முறையை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதம் டீலா அதிகாரப்பூர்வமாக அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாரம்பரிய அல்பேனிய உடையணிந்த ஒரு பெண்ணின் உருவத்தில் காட்சி அளிக்கும் இவர், முற்றிலும் 'கோட் மற்றும் பிக்சல்களால்' ஆன ஒரு டிஜிட்டல் நிறுவனம்.

இவர் ஏற்கனவே ஜனவரி மாதம் 'ஈ- அல்பேனியா’ தளத்தில் ஒரு மெய்நிகர் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசு ஆவணங்களைப் பெறுவதில் உதவி வருகிறார்.

83 'ஏ.ஐ. வாரிசுகள்' செய்யும் வேலை என்ன?

பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் (Global Dialogue) மாநாட்டில் பேசிய பிரதமர் ராமா, இந்தத் திட்டத்தை ஒரு பெரிய சவால் என்றும், "முதல்முறையாக டீலா 83 குழந்தைகளுடன் கர்ப்பமாக இருக்கிறார்" என்றும் அறிவித்தார்.

இந்த 83 டிஜிட்டல் 'குழந்தைகளும்' சோஷலிஸ்ட் கட்சி எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட உதவியாளர்களாக செயல்படுவார்களாம்.

பாராளுமன்ற அமர்வுகளில் நடக்கும் அனைத்தையும் பதிவு செய்து வைப்பார்கள்.

எம்.பி.க்கள் தவறவிட்ட விவாதங்கள் குறித்த சுருக்கத்தை வழங்குவார்கள்.

மிக முக்கியமாக, ஒரு எம்.பி. காபி குடிக்கச் சென்றுவிட்டுத் திரும்ப தாமதமானால், அங்கே என்ன பேசப்பட்டது என்று கூறி, யாரை எதிர்த்துப் பேச (counter-attack) வேண்டும் என்பதற்கான ஆலோசனையையும் இந்த ஏ.ஐ. 'குழந்தைகள்' வழங்குவார்களாம்!

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த ஏ.ஐ. உதவியாளர்கள் முழு செயல்பாட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று பிரதமர் ராமா நம்புகிறார். மனித அமைச்சரைக் கொண்டிராத முதல் நாடாக அல்ஜீரியா திகழ்வது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படிதான். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை