அடிமைகளின் பைபிள்!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., மழை பதிவு.

ஆக்ராவில் அதிவேகமாக சென்ற கார் ப நடந்துசென்றவர்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழப்பு.
வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய விதிகள் நடைமுறை: ரிசர்வ் வங்கி.
சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி தகவல்.
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் அருகே கார் மரத்தில் மோதி 4 பேர் உயிரிழப்பு.
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில் முருகானந்தம்,புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு.
மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது: கேரள உயர்நீதிமன்றம்.
கேரளாவின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.2,424.28 கோடி கடன் தர உலக வங்கி ஒப்புதல் 









அடிமைகளின் பைபிள்! 

 எபிரேயர்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பி, 'என் மக்கள் வனாந்தரத்தில் எனக்கு ஆராதனை செய்யும்படி அவர்களை அனுப்பிவிடு' என்று சொல்லச் சொன்னார்."

மோசஸ் எகிப்திய மன்னன் பார்வோன் ராம்சேஸிடம் வைத்த இந்தக் கோரிக்கைதான், அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேலியர்களை எகிப்தின் அரசன் விடுவித்து, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஆரம்பம்.

ஹாலிவுட் இந்த கதையை திரைக்கு கொண்டுவருவதற்கு முன்பே 10 கொள்ளைநோய்கள், செங்கடல் பிளவுபடுதல் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசய நிகழ்வுகள் இந்தக் கதையை பைபிளில் மிகவும் அறியப்பட்ட பிரபலமான கதைகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.

இருப்பினும், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளியிடப்பட்ட பரிசுத்த நூலின் ஒரு பதிப்பில், "கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்" விடுதலையைப் பற்றிய 'யாத்திராகமம்' (விடுதலைப் பயணம்' Exodus) புத்தகத்தில் விவரிக்கப்பட்ட கதை இடம்பெறவில்லை. 

அடிமைத்தனத்தையும் ஒரு நபர் மற்றவரை ஒடுக்குவதையும் கண்டிக்கும் மற்ற பகுதிகளும் இல்லை.

பிரிட்டிஷ் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கறுப்பின அடிமைகளின் பயன்பாட்டிற்கான பரிசுத்த வேதாகமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்" (Select parts of the Holy Bible, for the use of the Negro Slaves, in the British West-India Islands). இது 1807 இல் லண்டனில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு.

இருப்பினும், காலப்போக்கில், வரலாற்றாசிரியர்கள் இந்த நூலை "அடிமைகளின் பைபிள்" என்று மறுபெயரிட்டுள்ளனர்.

இந்த பதிப்பை 'கறுப்பின அடிமைகள் மதமாற்ற சங்கம்' (Society for the Conversion of Negro Slaves) என்ற அமைப்பு வெளியிட்டது. இது ஆங்கிலிகன் திருச்சபையைச் (Church of England) சேர்ந்த மிஷனரிகளின் அமைப்பாகும். இந்தக் குழு கரீபியன் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் காலனிகளில் உள்ள தோட்டங்களில் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கு மத போதனை செய்வதில் ஈடுபட்டது. ஆனால், அடிமை முறையை அவர்கள் கேள்வி கேட்கவில்லை.

"இந்த பைபிள் பதிப்பு, அடிமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் பெருமளவில் திருத்தப்பட்ட ஒரு நூலாகும்" என்று பிரிட்டிஷ் இறையியலாளர் ராபர்ட் பெக்போர்ட் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

"இது சுமார் 90% பழைய ஏற்பாட்டையும் மற்றும் 60% புதிய ஏற்பாட்டையும் நீக்கிய ஒரு நூலாகும்" என்று பர்மிங்காம் நகரில் உள்ள 'தி குயின்ஸ் ஃபவுண்டேஷன்' (The Queen's Foundation) மையத்தின் இன நீதியின் பேராசிரியரான அவர் விளக்கினார். இந்தக் மையம் புதிய ஆங்கிலிகன் மதகுருமார்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.

புராட்டஸ்டண்ட் பைபிள் பதிப்பில் 66 புத்தகங்கள் உள்ளன, கத்தோலிக்க பதிப்பில் 73 புத்தகங்கள் உள்ளன. ஒரு கிழக்கு ஆர்த்தடாக்ஸ் மொழிபெயர்ப்பில் 78 புத்தகங்கள் உள்ளன. ஆனால் வாஷிங்டன் பைபிள் அருங்காட்சியகத்தின்படி, "அடிமைகளின் பைபிளில்" சுமார் 14 புத்தகங்கள் மட்டுமே உள்ளன.

வாஷிங்டன் பைபிள் அருங்காட்சியக (Museum of the Bible of Washington) சேகரிப்புகளின் இயக்குநர் அந்தோனி ஷ்மிட் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். அடிமைகளின் பைபிளின்' சில எஞ்சிய பிரதிகளில் ஒன்று 2017-ல் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது.

இப்பைபிள் 1806 களில் உருவாக்கப் பட்டதெனத் தெரிகிறது.

18ஆம் நூற்றாண்டு முழுவதும், சில கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்களின் ஆன்மீக நலனில் அக்கறை கொண்டிருந்தனர், ஆனால் இது தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பயந்த தோட்ட உரிமையாளர்கள் அவர்கள் மத போதனை பெறுவதை எதிர்த்தனர்.

அடிமைகளே, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல, கள்ளமில்லாமல், பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்." – அப்போஸ்தலர் பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தைச் சேர்ந்த இந்த பகுதி, இந்த பதிப்பில் காணப்படும் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வாசகங்களில் ஒன்றாகும்.

அதைத்தொடர்ந்தே அடிமைகளுக்கெனவே பைபிள் உருவாக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை