சூறாவளி வேட்டையர்?

ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது மோன்தா புயல். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

மோன்தா புயலால் விஜயவாடா மார்க்கத்தில் 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிப்பு. 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தகவல்.
வாக்குகளை பறிக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது என்றும் திட்டவட்டம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம். திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு.
பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய். மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் இந்தியா கூட்டணி சார்பில் வாக்குறுதி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல். 446 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலையில் 8-வது ஊதியக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு. 
அவிநாசி அருகே மன வளர்ச்சி பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில், அதிமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் (51) என்பவர் போக்சோவில் கைது.ராஜேந்திரனின் மனைவி சாந்தி அவிநாசி நகராட்சியின் 12வது வார்டு கவுன்சிலராக உள்ளார். புகாரளிக்கக் கூடாது என சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு






தீவிர திருத்தம்.

ஒரு எச்சரிக்கை!

இந்தியாவில் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வதற்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) வெளியிட்ட ஒரு நாள் கழித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த முடிவில் இருந்து தேர்தல் ஆணையம் விலக வேண்டும் என்றும், இந்த முடிவு அந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

“தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக மாற அனுமதிக்கக் கூடாது” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.


மறுபுறம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் செயல்முறை மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்க பா.ஜ.க சதி செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன், இது குறித்துப் பேச நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த முடிவு ஜனநாயகச் செயல்முறைக்கு ஒரு சவால் என்று பினராயி விஜயன் கூறினார். மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைக்கக் கோரிய பிறகும், கேரளாவில் அது குறித்த தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு, அந்த அமைப்பின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


பீகாரில் எஸ்.ஐ.ஆர்-ன் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் நடவடிக்கையைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.


“நீண்ட காலத் தயாரிப்பும் ஆலோசனையும் தேவைப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, மக்களின் விருப்பத்தைப் பலவீனப்படுத்தும் நோக்குடன் அவசரமாக மேற்கொள்ளப்படுவது தெளிவாகிறது. இந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய முடிவுகளில் இருந்து ஆணையம் விலக வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.


கடந்த மாதம், கேரளத் தலைமைத் தேர்தல் அதிகாரி, உள்ளாட்சித் தேர்தல்களைக் காரணம் காட்டி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிறகு, எஸ்.ஐ.ஆர் செயல்முறையை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்தை  வலியுறுத்தியிருந்தார்.


மேலும், கடந்த மாதம் கேரள மாநிலச் சட்டமன்றம் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த எஸ்.ஐ.ஆர் செயல்முறை தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) மறைமுகமாகச் செயல்படுத்தும் நோக்கம் கொண்டது என்ற கடுமையான கவலையை இது எழுப்பியது.


மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'எனது வாக்குச்சாவடி - வெற்றிச் சாவடி' பயிற்சித் திட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய மு.க. ஸ்டாலின், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் "வாக்காளர்களை நீக்குதல் மூலம் வெற்றிபெற" முயற்சிப்பதாகவும், உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு வாக்காளர்களை நீக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.


“மக்களை எதிர்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எங்களுடன் நிற்பவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதுதான் அவர்களின் கணக்கு. ஆனால், தமிழ்நாடு இதை அனுமதிக்காது” என்று அவர் எச்சரித்தார்.


இதே செயல்முறையின் மூலம் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் உரிமையைத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பறித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


வரவிருக்கும் தேர்தலைத் “தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டம்” என்று அழைத்த ஸ்டாலின், மாநிலத்தின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அமைப்பின் மீது "ஆக்கிரமிப்பு" நடப்பதாக எச்சரித்தார்.


“இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி மற்றும் ஆளுநர் பெயரால் அவர்கள் நமக்குச் சிக்கலைக் கொடுக்கிறார்கள். அவர்களைத் தோற்கடிக்கும் பலம் நம்மிடம் மட்டுமே உள்ளது. ஆர்எஸ்எஸ்-சின் சதித்திட்டங்கள் தமிழ்நாட்டில் பலிக்காது” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.


இதற்கிடையே, எஸ்.ஐ.ஆர் செயல்முறை குறித்து விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் புதன்கிழமை அன்று அழைத்துள்ளார்.

சூறாவளி வேட்டையர்?

"சூறாவளி வேட்டைக்காரர்கள்" என்று அழைக்கப்படும் அமெரிக்க விமானப்படை ரிசர்வ் குழுவினர் திங்கள்கிழமை தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கான தரவுகளைச் சேகரிக்க மெலிசா சூறாவளியின் மையப்பகுதி வழியாக பறந்தனர்.

2025-ம் ஆண்டின் உலகின் மிக வலிமையான புயலான - 'மெலிசா' புயலின் கண் பகுதிக்குள் அமெரிக்க விமானப்படை விமானம் திங்கள்கிழமை பறந்தது. தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கு (National Hurricane Center - NHC) முக்கியமான தரவுகளைச் சேகரிப்பதே இதற்கான காரணம்.


தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்குத் தரவுகளைச் சேகரிப்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழுவான "சூறாவளி வேட்டைக்காரர்கள்", திங்கள்கிழமை 'மெலிசா' பயலின் கண் பகுதிக்குள் பறந்து சென்றனர்.


புயலின் கண் பகுதியில் என்ன நடந்தது?

இந்தச் சூறாவளி வேட்டைக்காரர்கள் படமாக்கிய காணொளிகள், விமானம் புயலின் மையப்பகுதி வழியாகப் பிரித்துச் சென்றபோது, "ஸ்டேடியம் எஃபெக்ட்" எனப்படும் அரிய வானிலை நிகழ்வைக் காட்டுகிறது.


இதில், கோபுரம்போன்ற மேகச் சுவர்கள், அமைதியான நீல மையத்தைச் சுற்றி வளைந்து காணப்பட்டன.


விமான ஓட்டி (@FlynonymousWX) எக்ஸ் தளத்தில், “மெலிசாவின் மூன்றாவது சுற்றுப் பயணம். பக்கவாட்டு ஜன்னலில் அல்ட்ரா ஹை ரெஸ் 8K-ல் படப்பிடிப்புக்கு கோப்ரோ (GoPro) கேமரா பயன்படுத்தப்பட்டது” என்று விவரித்துள்ளார்.


கடந்த கால ஆபத்தான பயணங்களை ஒப்பிடுகையில், இந்த விமானப் பயணம் "மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஆனால் ஒப்பீட்டளவில் நேரடியானதாகவும்" இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசிசிப்பியைத் தளமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை ரிசர்வின் 53-வது வானிலை உளவுப் படைப்பிரிவால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள், புயலின் வலிமை, திசை மற்றும் தாக்கத்தை மாதிரியாக்க (model) அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கு மிகவும் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.


மணிக்கு 175 மைல்கள் (282 கிமீ/ம) வேகத்துடன், ஐந்தாம் வகை புயலான 'மெலிசா', 2025-ம் ஆண்டின் உலகின் மிக வலிமையான புயலாக உள்ளது.

ஜமைக்கா: 174 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான புயல்

'மெலிசா' புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜமைக்காவில் கரையைக் கடந்தது.

மணிக்கு அதிக வேகமுள்ள காற்றும், இடைவிடாத மழையும் தீவு முழுவதும் கொட்டித் தீர்த்தது.


தேசிய புயல் எச்சரிக்கை மையம், ஜமைக்காவின் தெற்குக் கடற்கரையில் 13 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும், இதனால் "பேரழிவு மற்றும் உயிருக்கு ஆபத்தான" வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்தது.


பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ் இது குறித்துப் பேசுகையில்,  “இது எங்கள் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் பயங்கரமான புயல்" என்று குறிப்பிட்டார். மேலும்,  “ஐந்தாம் வகைப் புயலை இப்பகுதியில் உள்ள எந்த உள்கட்டமைப்பாலும் தாங்க முடியாது.


இப்போதைய சவால், மீட்புப் பணிகளின் வேகம்தான்” என்றும் எச்சரித்தார்.

இந்தச் புயலால் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “இதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மேத்யூ சமுடா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தினார்.


கியூபா மற்றும் பஹாமாஸ்-க்கு அச்சுறுத்தல்

ஜமைக்காவைச் சூறையாடிய பிறகு, 'மெலிசா' புயல் இப்போது கிழக்குக் கியூபா மற்றும் பஹாமாஸ் நோக்கி வேகமாகச் செல்கிறது.

கியூபா அதிகாரிகள், சாண்டியாகோ டி கியூபா மற்றும் குவாண்டனாமோவில் உள்ள தாழ்வான கடலோரப் பகுதிகளில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.


20 அடி உயரம் வரை வெள்ளப்பெருக்கு மற்றும் அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கரீபியன் முழுவதும், 'மெலிசா' இதுவரை குறைந்தது ஏழு உயிர்களைப் பலிவாங்கியுள்ளது (ஜமைக்காவில் மூன்று, ஹைட்டியில் மூன்று, டொமினிகன் குடியரசில் ஒன்று), மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.


ஹைட்டி அதிகாரிகள் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்ததாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர், இது ஏற்கனவே மோசமான பட்டினி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை