ஏடிஎம்மில் தொலைத்தப் பணம்?

 கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்படுகிறது.

உலகத்தின் முதல் யுபிஐ, க்யூ ஆர் கோடு ஏடிஎம் என்று கூறுகிறது அந்த சமூக ஊடக விளம்பரம். சிடிஎம் மற்றும் ஏடிஎம் நிறுவுவதற்கு ரூ.3.54 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்குமென்றும் கூறுகிறது.

கோவை நவஇந்தியாவில் ஒரு முகவரியில் இயங்கிவந்த IZET E-PAYMENT PVT LTD என்ற நிறுவனம்தான் இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (ztm atm) நிறுவ இடம் கொடுப்பவர்களுக்குதான் இந்த வருமானம் வாய்ப்பு என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இன்ஸ்டராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தைப் பார்த்து, பல மாநிலங்களிலிருந்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

'முதலீடு ரூ.3.54 லட்சம் மாத வருமானம் ரூ.1.5 லட்சம்'என விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, தமிழ்மணி

பணம் செலுத்தியவர்களிடம் ஒன்று அல்லது 2 இயந்திரங்கள், பிரீமியம் ஜோன் எனப்படும் மினி வங்கி போன்றவை அமைத்துத்தருவதாகக் கூறி, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலானவர்களின் இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. நிறுவிய சில இடங்களிலும் அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட சில இயந்திரங்களும் முறையாக இயங்கவில்லை.

கோவை நவஇந்தியாவில் இயங்கி வந்த அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்பு எண் என்று அவர்கள் கொடுத்த எந்த எண்ணிலும் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்நிலையில்தான் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர்.காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
(அ)நீதி வெல்லும்?

கரூர் 41 படு கொலைகள் நடந்த நேரத்தில் தமிழக அரசோ,முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது ஏனைய தி.மு்க.வினரோ. நடிகர் விஜயை குற்றம் சாட்டவில்லை.
மாறாக தனது தொண்டர்களை யாராவநு கொல்ல எண்ணுவார்களா?எனக் கேள்வி எழுப்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பதறிப்போய் நமது நிர்வாகத்தில்  இப்படிச் சாவுகளா? என இரவெனப் பாராமல். கரூர்க்கே முதல்வர் வரைச் சென்று உதவினார்கள்.உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.இறுதிசடங்கு நடக்க உதவினார்கள்.அவர்கள் துயரைக் குறைக்கும் விதமாக நிதியுதவி முதல் வர் அறிவிக்க அவற்றை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி,அதிகாரிகள் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.

ஆனால் இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும்  மூலமான த.வெ.க,நிர்வாகிகள்,நடிகர் விஜய் தலைமறைவாகினர்.

போதாக் குறைக்கு போலி லாட்டரி ஆதவ்அர்ஜூனா புரட்சி வெடிக்கும் என டூவிட் போட்டு நீக்கினார்.

தனது போலி கணக்குகள் மூலம் செந்தில் பாலாஜி எப்படி அரைமணி நேரத்தில் வந்தார்.முதல்வர் இரண்டுமணி நேரத்தில் ஏன் வந்தார் எனக் கேள்விகளை எழுப்பி அதை சமஸ் புதியதலைமுறை,அதிமுக.வேலுமணி தொடர்புள்ள பாலிமர்,காவி சிங்கி தந்தி தொலைக்காட்சிகள் மீண்டும்,மீண்டும் வாந்தி எடுத்தன.
போதாக்குறைக்கு ஸ்லைடுகள் வேறு போட்டன.
இந்த அவலத்தைக் கண்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடந்தவற்றை ஆதாரங்களுடன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.

எல்லாப் பழிகளையும் அரசு மீது சமத்த முயற்சித்தன தவெக நிர்வாகிகளும்,மேலே சொன்ன தொ.கா.க்களும்.

நிகழ்வுக்கு துக்கம் கொண்டாடிய ஆதவ் டெல்லி சென்று தங்களைக் காப்பாற்ற,சி.பி.ஐ க்கு வழக்கை மாற்றி ஊறப்போடக் கோரி  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்தார்.கட்சியை பாஜக கூட்டணிக்கே வரும் என விஜய் மூலமும் பேசவைத்தார்.
அவர் ஆவலை பூர்த்தி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

தங்களுக்குத் தெரியாமலே தங்கள் பெயரில் வழக்கா என்ற கரூர் பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டபோது ,
.முதலில் சி.பி்ஜ க்கு மாற்றி தீர்ப்பு,பின்னாள் பார்ப்போம் என்றுவிட்டு சி.பி்ஜ க்கு மாற்றி தீர்ப்பை வாசித்துவிட்டனர்.

தமிழ்நாடு கேடர் ஆனால் தமிழ்நாட்டில் பிறக்காத ஐபிஎஸ விசாரணை என்றனர்.

அஸ்ரா காக். தமிழரல்ல.மிக நேர்மையான அதிகாரி.
பின் ஏன் அவர் விசாரிக்க கூடாது?

விசாரணை ஆணையமும் கிடையாது.
அருணாஜெகதீசன் ஸ்டெர்லைட் 14பேர்படுகொலைக்கு காரணமானவர்களைச் சுட்டிக் காட்டியவர்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. இன்னும் விசாரிக்கிறது.
அதைத்தான் விஜய்ஆதவ் விரும்பிகிறார்கள்.

ஆனால்  அதனிடம் விஜய் குடுமி மாட்டிக் கொண்டால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிலைதான்.
அமித்சா கூப்பிடும் போதெல்லாம் சரணம் சாமி என நிற்க வேண்டும்.
அதில் விஜயை மாட்டி விட்டவர்கள் லாட்டரி மார்ட்டின் மரிமகன் ஆதவ்,பழனிச்சாமி,மற்றும் பு்த.சமஸ்,பாலிமர்,தந்தி தொல்லைகாட்சிகள்.

ஆதவை ஏன் தி.மு.க,வி.சி.க போன்றவை அடித்து கட்சியை விட்டு நீக்கின என்பதை கொஞ்சமாவது பகுத்தறிந்திருக்க வேண்டும் விஜய்.

நீதி வெல்லும்!
இனி இதை சொல்லமுடியாது விஜய்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை