இக்கட்டில். ஐ.டி...!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை.

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது
வத்தலகுண்டு அருகே மாற்று சாதியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் மகளின் கணவரையே வெட்டிப் படுகொலை செய்த பெண்ணின் தந்தை சந்திரன் கைது.
திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 லட்சத்தில் அரண் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு அமைச்சர்கள்,எஸ்.பி.வேலிமணி,அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் தீவிரம் காட்ட வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஸ்ரீ சன் பார்மசியூட்டிகல் நிறுவனத்தை மூட உத்தரவு மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து: தமிழக அரசு.
தூய்மை பணியாளர்கள் வழக்குரைஞர்கள் போராட்டம் ஒரு நபர் ஆணையம் அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி.
சட்டப்பேரவையில்  அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் புறப்பட்டார்.







இக்கட்டில் ஐ.டி.துறை!

அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை ஐடி துறையும் எதிர்கொண்டு வருகிது.

சமீபத்தில் ஹெச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய ஐடி துறை, அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள 'ஹயர்' மசோதாவின் வடிவில் புதிய அச்சுறுத்தல்களைச் சந்திக்க உள்ளது. அமெரிக்க செனட்டில் ஹால்டிங் இண்டர்நேஷனல் ரிலொகேஷன் ஆஃப் எம்ப்ளாய்மெண்ட் (ஹயர் - HIRE) மசோதா கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு பெறுவதையும் இந்த மசோதா தடை செய்கிறது.இந்த மசோதா இந்திய ஐடி துறையை ஒரு கடினமான கட்டத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொறியாளர்கள் கவனத்துடனும் கவலையுடனும் சமீபத்திய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

குழப்பமிக்க,நிலையற்ற சூழலைக் கடந்து செல்ல ஐடி ஊழியர்கள் தங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சியும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991) ஒருசேர நடந்தது. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் ஐடி துறையில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கிறது.

அதனுடன் சேர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ந்துள்ளது.

உணவுக் கலாச்சாரமும் மாறியுள்ளது.ஐடி துறைக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மற்ற துறைகளிலும் அதன் பாதிப்பு உணரப்படும்.

ஐடி அமைப்பான நாஸ்காம் தரவுகளின்படி, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபியில்) ஐடி துறையின் பங்கு 7.3%2020-இல் 191 பில்லியன் டாலராக இருந்த இந்திய ஐடி துறையின் வருவாய் 2025-இல் 282 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஐந்து ஆண்டுகளில் 50% வளர்ச்சி கண்டுள்ளது. 2026 நிதியாண்டில் இது 300 பில்லியன் டாலர் (தோராயமாக 26 லட்சம் கோடி) என்கிற மைல்கல்லை எட்டும் என நாஸ்காம் (Nasscom) கணித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் (2024-2025) ஐடி துறையில் 58 லட்சம் பேர் வேலை பார்ப்பதாக நாஸ்காம் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையை சார்ந்தே இருக்கின்றன. அமெரிக்காவுக்கான மென்பொருள் ஏற்றுமதி 2024-ஆம் ஆண்டு 7.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மென்பொருள் ஏற்றுமதியில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமாக அமெரிக்காவிற்கு தான் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த இடத்தில் பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து உள்ளன.

ஐடி பெருநிறுவனங்களின் வருமானத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து தான் வருகின்றன. விப்ரோ நிறுவனத்தின் 58% வருமானம் அமெரிக்காவிலிருந்தும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் 48% வருமானம் வட அமெரிக்க பிராந்தியத்திலிருந்தும் (பெரும்பாலும் அமெரிக்காவைத் தான் குறிக்கிறது) கிடைப்பதாக அந்த நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் அமெரிக்க வருவாயில் 48.4% அதன் முக்கியமான துறைகளாக கருதப்படும் வங்கி, நிதி சேவைகள், காப்பீடு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளிலிருந்து தான் கிடைக்கின்றன. 

இதன் பொருள் இந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் அதன் சேவைகளுக்கு இந்தியாவைச் சார்ந்திருக்கிறது என்பதே.

இந்திய நிறுவனங்கள் பிற நாடுகள் மற்றும் உள்நாட்டு சந்தை மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளது.

இந்திய ஐடி வருவாயில் பெரும்பான்மை ஏற்றுமதியைச் சார்ந்தே இருக்கின்றன. 2025 நிதியாண்டுக்கான தரவுகளை எடுத்துக் கொண்டால் 282.6 பில்லியன் டாலரில் 224.4 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 80%) மென்பொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே கிட்டத்தட்ட இதே நிலை தான் தொடர்கிறது.

இந்திய நிறுவனங்கள் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு நீண்ட கால நோக்கில் தங்களின் சந்தையை உலகெங்கிலும்ப பரவலாக்க வேண்டும்.

அதுவே அமெரிக்கா உண்டாக்கிய சிக்கலை எதிர் கொள்ள இயலும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை