கூட்டணிக்கு கட்சிகள் தேவை!
தமிழ்நாட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. இன்று நீலகிரி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு









ஆரம்பத்தில் இருந்தே வலுவான – பிரம்மாண்ட கூட்டணியை அமைப்பேன் என்று அழுத்தமாகச் சொல்லி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
தவெக தங்கள் அணியில் இணையும் என்பதை மனதில் வைத்துதான் இப்படி சொல்கிறார் என்று பேச்சு பரவியது. அதற்கேற்றார் போல் அதிமுகவுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிற தகவலும் பரவியது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற விஜயின் பிடிவாதத்தால், பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாததால் கூட்டணி அமைவதில் இழுபறி ஏற்பட்டது.
இந்த இழுபறி நீடித்து வந்ததால் இது சரிப்பட்டு வராது என்கிற முடிவுக்கு வந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பழனிசாமி.

தவெக தனித்து போட்டியிடுவதாகவே அக்கட்சித் தலைவர் விஜய் சொல்லி வந்தார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிப்போய்விட்டது. கரூர் சம்பவத்தில் தவெக பக்கம் நின்றார் பழனிசாமி.
இதனால் தவெகவினரின் ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கிறது. தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட பிரச்சாரங்களின் போது தவெகவினர் கட்சிக்கொடியுடன் பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.
குமார பாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் தவெக கொடிகள் பறந்தன. இதைப்பார்த்துதான் பழனிசாமி பரவசமானார்.

’’அண்ணா திமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும்’’ என்று சொன்ன பழனிசாமி, கூட்டத்தில் பறந்த தவெக கொடியை சுட்டிக்காட்டி, ‘’அங்க பாருங்க கொடி பறக்குது..பிள்ளையார் சுழி போட்டாங்க.. எழுச்சி ஆரவாரம்..’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக மேலிடம் விஜயிடம் பேசிவருவதாக தகவல் பரவும் நிலையில், அதிமுக – தவெக கூட்டணி அமையப்போகிறது என்பதை சூசகமாக சொல்லி விட்டார் பழனிசாமி.

’’பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கும். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருப்பதன் மூலம், அவர் சொன்ன அந்த புதிய அடிமை தவெகவென்று தெரிகிறது என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும் என்கிற நம்பிக்கையில், பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் அதிமுகவினரே தவெக கொடிகளை ஏந்தி பரபரப்பை ஏற்படுத்துவதாக தகவல். தவெக தரப்பில் இருந்தும் இதற்கு மறுப்பு எதுவும் இல்லாததால் கூட்டணிக்கு அவர்களும் கிரீன் சிக்னல் காட்டுவதாகவே தெரிகிறது.